April 01, 2020

பரம்பொருள்-பதிவு-172


            ஜபம்-பதிவு-420
          (பரம்பொருள்-172)

இரண்டாம் நபர்  :
“கடவுளான கிருஷ்ணன்
தவறு செய்தார்
என்று நம்மால்
எப்படி சொல்ல
முடியும்  ;
ஒருவேளை
உண்மையாகவே
இன்று
அமாவாசையாக
இருக்கலாம்
அல்லவா ? “

“ஒரு வேளை
நாம் தான் தவறு
செய்தவர்களாக
இருக்கலாம் அல்லவா“

“கடவுள் எந்த
காலத்திலும் தவறு
செய்ததில்லை;
தவறும்
செய்ய மாட்டார் ;”

“அதனால் பரந்தாமன்
கிருஷ்ணன்
செய்யும் செயலே
சரியான செயலாகத்
தான் இருக்கும்  

“ஆமாம் இன்று
தான் அமாவாசையாக
இருக்கும் “

“நாமும் அமர்ந்து
அமாவாசைக்குரிய
மந்திரங்களைச்
சொல்லி
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்வோமா ? “

முதல் நபர் :
“நீ சொன்னால்
சரியாகத் தான்
இருக்கும்  ;
பரந்தாமன்
கிருஷ்ணன் செய்து
கொண்டிருக்கும்
செயல் சரியான
செயலாகத் தான்
இருக்கும் ;
ஆமாம் இன்று
அமாவாசையாகத்
தான் இருக்கும் ; “

“நானும் ஒத்துக்
கொள்கிறேன் ;
இருவரும்
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்வோம் ;”

 (என்று சொல்லிக்
கொண்டே - அந்த
இடத்தில் அமர்ந்து
மந்திரங்கள்
சொல்லத் தொடங்கினர்

கிருஷ்ணன்
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
பூஜைகளையும் ;
நடத்த வேண்டிய
ஹோமங்களையும் ;
சொல்ல வேண்டிய
மந்திரங்களையும் ;
அமர்ந்து சொல்லிக்
கொண்டிருப்பதைக்
கண்டு - அந்த
வழியாக சென்று
கொண்டிருந்த
அந்த ஊரைச்
சேர்ந்தவர்கள் ,
வழிப்போக்கர்கள்
அனைவரும் அமர்ந்து
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்யத் தொடங்கினர்

அதனால் அந்த இடம்
முழுவதும் மக்களின்
எண்ணிக்கையால்
கூட்டம் கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரித்துக்
கொண்டே சென்றது

கடவுளான
கிருஷ்ணன் செய்தால்
சரியாகத் தான்
இருக்கும் என்று
நினைத்துக் கொண்டிருந்த
மக்கள் அனைவரும்
அந்த இடத்தில் அமர்ந்து
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்யத் தொடங்கியதால்
மக்கள் கூட்டத்தால்
அங்கு ஓடிக்
கொண்டிருந்த
ஆற்று நீரை மறைக்கும்
அளவிற்கு - அந்த
இடத்தில் மக்கள்
கூட்டம் இருந்தது

அது மட்டுமல்ல
இந்த செய்தி
ஊர் முழுவதும்
பரவியதால்
மக்கள் அனைவரும்
தாங்கள் வசிக்கும்
இடத்திலும் ;
தாங்கள் வசிக்கும்
இடத்திற்கு அருகில்
உள்ள இடத்திலும் அமர்ந்து
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்து கொண்டிருந்தனர்

ஊர் முழுவதும்
சதுர்த்தசி தினத்தன்று
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களும் மக்களால்
செய்யப்பட்டுக்
கொண்டிருந்தது

சதுர்த்தசி திதியன்று
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
கிருஷ்ணனின்
வழிகாட்டுதலால்
மக்கள் அனைவரும்
செய்து கொண்டிருப்பதைக்
கண்டனர்
சூரிய பகவானும்
சந்திர பகவானும்

சூரிய பகவானும்
சந்திர பகவானும்
தங்களுக்குள்
பேசிக் கொண்டனர் )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு--171


             ஜபம்-பதிவு-419
           (பரம்பொருள்-171)

(சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றுவதற்கு
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
சதுர்த்தசி திதி
அன்று செய்ய
வேண்டும் - என்று
புரோகிதரிடம்
கிருஷ்ணன்
ஏற்கனவே சொல்லி
வைத்திருந்ததன்
அடிப்படையில்
ஓடிக் கொண்டிருக்கும்
ஆற்றின் கரையில்
புரோகிதர் உட்பட
பல பேர்
அமர்ந்து கொண்டு
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்வதற்கு
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
புரோகிதர்
செய்து வைத்திருந்தார்; ” )

கிருஷ்ணன்  :
“நான் சொன்னபடி
அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து
வைத்திருக்கிறீர்களா ?”

புரோகிதர்  :
“நீங்கள் என்ன
செய்ய வேண்டும்
என்று என்னிடம்
சொன்னீர்களோ - அதை
அப்படியே செய்து
வைத்திருக்கிறேன்”

கிருஷ்ணன்  :
“என்ன செய்து
வைத்திருக்கிறீர்கள்]
என்பதை நான்
தெரிந்து கொள்ளலாமா ? “

புரோகிதர்  :
“கண்டிப்பாக”

“இன்று நடைபெற்றுக்
கொண்டிருக்கும்
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றுவதற்கு
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
நீங்கள்
சொல்லியவாறே
செய்து
வைத்திருக்கிறேன் “

“அமாவாசையன்று
செய்ய வேண்டிய
பூஜைகளையும் ;
நடத்த வேண்டிய
ஹோமங்களையும் ;
சொல்ல வேண்டிய
மந்திரங்களையும் ;
சதுர்த்தசி திதியான
இன்று செய்வதற்குத்
தேவையான
அனைத்து
புரோகிதர்களையும்
அழைத்து
வந்திருக்கிறேன் “

“புரோகிதர்கள்
அனைவரும்
அமாவாசையன்று
செய்யக்கூடிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்வதற்கு ஏற்ற
வகையில்
அனைத்து
ஏற்பாடுகளையும்
சாஸ்திர
முறைப்படி செய்து
வைத்திருக்கிறார்கள் “

“உங்கள்
உத்தரவிற்காகத் தான்
நாங்கள் காத்துக்
கொண்டிருக்கிறோம் “

“நீங்கள் சொன்னால்
ஆரம்பித்து விடலாம் “

கிருஷ்ணன் :
“ஆரம்பிக்கலாம்”

(என்று சொல்லி
விட்டு கிருஷ்ணன்
அமர்ந்து
அமாவாசையன்று
சொல்லக் கூடிய
மந்திரங்களைச்
சொல்ல ஆரம்பித்தார்

(கிருஷ்ணன்
அமர்ந்து மந்திரம்
சொல்லிக்
கொண்டிருந்ததை
அந்த வழியாக
சென்று கொண்டிருந்த
இரண்டு நபர்கள்
பார்த்து விட்டு
தங்களுக்குள்
பேசிக் கொண்டனர் )

முதல் நபர்  :
“இன்று அமாவாசையா?”

இரண்டாம் நபர் :
“இல்லை இன்று
சதுர்த்தசி திதி “

முதல் நபர்  :
“பிறகு எதற்கு
பரந்தாமன்
கிருஷ்ணன்
அமாவாசைக்குரிய
மந்திரங்களை
சொல்லிக் கொண்டு
அமாவாசைக்குரிய
பூஜைகளைச்
செய்து
கொண்டிருக்கிறார்”

இரண்டாம் நபர் :
“தெரியவில்லையே”

முதல் நபர் :
“கடவுளே தவறு
செய்யலாமா ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-04-2020
//////////////////////////////////////////