May 27, 2022

ஜபம்-பதிவு-768 (சாவேயில்லாத சிகண்டி-102)

 ஜபம்-பதிவு-768

(சாவேயில்லாத

சிகண்டி-102)

 

ஓடிவந்த

துருபதன்

அம்பையின்

பார்வையின்

தாக்கத்தைத்

தாங்க

முடியாமல்

அப்படியே

சிலை போல

அந்த

இடத்திலேயே

நின்று

விட்டான்

 

அம்பை நடந்து

செல்லத்

தொடங்கினாள்

 

அம்பை

நடந்து செல்லும்

போது

அவள் கால் பட்டு

புற்கள் வாடின

 

செடிகள்

கருகின

 

மரங்கள்

அனைத்தும்

வேகமாக வீசின

 

மேகம்

இருட்டத்

தொடங்கியது

 

புழுதிக்

காற்று

பரந்தது

 

வெப்பக் காற்று

வீசியது

 

சுழற்சிக்

காற்று

சுழன்று

அடித்துக்

கொண்டு

இருந்தது

 

அந்த

சுழற்சிக்

காற்றுக்கு

நடுவே

அம்பை

நடந்து

சென்று

கொண்டிருந்தாள்

 

அரண்மனைக்

கதவில்

அம்பை

மாட்டி விட்டுச்

சென்ற

மாலையை

யாரும்

தொடக்கூடாது

என்று காவல்

போட்டிருந்தான்

துருபதன்

 

அந்த

வழியாக

செல்பவர்கள்

அந்த

மாலையை

அதிசயமாகப்

பார்த்த வண்ணம்

சென்று

கொண்டிருந்தார்கள்

 

நாளாவட்டத்தில்

அந்த

மாலையை

அனைவரும்

மறந்து

விட்டார்கள்

 

காவலும்

விலக்கிக்

கொள்ளப் பட்டது

 

அம்பை

மாட்டி விட்டு

சென்ற

அந்த

மாலையில்

அம்பையின்

இதயம் துடித்துக்

கொண்டிருந்ததை

யாரும்

அறியவில்லை

 

இப்போது

அம்பையின்

இதயம்

எங்கே

துடித்துக் கொண்டு

இருக்கிறது

தெரியுமா

 

அறிந்து

கொள்ள

வாருங்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-767 (சாவேயில்லாத சிகண்டி-101)

 ஜபம்-பதிவு-767

(சாவேயில்லாத

சிகண்டி-101)

 

உதவி வேண்டும்

என்று யாரிடம்

சென்று நின்றாலும்

அசிங்கப்பட

வேண்டும்

என்பதைத்

தெரிந்து

கொண்டேன்

 

இனி யாரிடமும்

இந்த அம்பை

கை ஏந்தப்

போவதில்லை

உதவி கேட்டு

நிற்கப்

போவதில்லை

 

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்று யாரிடமும்

சென்று பிச்சை

எடுக்கப் போவதில்லை

 

பீஷ்மரை

நானே கொல்கிறேன்

 

என்னுடைய

கைகளாலேயே

பீஷ்மரைக்

கொல்கிறேன்

 

ஒரு பெண்ணின்

கண்ணீரை

அலட்சியமாக

நினைத்த துருபதா

 

ஒரு பெண்ணின்

கண்ணீருக்காக

படை எடுக்க

மாட்டேன் என்று

சொன்ன துருபதா

 

உன் குடும்பத்தில்

ஒரு பெண்

வடிக்கப்போகும்

கண்ணீருக்காக

நீ படை

எடுக்கும் போது

உன்

குடும்பத்திற்காகப்

படை எடுத்தாய்

என்று

இந்த உலகமே

உன்னை

கேவலமாகப்

பேசப் போகிறது

இந்த உலகம்

உன்னை

சுயநலக்காரன்

என்று எள்ளி

நகையாடப் போகிறது

 

நீ அசிங்கப்பட்டு

அவமானப்பட்டு

தலைகுனியும்

காலம்

வரப்போகிறது

துருபதா

 

நான் செல்கிறேன்

 

இனி நான்

என்ன செய்யப்

போகிறேன் என்பதை

நீ மட்டுமல்ல

இந்த உலகமும்

பார்க்கப் போகிறது

 

பார் துருபதா

பார்

 

இனி நடக்கப்

போவதைப் பார்

 

(என்று சொல்லி

விட்டு ஆவேசத்துடன்

அரண்மனை

வாசல் வந்த

அம்பை

அந்த மாலையை

அரண்மனையின்

கதவில் மாட்டி

விட்டு கோபத்துடன்

அந்த இடத்தை

விட்டு விலகி

நடந்து சென்று

கொண்டிருந்தாள்

 

அவள் பின்னால்

ஓடிவந்த துருபதன்

 

"நில் அம்பையே

 

அந்த மாலையை

எடுத்துக்

கொண்டு செல்

 

எனக்கும்

பீஷ்மருக்கும் இடையே

பிரச்சினையை

ஏற்படுத்தாதே

 

என்னுடைய

நாட்டிற்கும்

அஸ்தினாபுரத்திற்கும்

இடையே

பகையை

உண்டாக்காதே

 

மாலையை

எடுத்துக் கொண்டு

செல்

அம்பையே

 

மாலையை

எடுத்துக் கொண்டு

செல்"

 

என்று

கத்திக் கொண்டே

வந்த

துருபதனை

திரும்பி நின்று

அம்பை

கோபத்துடன்

பார்த்தாள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-766 (சாவேயில்லாத சிகண்டி-100)

 ஜபம்-பதிவு-766

(சாவேயில்லாத

சிகண்டி-100)

 

துருபதன் :

எந்த இடத்தில்

சுயநலக் காரனாக

இருக்க வேண்டுமோ

அந்த இடத்தில்

சுயநலக் காரனாக

இருந்து தானே

ஆக வேண்டும்

 

அம்பை :

பொது வெளியில்

வீரர்களாக

தங்களை

அடையாளப் படுத்திக்

கொள்பவர்கள்

 

பிறருக்கு உதவி

செய்பவர்களாக

நடித்துக்

கொண்டிருப்பவர்கள்

 

அறிவாளிகளாக

தங்களை

வெளிப்படுத்திக்

கொள்பவர்கள்

 

சமுதாயத்தை

தாங்கள் தான்

காப்பாற்றுவதாக

பொய் சொல்லி

திரிந்து

கொண்டிருப்பவர்கள்

 

புனிதர் வேடம்

போட்டுக் கொண்டு

நயவஞ்சக நரிகளாக

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

 

அனுபவமே

இல்லாமல் கருத்து

சொல்பவர்கள்

 

ஆகிய

அனைவருமே

மக்கள் மத்தியில்

பொதுநலவாதியாக

நடித்துக் கொண்டு

உள்ளுக்குள்

தனது குடும்பம்

தனது உறவினர்கள்

என்று

சுயநலவாதியாகத்

தான் வாழ்ந்து

கொண்டு

இருக்கிறார்கள்

என்பதற்கு

நீயே சாட்சி

துருபதா

 

ஆமாம்

நீ ஒரு

சுயநலவாதி

துருபதா

சுயநலவாதி

 

நாம் கஷ்டப்படும்

போது இன்னொரு

மனிதனிடம் சென்று

உதவி

கேட்கக் கூடாது

 

அப்படி உதவி

கேட்டால் எந்த

மனிதனும் உதவி

செய்ய மாட்டான்

நமக்கு உதவி

வேண்டும் என்றால்

கடவுளிடம் சென்று

உதவி கேட்க

வேண்டும்

என்பதற்காகத் தானே

இந்த உலகத்தில்

கோயில்களையே

கட்டி வைத்து

இருக்கிறார்கள்

 

கோயில்கள் இந்த

உலகத்தில் அதிக

அளவில் கட்டி

வைக்கப்பட்டிருப்பதற்குக்

காரணம்

கஷ்டப்படும்

மனிதனுக்கு

இன்னொரு மனிதன்

உதவி செய்ய

மாட்டான் என்ற

காரணத்தினால்

தானே

 

உன்னுடைய நாட்டில்

அதிக அளவில்

கோயில் இருக்கும்

போதே

நான் உணர்ந்து

இருக்க வேண்டும்

கஷ்டப்படும் ஒரு

மனிதனுக்கு

இன்னொரு மனிதன்

உதவி செய்யாத

நாடு இது என்று

 

தவறு

செய்து விட்டேன்

உன்னிடம் உதவி

கேட்டு வந்து

விட்டேன்

 

இப்போது

தெரிந்து கொண்டேன்

உதவி கேட்டு

யாரிடமும்

செல்லக் கூடாது

என்று

தெரிந்து கொண்டேன்

 

உதவி கேட்டு

யாரிடமும் சென்று

நிற்கக் கூடாது

என்று

தெரிந்து கொண்டேன்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-765 (சாவேயில்லாத சிகண்டி-99)

 ஜபம்-பதிவு-765

(சாவேயில்லாத

சிகண்டி-99)

 

துருபதன் :

பீஷ்மருடன்

போரிட்டால் அழிவு

நிச்சயம் என்று

தெரிந்த பிறகும்

பீஷ்மருடன்

எப்படி

போரிட முடியும்

 

அம்பை :

பயப்படுகிறாயா

 

துருபதன் :

எந்த விஷயத்திற்கு

பயப்பட வேண்டுமோ

அந்த விஷயத்திற்கு

பயந்து தானே

ஆக வேண்டும்

 

அம்பை :

பயப்படாதே

துருபதா

இந்த மாலையை

போட்டுக் கொண்டு

பீஷ்மரை

எதிர்த்து போரிடு

 

இந்த மாலையை

போட்டுக் கொண்டு

பீஷ்மரை எதிர்த்துப்

போரிட்டால்

பீஷ்மரைக்

கொல்லலாம்

 

துருபதன் :

என்ன

மாலை இது

 

அம்பை :

தாமரை மாலை

 

துருபதன் :

யார் கொடுத்தது

 

அம்பை :

முருகப் பெருமான்

கொடுத்தது

 

துருபதன் :

உங்களுக்கு

எப்படி கிடைத்தது

 

அம்பை :

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்று

நான் தவம்

செய்த போது

முருகப் பெருமானே

நேரில் வந்து

என்னிடம்

கொடுத்தது

 

துருபதன் :

நம்ப முடியவில்லை

 

அம்பை :

எதை நம்ப

முடியவில்லை

கடவுளையா

அல்லது

என்னுடைய

வார்த்தைகளையா

 

துருபதன் :

ஒருவரைக்

கொல்வதற்காக

கடவுளே நேரில்

வந்து கொடுத்தார்

என்பதைத் தான்

என்னால் நம்ப

முடியவில்லை

 

அம்பை :

என்னுடைய

கோரிக்கை சரியானது

என்று

தெரிந்ததால்

முருகப் பெருமானே

நேரில் வந்தார்

 

துருபதன் :

உண்மை என்று

எப்படி நம்புவது

 

அம்பை :

இந்த மாலையை

அணிந்து கொண்டு

பீஷ்மரை எதிர்த்து

போரிடுங்கள்

பீஷ்மரைக்

கொல்லும் போது

நான் சொன்னது

உண்மை என்பதைத்

தெரிந்து கொள்வீர்கள்

 

துருபதன் :

சோதனை செய்து

பார்க்க நான்

விரும்பவில்லை

 

அம்பை :

ஒரு பெண்ணின்

கண்ணீரைக்

கண்டுமா

உன் மனம்

இரக்கம்

கொள்ளவில்லை

 

துருபதன் :

ஒரு பெண்ணின்

கண்ணீருக்காக நான்

வேண்டுமானாலும்

அழியலாம்

 

என்னுடைய

குடும்பம்

என்னுடைய

உறவினர்கள்

என்னுடைய நாடு

என்னுடைய மக்கள்

ஏன் அழிய

வேண்டும்

 

அம்பை :

சுயநலக் காரனாக

இருக்கிறாய்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-764 (சாவேயில்லாத சிகண்டி-98)

 ஜபம்-பதிவு-764

(சாவேயில்லாத

சிகண்டி-98)

 

அம்பை :

நல்ல காலம்

நடந்து

கொண்டிருப்பவரை

நான் எப்படி

கண்டு பிடிப்பது

 

முருகன் :

இந்த மாலையை

யார் அணிந்து

கொள்கிறாரோ

அவருக்கே நல்ல

காலம் நடந்து

கொண்டிருக்கிறது

என்று அர்த்தம்

 

அவரே பீஷ்மரை

எதிர்த்து போரிடுவார்

என்று அர்த்தம்

 

அவரே பீஷ்மரைக்

கொல்வார்

என்று அர்த்தம்

 

பெற்றுக் கொள்

அம்பையே

 

(முருகப்

பெருமானிடமிருந்து

வாடாத தாமரை

மாலையை

அம்பை

பெற்றுக் கொள்கிறாள்

 

அந்த தாமரை

மாலையை கைகளில்

வாங்கிக் கொள்கிறாள்

கண்களில்

ஒற்றிக் கொள்கிறாள்

 

அவள் கண்களில்

இருந்து

வழிந்த கண்ணீர்

அந்த மாலையை

நனைத்தது

 

முருகப் பெருமான்

மறைந்த பிறகு

நாட்டுக்குள்

வந்த அம்பை

நடந்த விஷயத்தை

இந்த உலகத்தில்

உள்ள அரசர்கள்

ஷத்திரியர்கள்

வீரர்கள்

ஆகியோரை

நேரில் சந்தித்து

சொன்னாள்

 

யாரும் பீஷ்மருக்கு

எதிராக

போர் செய்ய

முடியாது என்று

மறுத்து விட்டார்கள்

 

கடைசியாக

அம்பை

பாஞ்சால நாட்டு

மன்னன் துருபதனை

நேரில் சந்திக்க

அவன்

அரண்மனை சென்றாள்

 

அரண்மனைக்

காவலர்கள் அனுமதி

இல்லாமல்

உள்ளே நுழைய

முயன்ற

அம்பையை

தடுத்து

நிறுத்திய போது

அம்பை

அரண்மனைக்

காவலர்களை

விலக்கி விட்டு

அரண்மனைக்குள்

சென்றாள்

 

இக்காட்சியைக்

கண்ட துருபதன்

அம்பையிடம் பேசத்

தொடங்கினான்

 

துருபதன் :

நீங்கள் இவ்வளவு

கோபத்துடன் வர

வேண்டிய

அவசியம் இல்லை

 

இன்னும் உங்கள்

கோபம்

தணியவில்லையா

 

அம்பை :

பீஷ்மரைக்

கொல்லாமல்

என்னுடைய கோபம்

தணியாது

 

துருபதன் :

உறவுடன்

வருபவர்களை

உணவு கொடுத்து

உபசரிப்பது தான்

பாஞ்சால நாட்டின்

பழக்கம்

 

அம்பை :

நான் உணவு

உண்டு செல்ல

வரவில்லை

 

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற கோரிக்கையை

வைக்க

வந்திருக்கிறேன்

 

துருபதன் :

உங்களுடைய

கோரிக்கையை

என்னால்

ஏற்றுக் கொள்ள

முடியாது

 

அம்பை :

ஏன் ஏற்றுக்

கொள்ள முடியாது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////