September 08, 2018

திருக்குறள்-பதிவு-16


                      திருக்குறள்-பதிவு-16

விவாதத்தில் கலந்து
கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொண்ட
சார்லஸ் டார்வினின்
ஆதரவாளர்களுக்கு
டார்வின் பேசிய
வார்த்தைகள் இது தான்

என் மூலமாக என்ன
வெளிப்பட வேண்டுமோ
அது வெளிப்பட்டு விட்டது
நான் என்ன கண்டு
பிடிக்க வேண்டுமோ
அதை கண்டு பிடித்து
இந்த உலகத்திற்கு
அளித்து விட்டேன்
அத்துடன் என் கடமை
முடிந்து விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இந்த சமுதாயத்தைச்
சார்ந்தது என்னைச்
சார்ந்தது கிடையாது

என்னுடைய கண்டுபிடிப்பில்
உண்மை இருக்கிறது
என்று அறிபவர்கள்
என்னுடைய கண்டுபிடிப்பை
எற்றுக் கொள்ளட்டும்
என்னுடைய கண்டுபிடிப்பில்
உண்மை இல்லை
என்று வெறுப்பவர்கள்
எதிர்க்கட்டும்
எதிர்ப்பவர்களுக்காக
நான் விவாதம் செய்து
என்னுடைய காலத்தை
வீணாக்க நான்
விரும்பவில்லை
நான் இன்னும்
கண்டுபிடிக்க வேண்டியது  
நிறைய இருக்கிறது
ஆகவே, என்னை ஆராய்ச்சி
செய்ய விடுங்கள்
விவாதத்திற்கு என்னை
அழைக்க வேண்டாம் என்றார்
சார்லஸ் டார்வின்

இந்தப் பிரபஞ்சம்
விசித்திரம் நிறைந்தது
ஒரு விஷயத்தை
இந்த சமுதாயத்திற்கு
அளிக்க வேண்டுமானால்
அந்த விஷயத்தை
அளிக்கக் கூடிய
தகுதியான  நபர்
கிடைக்கும் வரைக்கும்
இந்த பிரபஞ்சம்
காத்திருக்கும் அவர்
வந்தவுடன் அந்த
விஷயத்தை அந்த
நபர் மூலமாக
காலம் பார்த்து
வெளிப்படுத்தும் உலகத்தில்
கண்டுபிடிக்கப்பட்டு
அளிக்கப்பட்டு வந்த
விஷயங்கள் அனைத்தும்
இப்படித்தான் இந்த
மக்களுக்கு வழங்கப்பட்டது
அதில் ஒன்றுதான்
சார்லஸ் டார்வினின்
பரிணாமக் கோட்பாடு

சார்லஸ் டார்வின்
விவாதத்திற்கு வராத
காரணத்தினால் விழா
நாயகன் டார்வின்
இல்லாமலேயே விவாதம்
தொடங்க ஆயத்தமானது

ஆண்டவன் தான் இந்த
உலகத்தைப் படைத்தான்
என்று பேசுவதற்காக
கிறிஸ்தவர்களின் சார்பாக
பிஷப் வில்பர்போர்ஸ்
சிலுவை ஏந்திய கரங்களுடன்
பலத்த ஆரவாரங்களிடையே
தன்னுடைய பேச்சை
துவங்கினார்

மதிப்பிற்குரிய மகா ஜனங்களே
பரமபிதாவின் பெயரால்
நான் உங்களை
ஒன்று கேட்கிறேன்
சாத்தானின் அவதாரமான
சார்லஸ் டார்வின்
நீங்கள் எல்லாம்
குரங்கிலிருந்து
தோன்றியவர்கள் என்று
கொஞ்சமும் நாக்கு
கூசாமல் கூறுகிறார்.
நீங்களே கூறுங்கள்
உங்களுடைய பாட்டன்களும்
முப்பாட்டன்களும்
குரங்குகளா
உங்கள் பாட்டன் குரங்கா
உங்கள் பாட்டி குரங்கா
யாரை குரங்கு என்று
நீங்கள் தீர்மானிக்கப்
போகிறீர்கள்

மற்றொரு கேள்வியையும்
நான் உங்களிடம் கேட்கிறேன்
டார்வின் தன்னுடைய
அபத்தமான தத்துவத்தில்
கூறியிருக்கிறார்
புழு பூச்சியாகி,
பூச்சி வண்டாகி,
வண்டு பறவையாகி,
பறவை பிராணியாகி,
பிராணி குரங்காகி,
குரங்கு மனிதனானான் என்று
இந்தப் பரிணாமப்படி
பார்த்தால்
குரங்கிலிருந்து
தோன்றிய மனிதன்
இத்தனை லட்ச
ஆண்டுகளுக்குப்  பின்னும்
எந்தவித பரிணாம
வளர்ச்சியும் கொள்ளாமல்
அப்படியே தானே
இருக்கிறான்
ஏன் அவனுக்கு இன்னும்
ஒரு கொம்போ,
ஒரு இறக்கையோ,
ஒரு வாலோ அல்லது
வேறு எதுவுமே
உண்டாகவில்லை

குரங்கின் பரிணாமம்
மனிதன் என்றால்
மனிதனின் பரிணாமம்
என்ன என்று டார்வின்
தன்னுடைய தத்துவத்தில்
என்ன கூறியிருக்கிறார்
பரிணாமம் என்றால்
அதற்கு ஒரு இறுதி
முடிவு இருக்க முடியாதே
இதைச் சிந்தித்து பார்க்காமல்
நம்மைப் படைத்த
ஆண்டவனை ஏளனம்
செய்வது என்பது
எவ்வளவு பெரிய பாவம்
என்பதை நீங்கள்
உணரவில்லையா
இந்த எனது கேள்விக்கு
டார்வினின் ஆதரவாளர்கள்
என்ன பதில் சொல்லப்
போகிறார்கள்
என்னுடைய கேள்விக்கு
ஏற்ற பதிலைச்
சொல்லாமல் போனால்
இங்கே குழுமியிருக்கும்
மக்கள் மத்தியில்
தங்கள் தலைவன்
டார்வின் எழுதிய
புத்தகத்தை கிழித்தெறிய
முற்படுவார்களா என்று
சரமாரியாக கேள்வி
கேட்டார்

இதற்கு டார்வின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்காரும்
என்ன பதில் சொல்ல
போகிறார்கள் என்று
அனைவரும் காத்துக்
கொண்டிருந்தனர்

--------- இன்னும் வரும்
--------- 08-09-2018
/////////////////////////////////////