June 22, 2019

பரம்பொருள்-பதிவு-29


                      பரம்பொருள்-பதிவு-29

" இந்த உலகத்தில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களையும்
எடுத்துக் கொண்டால்
சிவலிங்கம் தவிர அனைத்து
கடவுள் சிலைகளும்
அருஉருவ நிலையை
வெளிப்படுத்தும் வகையில்
அமைந்திருக்கிறது ;
சிவலிங்கம் மட்டுமே
அருவ நிலையை
வெளிப்படுத்தும் வகையில்
அமைந்திருக்கிறது. ; "

" இந்த உலகம் முழுவதும்
அருவ நிலையில் நிறைந்து
இருக்கக்கூடிய இறைவனுடன்
தொடர்பு கொண்டு ;
தங்களுக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு  
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
முடியாதவர்களும்
இறைவனுடன் தொடர்பு
கொண்டு ; - தங்களுக்கு
தேவையானதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்துடன் ;
உருவாக்கப்பட்டவைகள் தான்
இந்துமதக் கோயில்கள், " 

" இத்தகைய சிறப்புமிக்க
இந்துமதக் கோயில்களில்
செதுக்கி வைக்கப்பட்ட
கடவுள் சிலைகள் அருஉருவ
நிலையில் இருக்கின்றன ;
அதாவது அருவ நிலையையும் ,
உருவ நிலையையும் கொண்டு
பக்தர்களுக்கு அருள்
வழங்கிக் கொண்டிருக்கும்
செயலை இறைவன்
செய்து கொண்டிருக்கிறான் "

" உயிருள்ள கல்லைத்
தேர்ந்தெடுத்து - ஆகம
சாஸ்திர முறைப்படி  
கடவுள் சிலையாக
செதுக்குகிறார்கள்  
செதுக்கப்பட்ட
கடவுள் சிலையானது
உருவ நிலையை அடைகிறது ;
உருவ நிலையை அடைந்த
கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டையின்
மூலம் உயிரூட்டப்படுகிறது ;'"

" இந்த பிரபஞ்சம் முழுவதும்
அருவ நிலையில் நிறைந்து
இருக்கக்கூடிய இறைவனை ;
மனம், வாக்கு ஆகியவற்றிற்கு
எட்டாத இறைவனை ;
எல்லை என்ற ஒன்று
இல்லாத இறைவனை ;
பிறப்பு , இறப்பு அற்றவனை ;
ஆதி , அந்தம் இல்லாத
அருட்பெருஞ்ஜோதியை ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
உருவமுள்ள சிலைக்குள்
இறக்கி கடவுள் சக்தியை
இயங்க வைப்பதற்கான
செயல் செய்யப்படுகிறது "

" இத்தகைய செயல்களால்
உருவமுள்ள கடவுள் சிலைக்குள்
உருவமற்ற இறைவன் வாசம்
செய்கிறான் - இதனால்
கடவுள் சிலையானது
உருவமும் அருவமும்
நிறைந்து முழுமையடைந்த
கடவுள் சிலையாகிறது
அதாவது
கடவுள் சிலையானது
உருவ நிலையையும்
அருவ நிலையையும் கொண்டு
பக்தர்களுக்கு அருள் வழங்கும்
மிகப்பெரிய செயலைச்
செய்து கொண்டிருக்கிறது "

" இறைவன் இந்த உலகத்தில்
உள்ள ஒவ்வொரு அணுவிலும்
நீக்கமற நிறைந்திருந்து ;
அருவ நிலையில் இந்த
உலகத்தை தன்னுடைய
ஆளுகையின்கீழ் வைத்துக்
கொண்டு எப்படி வழிநடத்திக்
கொண்டு இருக்கிறானோ ?
அந்த நிலையிலேயே
உருவமுள்ள
கடவுள் சிலைக்குள்
உருவமற்ற நிலையில்
இருந்து கொண்டு ;
அருஉருவ நிலையில்
இறைவன் வெளிப்பட்டு
பக்தர்களுக்கு அருள்
வழங்கிக் கொண்டிருக்கிறான்"

"மனித இனம் நாகரிகத்தில்
வளர்ச்சி அடைந்ததற்கு
முக்கியக் காரணம்
அறிவியல் தான் ;
அறிவியல் இன்றி இந்த
உலகத்தில் உள்ள எந்த
ஒரு விஷயமும் நடைபெறாது ;
இன்று உலகம் இயங்கிக்
கொண்டிருப்பதே அறிவியலை
மையமாக வைத்துத்தான் ;
அறிவியல் தான் சிறந்தது ;
அறிவியல் தான் உயர்ந்தது ;
என்று அறிவியலை போற்றிப்
புகழ்பவர்கள் - அனைவரையும்
அழைத்துக் கொள்ளுங்கள் "

" உலகத்தில் உள்ள தலை
சிறந்த அறிவியலறிஞர்கள்
மற்றும் அறிவியலறிஞர்கள்
அனைவரையும்
அழைத்துக் கொள்ளுங்கள் "

பசிபிக் பெருங்கடலை ஒரு
குடுவைக்குள் அடைக்கச்
சொல்லுங்கள் அவர்களால்
அடைக்க முடியாது
ஒரு சாதாரண கடலையே
அறிவியலால் அடைக்க
முடியவில்லை என்றால்
அருவமற்ற இறைவனை  ஒரு
உருவத்திற்குள் அறிவியலால்
எப்படி அடைக்க முடியும்,

" இந்த உலகம் முழுவதும்
நிறைந்து இருக்கக் கூடிய
இறைவனை ;
எல்லையில்லாதவனை ;
உருவமற்றவனை ;
வாக்கு மனத்திற்கு
எட்டாதவனை ;
ஒரு உருவம் உள்ள
கடவுள் சிலைக்குள்
வாசம் செய்யும்படியான
செயல்களைச் செய்து வைத்து ;
அருஉருவ வடிவில் இறைவனை
கடவுள் சிலையில் திகழும்படி
செயல்களைச் செய்து வைத்து ;
தன்னை நம்பிய பக்தர்களுக்கு
அருள் வழங்கும்படியான
செயல்களைச் செய்து வைத்து ;
அதுவும் பல்லாயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு முன்பாகவே
மெய்ஞ்ஞானத்தின் மூலம்
உண்மையினை உணர்ந்து
இத்தகைய உயர்ந்த செயலைச்
செய்து வைத்திருக்கும் - நம்
முன்னோர்களின் அறிவுத்
திறனை அறிவியலோடு
ஒப்பிடும்போது - அறிவியல்
நம் முன்னோர்களின்
கால் தூசுக்கு சமமாக
இருந்தது விளங்கும்

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 22-06-2019
//////////////////////////////////////////////////////////