March 06, 2022

ஜபம்-பதிவு-712 (சாவேயில்லாத சிகண்டி-46)

 ஜபம்-பதிவு-712

(சாவேயில்லாத

சிகண்டி-46)

 

உடலின் வலி

மனதின் வலி

ஆகிய

இரண்டையும்

ஒன்றாக

அனுபவித்து

கொஞ்சம்

கொஞ்சமாகத் தான்

நீ இறப்பாய்

 

உன் கண்

முன்னால்

அஸ்தினாபுரத்தின்

வாரிசுகள்

ஒருவொருக்கொருவர்

அடித்துக் கொண்டு

இறப்பதை

தடுக்க முடியாமல்

பார்த்து

விட்டுத் தான்

இறக்கப்

போகிறாய்

 

அஸ்தினாபுரத்தின்

அழிவை

அஸ்தினாபுரத்தின்

மக்களின்

அழிவை

அஸ்தினாபுரத்தின்

வாரிசுகளின்

அழிவை

உன்னுடைய

கண்களால்

பார்த்து

விட்டு தான்

இறக்கப்

போகிறாய்

 

நீ பெற்ற

வரமே

உனக்கு

சாபமாக

மாறப்போகிறது

பீஷ்மா

இன்று முதல்

உன்னுடைய

அழிவு

ஆரம்பமாகப்

போகிறது

 

இந்த அவையில்

உன்னுடைய

இறப்பு

குறிக்கப்பட்டு

விட்டது

 

அம்பையின்

அம்புகளால்

இறப்பதற்கு

தயாராக இரு

பீஷ்மா

 

தயாராக இரு

 

பீஷ்மா

உன்னுடைய

சாவு என் கையில்

என்னுடைய

கையில்

 

(என்று

ஆவேசமாகப்

பேசிவிட்டு

தலைவிரி

கோலத்துடன்

அந்த அவையை

விட்டு

வெளியேறினாள்

அம்பை)

 

(பதினெட்டு நாள்

நடந்த

குருஷேத்திரப் போரில்

பத்தாம்

நாளில்

யாரராலும்

அழிக்க

முடியாத

பீஷ்மரை

சிகண்டியாக

மாறிய அம்பை

தன்னுடைய

அம்புகளால்

பீஷ்மரின்

நெஞ்சை

பிளந்தாள்

 

அம்பை

சிகண்டியாக

எப்படி

மாறினாள்

என்பதைத்

தெரிந்து

கொள்ள

அம்பையைப்

பின்

தொடருவோம்)

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-711 (சாவேயில்லாத சிகண்டி-45)

 ஜபம்-பதிவு-711

(சாவேயில்லாத

சிகண்டி-45)

 

பிரம்மச்சாரியாக

இருந்தால்

அனைத்தையும்

துறந்தவனாக

இருக்க வேண்டும்

ஆனால் நீ

அனைத்தையும்

அனுபவித்துக்

கொண்டிருப்பவனாக

இருக்கிறாய்

அப்படி

இருக்கும் போது

உன்னை எப்படி

பிரம்மச்சாரியாக

ஏற்றுக்

கொள்ள முடியும்

 

நியாயம் கேட்டு

போராடிக்

கொண்டிருக்கும்

இளவரசியாக

இருந்த எனக்கே

நியாயம்

கிடைக்கவில்லை

என்றால்

இந்த உலகத்தில்

உள்ள ஒரு

சாதாரண பெண்ணுக்கு

அநீதி

இழைக்கப்பட்டால்

எப்படி நியாயம்

கிடைக்கும்

 

பணம்

பதவி

அதிகாரம்

ஆகியவற்றைக்

கொண்டிருப்பவர்கள்

எப்படி நியாயம்

வழங்குவார்கள்

 

இளவரசியாய்

இருந்த நான்

யாரும் இல்லாத

அனாதையாக

இப்படி நிற்பதற்கும்

நிர்க்கதியாக

நிற்பதற்கும்

வாழ்விழந்து

நிற்பதற்கும்

காரணமான பீஷ்மனை

நான் சும்மா

விடப்போவதில்லை

 

நான் சபதம்

ஏற்கிறேன்

இந்த அம்பை

சபதம் ஏற்கிறேன்

இந்த சபையில்

உள்ள அனைவர்

முன்னிலையிலும்

இந்த அம்பை

சபதம் ஏற்கிறேன்

 

அந்த வானத்தின்

மீது சத்தியம்

இந்த பூமியின்

மீது சத்தியம்

இறந்த காலம்

நிகழ் காலம்

எதிர்காலம் ஆகிய

முக்காலங்களின்

மீதும் சத்தியம்

 

பஞ்ச பூதங்களின்

மீது சத்தியம்

இந்த உலகத்தில்

உள்ள

ஓரறிவு முதல்

ஆறறிவு வரை

உள்ள அனைத்து

உயிரினங்களின்

மீதும் சத்தியம்

இந்த பிரபஞ்சத்தை

இயக்கிக்

கொண்டிருக்கும்

கடவுளின்

மீது சத்தியம்

முபபத்து முக்கோடி

தேவர்களின்

மீதும் சத்தியம்

மும்மூர்த்திகளின்

மீதும் சத்தியம்

இந்த உலகத்தில்

பிறந்தவர்கள்

இனி பிறக்கப்

போகிறவர்கள்

அனைவர்

மீதும் சத்தியம்

இந்த உலகத்தில்

இறந்தவைகள்

இனி இறக்கப்

போகிறவைகள்

அனைத்தின்

மீதும் சத்தியம்

 

மரணமற்றவன்

என்று தன்னை

சொல்லிக் கொள்ளும்

இந்த பீஷ்மனை

விரும்பும் போது

தான் மரணம்

என்று வரம்

பெற்று இருக்கும்

இந்த பீஷ்மனை

நான் கொல்லுவேன்

இந்த அம்பையின்

கையால் தான்

பீஷ்மனுக்கு சாவு

 

நான் விடும்

அம்பு தான்

பீஷ்மனுடைய

நெஞ்சை

இரண்டாகப் பிளக்கும்

 

பீஷ்மா

மரணம் என்பது

உனக்கு

உடனே

கிடைத்து விடாது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-710 (சாவேயில்லாத சிகண்டி-44)

 ஜபம்-பதிவு-710

(சாவேயில்லாத

சிகண்டி-44)

 

பரதவர்

குல மன்னனின்

மகள் சத்தியவதியை

திருமணம்

செய்து கொண்டு

அஸ்தினாபுரத்தின்

எல்லையை

மேலும்

விரிவாக்கம்

செய்யவும்

படைவலிமையை

மேலும்

பெருக்கவும்

சந்தனு மகாராஜா

முடிவு செய்த போது

பரதவர் குல மன்னன்

தன்னுடைய

மகள்

சத்தியவதி தான்

பட்டமகிஷியாக

வேண்டும் என்றும்

அவளுடைய

வாரிசுகள் தான்

அரசாள வேண்டும்

என்றும்

சத்தியவதியின்

தந்தை

வேண்டுகோள்

வைத்ததால்

எதுவும் செய்ய

முடியாமல்

இருந்த நீ

சூழ்நிலையின்

காரணமாகத் தான்

பிரம்மச்சரியம்

என்ற வேஷத்தையும்

திருமணம் செய்து

கொள்ள

மாட்டேன் என்ற

சபதத்தையும்

ஏற்றாய்

 

ஆமாம்

சந்தனு மகாராஜாவும்

நீயும் சேர்ந்து போட்ட

சதித் திட்டம் தான்

நீ போட்டிருக்கும்

இந்த பிரம்மச்சரியம்

என்ற வேஷம்

 

ஆமாம்

பிரம்மச்சரியம்

என்பது

நீ உண்மையாக

ஏற்றுக் கொண்டது

கிடையாது

இந்த உலகத்தை

ஏமாற்றுவதற்காக

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

அரசியலுக்காகவும்

உன்னுடைய

பெருமைக்காகவும்

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

அரியணைக்கு

ஆசைப்படாதவன் என்பதை

இந்த உலகம்

நம்ப வேண்டும்

என்பதற்காக

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

பெண்களின் மேல்

ஆசை

இல்லாதவன் என்று

இந்த உலகத்தை

நம்ப வைக்க

வேண்டும்

என்பதற்காக

நீ போட்டிருக்கும்

வேஷம்

 

நீ பிரம்மச்சரியம்

என்ற வேஷத்தைப்

போட்டுக் கொண்டு

இருப்பது

அரியணையில் அமரும்

அரசர்களை ஆட்டி

வைப்பதற்காகவும்

தலையாட்டி

பொம்மைகளாக

அவர்களை ஆட

வைப்பதற்காகவும்

நீ எண்ணியதை

நிறைவேற்றுவதற்காகவும்

நீ விரும்பியதை

செயல்படுத்துவதற்காகவும்

உன் இஷ்டப்படி

அரசாட்சி

செய்வதற்காகவும்

தான்

 

நீ உண்மையாகவே

பிரம்மச்சாரியாக

இருந்திருந்தால்

உறவுகள்

அனைத்தையும்

அறுத்து விட்டு

ராஜ போகங்களைத்

துறந்து விட்டு

துறவறத்தை

மேற்கொண்டு

காட்டிற்குள்

தவமியற்றச் சென்று

இருக்க வேண்டும்

 

ஆனால் இவைகள்

எதையும் செய்யாமல்

அரியணையைப்

பாதுகாக்கிறேன்

என்று மக்களை

ஏமாற்றிக் கொண்டு

ராஜபோகங்களை

அனுபவித்துக்

கொண்டிருக்கிறாய்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-709 (சாவேயில்லாத சிகண்டி-43)

 ஜபம்-பதிவு-709

(சாவேயில்லாத

சிகண்டி-43)

 

பீஷ்மர் :

முடியாது

 

பிரம்மச்சரிய விரதம்

பூண்டவன் நான்

 

யாரையும் திருமணம்

செய்து கொள்ள

மாட்டேன் என்று

சபதம்

செய்திருப்பவன் நான்

 

என்னால்

உங்களை

மட்டும் அல்ல

யாரையும்

திருமணம் செய்து

கொள்ள முடியாது

 

அம்பை :

சபதம் ஏற்றவர்கள்

யாரும் வாழ்நாளின்

இறுதி வரை

சபதத்தை

பின்பற்றுவதில்லை

 

சபதத்தை

விலக்குவதால்

நன்மை கிடைக்கும்

என்றால்

சபதத்தை

விட்டு விட

வேண்டியது தானே

 

பீஷ்மர் :

என்னுடைய உயிர்

இந்த உடலில்

இருக்கும் வரை

என் சபதம்

இருக்கும்

 

அம்பை :

யாரும் இல்லாத

அனாதையாக நின்று

கொண்டிருக்கும்

ஒரு பெண்ணின்

மன வேதனை

உங்களுக்கு

கேட்கவில்லையா

 

சபதத்தை விட்டு

விட்டு என்னை

திருமணம் செய்து

கொள்ள மாட்டீர்களா

 

உங்களால்

பாதிக்கப்பட்ட

பெண்ணிற்கு

நீங்கள் வாழ்க்கை

தர மாட்டீர்களா

 

நிர்க்கதியாக

இருக்கும் ஒரு

பெண்ணின்

வாழ்க்கையை

அழிக்க

நினைக்காதீர்கள்

அனைவராலும்

கைவிடப்பட்ட

ஒரு பெண்ணின்

வாழ்க்கையை

அழித்து விடாதீர்கள்

 

என்னை ஏற்றுக்

கொள்ளுங்கள்

 

பீஷ்மர் :

முடியாது

 

அம்பை :

யோசித்துச் சொல்லுங்கள்

 

பீஷ்மர் :

யோசித்தாலும்

என்னுடைய முடிவு

ஒன்று தான்

என்னால் உங்களை

திருமணம் செய்து

கொள்ள முடியாது

 

அம்பை :

முடியவே முடியாதா

 

பீஷ்மர் :

ஆமாம்

முடியவே முடியாது

 

அம்பை :

(அம்பை ஆவேசத்துடன்

பேசத் தொடங்கினாள்)

 

பீஷ்மா

அஸ்தினாபுரத்தின்

எல்லையை

விரிவாக்கம் செய்யவும்,

படை வலிமையைப்

பெருக்கவும்

சந்தனு மகாராஜா

கங்கர் குல இளவரசி

கங்கா தேவியை

மணந்து

உங்களைப் பெற்றார்

அதில் அரசியல்

இருக்கிறது

அதற்குப் பெயர்

தான் ராஜ தந்திரம்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-708 (சாவேயில்லாத சிகண்டி-42)

 ஜபம்-பதிவு-708

(சாவேயில்லாத

சிகண்டி-42)

 

அதனால்

பெற்ற மகளை

ஏற்றுக் கொள்ளாமல்

மனதைப் புண்படுத்தி

அனுப்பி விட்டார்

 

பீஷ்மரின் தவறான

செயலினால்

என் காதலன்

சால்வன் என்னை

ஏற்றுக் கொள்ள

மறுத்து விட்டார்

 

பீஷ்மரின்

கோபத்தினால் தாங்கள்

பாதிக்கப்படுவோம்

என்று

என்னுடைய

பெற்றோர்கள் என்னை

ஏற்றுக் கொள்ள

மறுத்து விட்டார்கள்

 

இப்போது நான்

யாரும் இல்லாத

அனாதையாக நின்று

கொண்டிருக்கிறேன்

 

என்னுடைய

இந்த நிலைக்கு

பீஷ்மர்

தான் காரணம்

 

அதனால்

நியாயம் கேட்டு

வந்திருக்கிறேன்

 

விசித்திர வீர்யன் :

உங்களுக்கு

நியாயம் எப்படி

வழங்க வேண்டும்

என்று

எதிர்பார்க்கிறீர்கள்

 

அம்பை :

என்னுடைய

இந்த நிலைக்கு

காரணம் பீஷ்மர்

அதனால்

பீஷ்மர் தான்

என்னை திருமணம்

செய்து

கொள்ள வேண்டும்

 

பீஷ்மர் :

நான் பிரம்மச்சாரி

யாரையும்

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று சபதம்

ஏற்று இருக்கிறேன்

 

என்னால்

யாரையும்

திருமணம் செய்து

கொள்ள முடியாது

 

அம்பை :

திருமணம் செய்து

கொள்ள முடியாது

என்றால்

ஏன் என்னை

சிறை எடுத்து

வந்தீர்கள்

 

பீஷ்மர் :

நான் தான்

சொன்னேனே

என்னுடைய

தம்பி

விசித்திர வீர்யனுக்காக

சிறை

எடுத்துச் செல்ல

வந்திருக்கிறேன்

என்று

 

அம்பை :

சிறை எடுத்துச்

செல்பவர் தான்

சிறை எடுத்தப்

பெண்ணை திருமணம்

செய்து கொள்ள

வேண்டும் என்பது

உங்களுக்குத் தெரியாதா

 

விசித்திர வீர்யன்

திருமணம்

செய்வதாக இருந்தால்

அவர் அல்லவா

சிறை

எடுத்திருக்க வேண்டும்

அவர் ஏன்

சிறை எடுக்கவில்லை

 

ஏன் உங்கள்

மன்னர் வீரன்

இல்லையா

அவர் ஆண்

மகன் தானே

 

அமைச்சர் :

இளவரசி அம்பை

அவர்களே

 

வார்த்தைகளை

பார்த்து பேசுங்கள்

நீங்கள் அரசர்

உட்பட அனைவரையும்

அவமதிப்பதை

நாங்கள் ஏற்றுக்

கொள்ள முடியாது

 

அம்பை :

பாதிக்கப்பட்டதுக்கு

நியாயம் கேட்டுக்

கொண்டிருக்கிறேன்

 

அதை

விட்டு விட்டு

மரியாதையைப் பற்றி

பேசிக்

கொண்டிருக்கிறீர்கள்

 

இப்போது

நியாயம் முக்கியமா

அல்லது

மரியாதை முக்கியமா

 

பாதிக்கப்பட்ட

என்னை பீஷ்மர்

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////