April 12, 2020

பரம்பொருள்-பதிவு-189


                ஜபம்-பதிவு-437
              (பரம்பொருள்-189)

“நான் அனைவருடைய
மனமும் வேதனைப்பட
வேண்டும் என்பதற்காக
இதைச் சொல்லவில்லை”

“அனைவருடைய
மனமும்
வேதனைப்படும்
என்றால் நான்
இதைச் சொல்லி
இருக்கவே மாட்டேன்”

“நான் உண்மையைச்
சொல்ல வேண்டும்
என்பதற்காகச்
சொன்னேன்”

“நான் சொல்லும்
உண்மையில் உள்ள
அர்த்தத்தை நீங்கள்
புரிந்து கொள்வீர்கள்
என்பதற்காகச் சொன்னேன் “

“நான் சொன்ன
உண்மையில்
ஏதேனும் தவறு
இருந்தாலோ
அனைவருடைய
மனதையும்
புண்படுத்தும் வகையில்
என்னுடைய
உண்மைகள்
இருந்தாலோ என்னை
மன்னித்து விடுங்கள் “

“ஆனால் ஒன்றை
மட்டும் தெளிவாகச்
சொல்கிறேன்  

“நான் அரவானுடைய
தலையை
வெட்டக் கூடாது  

கிருஷ்ணன்  :
“எனக்கே ஆச்சரியமாக
இருக்கிறது
நகுலனா இப்படி
எல்லாம்
பேசுவது என்று “

“எப்போதும்
பேசாத நீ
எப்போதும் பேசாமல்
அமைதியாக
இருக்கும் நீ
இப்போது எப்படி
இப்படி பேசினாய் “

“அமைதியாக
இருப்பவர்கள்
அமைதியாக இருந்தால்
ஆழ்கடல் ;
ஆர்த்தெழுந்து
விட்டால்
சீறிப்பாயும்
பொங்கு கடல் ;  
என்பதை
நிரூபித்து விட்டாய் “

“அமைதியாக
இருப்பவர்கள்
ஆர்த்தெழுந்து
பேசத் தொடங்கினால்
ஆர்த்தெழும் கடலும்
அடங்கி விடும் ;
என்று சொல்லத்தக்க
வகையில்
அமைந்து இருந்தது
உன்னுடைய பேச்சு “

“அமைதியாக
இருப்பவர்கள்
ஒன்றும் தெரியாமல்
அமைதியாக
இருக்கவில்லை  ;
அனைத்தையும்
தெரிந்து வைத்துக்
கொண்டு தான்
அமைதியாக
இருக்கிறார்கள் ;
என்பதை
உணர்த்துவது போல்
இருந்தது
உன்னுடைய பேச்சு “

“பேசக்கூடாத
நேரத்தில்
பேசுவதும் ;
பேச வேண்டிய
நேரத்தில் பேசாமல்
இருப்பதும் குற்றம் ;
என்பதை உணர்ந்து
பேச வேண்டிய
நேரத்தில்
பேச வேண்டியதைப்
பேசி இருக்கிறாய் “

“யாரும் மறுப்பு
சொல்ல முடியாத
அளவிற்கு
பேசி இருக்கிறாய் “

“யாரும் எதிர்ப்பு
சொல்ல முடியாத
அளவிற்கு
பேசி இருக்கிறாய் “

“அரவானுடைய
தலையை நான்
வெட்ட மாட்டேன்
என்று
ஒவ்வொருவரும்
சொன்ன
காரணம்
வித்தியாசமாக
இருந்தது “

“ஆனால் நீ
சொன்ன காரணம்
யாராலும்
யோசிக்கக் கூட
முடியாத
அளவிற்கு
இருந்தது “

“உன்னுடைய
கருத்துக்கு நான்
மறுப்பு சொல்ல
மாட்டேன் “

“உன்னுடைய
கருத்தை நான்
ஏற்றுக் கொள்கிறேன் “

“இப்போது
சகாதேவனை
அழைக்கிறேன் “

“பஞ்ச பாண்டவர்களில்
கடைசியாக இருக்கும்
சகாதேவனை
அழைக்கிறேன் ;
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்காக
அழைக்கிறேன் ; ‘

“சகாதேவா
வருகிறாயா ? “

“அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு
வருகிறாயா ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 12-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-188


               ஜபம்-பதிவு-436
             (பரம்பொருள்-188)

நகுலன் :
“பஞ்ச பாண்டவர்கள்
என்பது எங்கள்
ஐவரையும் குறிக்கும்
என்பது அனைவரும்
அறிந்த விஷயம்  

“பஞ்ச பாண்டவர்களில்
அண்ணன்கள் தர்மர்
பீமன் அர்ச்சுனன்
ஆகியோர்
மகாராஜா பாண்டுவின்
முதல் மனைவியான
குந்தி தாய்க்கு
பிறந்தவர்கள் ;
நகுலனாகிய நானும்
சகாதேவனும்
மகாராஜா பாண்டுவின்
இரண்டாவது
மனைவியாகிய
மாத்ரி தாய்க்கு
பிறந்தவர்கள் “

“பெரும்பாலானவர்கள்
அறிந்த விஷயமும்
இது தான்  :
பெரும்பாலானவர்கள்
மறந்த விஷயமும்
இது தான் ; “

“நானும் சகாதேவனும்
இரட்டைப் பிறவிகள் “

“நாங்கள் ஐவரும்
இரண்டு வெவ்வேறு
தாய்க்கு பிறந்தவர்கள்  

“எங்களுடைய
தாய் வேறு
அவர்களுடைய
தாய் வேறு “

“பஞ்ச பாண்டவர்களில்
இத்தகைய ஒரு
வேறுபாடு இருக்கிறது “

“நாங்கள் ஐவரும்
ஒரே தாய்க்கு பிறந்து
நான் அரவானுடைய
தலையை வெட்டினால்
இந்த உலகம்
ஒன்றும் சொல்லாது “

“ஆனால் நாங்கள்
இரு வேறு தாய்க்கு
அல்லவா
பிறந்திருக்கிறோம் ;
மாத்ரி தாய்க்கு
பிறந்த நான்
குந்தி தாய்க்கு
பிறந்தவர்களின்
வாரிசான அரவானை
கொன்றால் இந்த
உலகம் என்னை
வசைபாடாதா ? “

“நான் அரவானுடைய
தலையை வெட்டினால்
மாத்ரி தாய்க்கு
பிறந்த நகுலன்
குந்தி தாய்க்கு
பிறந்த வாரிசான
அரவானுடைய
தலையை வெட்டினான்
என்று என்னை
இந்த உலகம்
தவறாக சொல்லாதா ? “

“ஒரு தாய்க்கு
பிறந்தவர்கள் என்றால்
இந்த உலகம்
ஒன்றும் சொல்லாது “

“ஆனால் நாங்கள்
ஐவரும் ஒரு தாய்க்கு
பிறந்தவர்கள்
கிடையாதே “

“ஒரே தாய்க்கு
பிறந்திருந்தால்
நகுலன் இந்த
செயலைச் செய்து
இருக்க மாட்டான் ;
மாற்றாந் தாய்க்கு
பிறந்தவன் அதனால்
தான் இந்த
இரக்கமற்ற செயலை
செய்து இருக்கிறான்
என்று இந்த
உலகம் என்னை
வ்சை பாடாதா ? “

“அண்ணன்கள் தர்மர்
பீமன் அர்ச்சுனன்
ஆகியோர்
அரவானுடைய
தலையை வெட்டினால்
இந்த உலகம்
அவர்களை ஒன்றும்
சொல்லாது -ஏனென்றால்
அது அவர்களுடைய
வாரிசு அதனால்
அவர்களை ஒன்றும்
சொல்லாமல்
இந்த உலகம்
விட்டு விடும் ; “

“ஆனால் நான்
அரவானுடைய
தலையை வெட்டினால்
நகுலன் குந்தி தாயின்
வாரிசு கிடையாது  ;
நகுலன் குந்தி தாயின்
வாரிசாக இருந்திருந்தால்
அரவானுடைய
தலையை வெட்டி
இருகக மாட்டான் ; அவன்
மாத்ரி தாயின் வாரிசு
அதனால் தான் நகுலன்
அரவானுடைய
தலையை
வெட்டினான் என்று
இந்த உலகம்
என்னை குற்றம்
சொல்லாதா ?
நீக்க முடியாத
அவப்பெயருக்கு நான்
ஆளாக மாட்டேனா ? “

“இப்படி ஒரு
அவப்பெயர் ஏற்பட்டால்
அது என்னை
மட்டும் பாதிக்காதே
பாண்டவர்களாகிய
எங்கள் ஐவரையும்
சேர்த்துத் தானே
பாதிக்கும்  

“நான் அரவானுடைய
தலையை வெட்டினால்
பாண்டவர்களுக்கு
கெட்டப்பெயர்
தான் ஏற்படும் “

“இத்தகைய ஒரு
கெட்ட பெயர்
அனைவருக்கும்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால் நான்
அரவானுடைய தலையை
வெட்டக் கூடாது “

“அதனால் தான்
நான் சொன்னேன்
அரவானுடைய
தலையை நான்
வெட்டக் கூடாது என்று “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 12-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-187


              ஜபம்-பதிவு-435
             (பரம்பொருள்-187)

கிருஷ்ணன் : 
“நகுலா ! நீ என்ன
சொல்லப் போகிறாய் ? “

“எப்போதும்
சொல்லிக் கொண்டு
இருப்பாயே
அதைத் தானே
இப்போதும்
சொல்லப் போகிறாய் ? “

“புதியதாக எதுவும்
சொல்லப் போகிறாயா
இல்லையே “

“எல்லா விஷயத்திற்கும்
என்ன சொல்வாயோ
அதைத் தானே
இப்போதும்
சொல்லப் போகிறாய்  

“அரவானுடைய
தலையை வெட்ட
மாட்டேன் என்று
அண்ணன்கள்
சொன்னால் அது
சரியாகத் தான்
இருக்கும் - அதில்
எந்தவிதத் தவறும்
இருக்காது ;
தவறானவைகளை
அவர்கள் எப்போதும்
சொல்லவே மாட்டார்கள் “

“அதனால் அவர்கள்
சொன்ன கருத்தே
என்னுடைய கருத்து
என்று சொல்லப் போகிறாய்”

“அண்ணன்கள் ஒரு
செயலை செய்ய
முடியாது என்று
சொன்னால்  
அதில் ஆயிரம்
அர்த்தங்கள் இருக்கும் ;

“அண்ணன்கள்
செய்யாமல் விட்ட
செயலை என்னால்
எப்படி செய்ய முடியும் “

“அவர்களே செய்ய
முடியாது என்று
சொல்லி விட்ட பிறகு
என்னால் எப்படி
அரவானுடைய தலையை
வெட்ட முடியும் “

“அரவானுடைய
தலையை என்னால்
வெட்டமுடியாது “

“அரவானுடைய
தலையை வெட்டக்
கூடிய செயலை
நான் செய்ய மாட்டேன்
என்று தானே
சொல்லப் போகிறாய்  

நகுலன்  :
“இல்லை இல்லை
நான் அரவானுடைய
தலையை வெட்ட
முடியாது என்று
சொல்ல மாட்டேன் “

கிருஷ்ணன் :
“பிறகு”

நகுலன்  :
“அரவானுடைய
தலையை என்னால்
வெட்ட முடியும் “

கிருஷ்ணன்  :
“அப்படி என்றால்
அரவானுடைய
தலையை வெட்டுவதற்கு
தயாராக இருக்கிறாயா
அரவானுடைய தலையை
வெட்டுவதற்கு
உனக்கு சம்மதமா ? “

நகுலன்  :
“அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு நான்
தயாராகத் தான்
இருக்கிறேன் ஆனால்
நான் அரவானுடைய
தலையை
வெட்டக்கூடாது “

கிருஷ்ணன் :
“ஏன் வெட்டக்கூடாது”

நகுலன்  :
“இதில் மிகப்பெரிய
பிரச்சினை ஒன்று
இருக்கிறது  

கிருஷ்ணன்  :
“அப்படிப்பட்ட
பிரச்சினை
என்ன பிரச்சினை
எனக்குத் தெரியாத
பிரச்சினை  

நகுலன்  :
“உங்களுக்கு
தெரிந்தது தான்
உங்களுக்கு
தெரியாததை நான்
எப்படி சொல்ல
முடியும் பரந்தாமா “

“நான் அரவானுடைய
தலையை
வெட்டினால்
பாண்டவர்களுக்கு
கெட்ட பெயர்
ஏற்படக்கூடிய
வாய்ப்பு இருக்கிறது “

கிருஷ்ணன்  :
“பாண்டவர்களுக்கு
அப்படி என்ன
கெட்ட பெயர்
ஏற்படப் போகிறது “

நகுலன் :
“நான் அரவானுடைய
தலையை வெட்டினால்
துடைக்க முடியாத
கெட்ட பெயர்
ஏற்பட்டு விடும் “

கிருஷ்ணன்  :
“அதைத் தான்
என்னவென்று
கேட்கிறேன் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 12-04-2020
//////////////////////////////////////////