March 02, 2019

திருக்குறள்-பதிவு-116


                    திருக்குறள்-பதிவு-116

“கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
கருத்து சொல்லி,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டுக்
கொண்டிருந்தவர்களுடைய
நடவடிக்கைகளை அடக்க
வேண்டும் என்பதற்காக,
இரண்டு விதமான
முறைகள் அவர்களுக்கு
எதிராக கையாளப் பட்டன;”

ஒன்று :
விசாரணை இல்லாமல்
கொன்றனர்

இரண்டு :
விசாரணை செய்து
கொன்றனர்

“ பெரும்பான்மையான
மக்களால் இவர் யார்
என்று அறியப்படாமல்
இருப்பவர்கள் ;
மக்களுடைய ஆதரவு
எதுவும் இல்லாமல்
இருப்பவர்கள் ;
பணம், பதவி, அதிகாரம்
என்ற மூன்றில் ஒன்று
கூட இல்லாதவர்கள் ;
இவர்களில் யாரேனும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை, சர்ச்சுகள்,
பைபிள் ஆகியவற்றிற்கு
எதிராக செயல்பட்டால்
அவர்கள் விசாரணை
எதுவும் இல்லாமல் ;
இருந்த சுவடு தெரியாமல் ;
யாருக்கும் தெரியாமல்  ;
அழிக்கப்பட்டு வந்தனர்;”

“ஆனால்
பெரும்பான்மையான
மக்களால் இவர் யார்
என்று அறியப்பட்டு,
இருப்பவர்கள்  ;
மக்களுடைய ஆதரவு
பெற்று இருப்பவர்கள்
இருப்பவர்கள் ;
பணம், பதவி, அதிகாரம்
இந்த மூன்றைப் பெற்று
இருப்பவர்கள் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை, சர்ச்சுகள்,
பைபிள் ஆகியவற்றிற்கு
எதிராக செயல்பட்டால் ;
அவர்கள் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு அவருக்கு
எதிராக ஆதாரங்கள்
திரட்டப்பட்டு குற்றவாளி
என்று நிரூபிக்கப்பட்டு
சித்திரவதை செய்து
கொல்லப்பட்டு வந்தனர்; “

“ ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மதத்தில்
Father ஆக இருந்தவர் ;
உலக மக்களால்
நன்கு அறியப்பட்டவர் ;
தன்னுடைய பேச்சாலும்
எழுத்தாலும் ஐரோப்பாவையே
தன் வசப்படுத்தி
வைத்து இருந்தவர் ;
அவருடைய புரட்சிக்
கருத்துக்களால்
இளைய தலைமுறையினரை
தன் சொற்கேட்டு
நடக்க வைத்தவர் ;
அவருடைய
கருத்துக்களுக்கும் ;
எழுத்துக்களுக்கும் ;
பேச்சுகளுக்கும் ;மக்கள்
கட்டுப்பட்டு இருந்தனர்; “

“ ஐரோப்பா மக்களால்
தத்துவமேதை; விஞ்ஞானி ;
என்று போற்றப்பட்ட
அவரை - உலக
மக்களால் அறிவாளி
என்று போற்றப்பட்ட
அவரை - கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
சர்ச்சுகள் ; பைபிள் ;
ஆகியவற்றை எதிர்த்த
அவரை - அவ்வளவு
எளிதாக கொல்ல
முடியவில்லை - எனவே
அவரை விசாரணை என்ற
பெயரில் அலையவைத்து
சித்திரவதை செய்து
கொன்றனர் - ஆம்
ஜியார்டானோ புருனோ
மக்களால்
அறியப்பட்டவராக
இருந்த காரணத்தினால் ;
மக்கள் செல்வாக்கு
பெற்று இருந்த
காரணத்தினால்; - அவரை
விசாரணை என்ற
பெயரில் கொன்றனர் ;
விசாரணை இல்லாமல்
ஜியார்டானோ புருனோவை
கொல்ல முடியவில்லை;”

“ பல்லாயிரக்
கணக்கானவர்களில்
எட்டு நபர்கள் தனித்து
நிற்கிறார்கள்; – அந்த
எட்டு நபர்களில் இருந்தும்
ஜியார்டானோ புருனோ
தனித்து நிற்கிறார்;”

“பல்லாயிரக்
கணக்கானவர்களும் ;
எட்டு நபர்களும் ;
ஜியார்டானோ புருனோவும்
கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்று
தான் போராடினார்கள் ;
ஆனால் ஜியார்டானோ
புருனோ ம்ட்டும் தனித்து
நிற்பதற்கு ஒரு முக்கிய
காரணம் இருக்கிறது ;”

“ இவர்கள் யாரும்
கண்டுபிடித்து சொல்லாத
ஒரு விஷயத்தை
ஜியார்டானோ புருனோ
கண்டு பிடித்து சொன்னது
தான் முக்கிய காரணம் ;”

“ கிறிஸ்தவ மக்களும் ;
கிறிஸ்தவ மதத்திற்கு
மதம் மாறிய மக்களும் ;
தங்கள் தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்காக ;
கிறிஸ்தவ மதத்தின் மீது
நம்பிக்கை வைக்கும்
போது - கிறிஸ்தவ மதம்
கிறிஸ்தவர்களுடைய
நம்பிக்கையை தங்களுக்கு
சாதகமாக பயன் படுத்திக்
கொண்டு மக்களை
அடிமைகளாக வைத்து
உலகை அரசாள முயற்சி
செய்து கொண்டிருக்கிறது ;
என்ற உண்மையை
ஜியார்டானோ புருனோ
கண்டு பிடித்து கிறிஸ்தவ
மதத்தின் புனிதத் தன்மை
காப்பாற்றப்பட வேண்டும் ;
என்று போராடிய
காரணத்திற்காக ;
இயேசு கிறிஸ்து சொன்ன
கருத்துக்கள் மக்களை
போய் சென்று அடைவதற்கு
முயற்சிகள் செய்யப்படாமல்
மதத்தின் மூலம் உலக
மக்களை அடிமைகளாக
வைப்பதற்கு செய்யப்படும்
முயற்சிகளை எதிர்த்து
போராடிய காரணத்தினால் ;
தான் ஜியார்டானோ
புருனோ பல்லாயிரக்
கணக்கானவர்களிடமிருந்தும்
எட்டு நபர்களிடமிருந்தும்
தனித்து இருக்கிறார் ;”

“ ஜியார்டானோ
புருனோவுடன் சம்பந்தப்பட்ட
அந்த எட்டு நபர்களைப்
பற்றி இனி பார்ப்போம்……….!

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  02-03-2019
//////////////////////////////////////////////