April 11, 2022

ஜபம்-பதிவு-738 (சாவேயில்லாத சிகண்டி-72)

 ஜபம்-பதிவு-738

(சாவேயில்லாத

சிகண்டி-72)

 

என்னால்

கொல்லப்பட்ட நீ

யாரும் இல்லாத

அனாதையாக

தரையில்

பிணமாகக்

கிடக்கப் போகிறாய்

 

காக்கைகளும்

கழுகளும் உன்னை

கொத்தப்

போகின்றன

விலங்குகள் உன்னை

உணவாகத்

தின்னப் போகின்றன

இந்தக் காட்சியைக்

கண்டு உன் தாய்

கங்கை கண்ணீர்

வடிக்கப் போகிறாள்

 

இந்த உலகத்தில்

என்னை எதிர்த்த

ஷத்திரியர்களை

எல்லாம் வென்று

பிராமணர்கள் தான்

இந்த உலகத்தில்

சிறந்தவர்கள்

என்று எப்படி

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக்

காட்டினேனோ

அப்படியே

உன்னையும் கொன்று

ஷத்திரியர்களை விட

பிராமணர்களே

உயர்ந்தவர்கள்

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக்

காட்டுவேன்

 

ஆணவத்தால்

அழிபவனே

குருவை மதிக்கத்

தெரியாதவனே

குருவின் சொற்படி

நடக்காதவனே

நாளை உனக்கும்

எனக்கும்

குருஷேத்திரத்தில்

போர்

 

செல்

எந்தக் கடவுளை

எல்லாம் வணங்க

வேண்டும் என்று

நினைக்கிறாயோ

அந்தக் கடவுளை

எல்லாம்

வணங்கிக் கொள்

 

யாரையெல்லாம்

பார்க்க

விரும்புகிறாயோ

அவர்களை

எல்லாம்

பார்த்துக் கொள்

 

யாரிடம் எல்லாம்

ஆசிர்வாதம் பெற

நினைக்கிறாயோ

அவர்களிடம்

எல்லாம்

ஆசிர்வாதம்

பெற்றுக் கொள்

 

இன்றுடன்

உன்னுடைய

சந்தோஷமான நாள்

முடியப் போகிறது

 

நாளை உன்னுடைய

மரணத்திற்கான நாள்

குறிக்கப்படப்

போகிறது

 

சென்று

மகிழ்ச்சியாக இருந்து

விட்டு வா

 

(என்று சொல்லி

விட்டு பீஷ்மரின்

பதிலை

எதிர்பார்க்காமல்

பரசுராமர் அந்த

இடத்தை விட்டு

சென்று விட்டார்

 

பீஷ்மர்

தன்னுடைய

குதிரையில் ஏறி

அஸ்தினாபுரத்தில்

சத்தியவதியைக்

காண புறப்பட்டார்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------11--04-2022

-------திங்கள் கிழமை

//////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-737 (சாவேயில்லாத சிகண்டி-71)

 ஜபம்-பதிவு-737

(சாவேயில்லாத

சிகண்டி-71)

 

பழங்காலத்தில்

இறந்து போன

உங்களுடைய

மூதாதையர்களான

பிராமணர்களின்

ஆத்மாக்களை

ஷத்திரிய

ரத்தத்தைக் கொண்டு

சாந்தி அடையச்

செய்தது போல,

உம்முடைய

இரத்தத்தைக்

கொண்டு

உம்மால்

கொல்லப்பட்ட

ஷத்திரியர்களின்

ஆத்மாக்களை சாந்தி

அடையச் செய்வேன்

 

தனியாகவே

இந்த உலகத்தில்

உள்ள ஷத்திரியர்கள்

அனைவரையும்

வீழ்த்தியவர்

பரசுராமர் என்று

பிராமணர்களால்

நீங்கள் புகழப்பட்டு

வருவதற்குக்

காரணம் என்ன

தெரியுமா

நீங்கள் ஷத்திரியரை

வீழ்த்திய காலத்தில்

இந்த பீஷ்மன்

பிறக்கவில்லை

 

இந்த பீஷ்மன்

முன்பே

பிறந்திருந்தால்

இந்த உலகத்தில்

உள்ள ஷத்திரியர்கள்

அனைவரையும்

வீழ்த்தியவர்

பரசுராமர் என்ற

பெயரே

உங்களுக்குக்

கிடைத்திருக்காது

பிராமணர்கள்

உங்களைப்

புகழ்ந்து கொண்டு

இருந்திருக்க

மாட்டார்கள்

 

மிரட்டினால்

ஓடி ஒளியும்

பூனையை அடித்துக்

கொன்று விட்டு

புலியைக்

கொன்றது போல்

வெற்றிக் களிப்பில்

சுற்றித் திரிந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

வைக்கோற்போரை

கொளுத்தி விட்டு

காட்டையே

கொளுத்தியது போல்

வீராவேஷமாக திரிந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

எலியைக்

கொன்று விட்டு

சிங்கத்தைக்

கொன்றது போல

தற்புகழ்ச்சியால்

திரிந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

நியாயம் என்றால்

என்ன என்று

தெரியாத உங்களை

சரியானது எது

தவறானது எது

என்று ஆராய்ந்து

பார்க்கத் தெரியாத

உங்களை

தவறான பாதையில்

சென்று

கொண்டிருக்கும்

உங்களை

பிராமணர்களால்

போற்றிப்

புகழப்பட்டுக்

கொண்டிருக்கும்

உங்களை

தனியொருவனாக

இந்த உலகத்தில்

உள்ள

ஷத்திரியர்களை

கொன்று

குவித்தவன்

என்று பெருமை

பேசித் திரிந்து

கொண்டிருக்கும்

உங்களை

அடக்குவேன்

உங்களுடைய

ஆவணத்தை

ஒடுக்குவேன்

ஷத்திரியர்களின்

பெருமையை

நிலைநாட்டுவேன்

 

பரசுராமர்:

பீஷ்மா என்னுடன்

போரிடப் போவதாக

நீ எடுத்த

முடிவு தான்

நீ வாழ்க்கையில்

எடுத்த

முடிவுகளிலேயே

தவறான முடிவு

 

குருவிடம்

கற்றுக் கொண்ட

கலையை

வைத்துக் கொண்டே

குருவை எப்போது

எதிர்க்கத்

துணிந்தாயோ

அப்போதே நீ

என்னுடைய

எதிரியாகி விட்டாய்

 

குருவின்

வார்த்தையை

மதிக்காதவனுக்கு

எத்தகைய நிலை

ஏற்படும் என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ளப்

போகிறது

 

வீரத்தில் சிறந்தவன்

என்று புகழப்படும்

உன்னை

ஷத்திரியர்களில்

உயர்ந்தவன் என்ற

அழைக்கப்படும்

உன்னை

போரில் தோற்கடிக்க

முடியாதவன் என்று

போற்றப்படும்

உன்னை போரில்

என்னுடைய

கணைகளால்

துளைக்கப் போகிறேன்

 

குருவின்

வார்த்தையை

மதிக்காத உன்னை

கொல்லப் போகிறேன்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------11--04-2022

-------திங்கள் கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-736 (சாவேயில்லாத சிகண்டி-70)

 ஜபம்-பதிவு-736

(சாவேயில்லாத

சிகண்டி-70)

 

பரசுராமர்:

என்னை குருவாக

ஏற்றுக்

கொண்டிருப்பதாகக்

கூறும் நீ ஏன்

என்னுடைய

சொல்லை ஏற்றுக்

கொள்ள மறுக்கிறாய்

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்கிறாய்

 

அம்பை உன்னால்

பாதிக்கப் பட்டிருக்கிறாள்

அவளுடைய

வாழ்க்கை

பாதிக்கப்பட்டதற்கு

நீ தான் காரணம்

அம்பையின்

வாழ்க்கையில்

பாதிப்பை

ஏற்படுத்திய நீ தான்

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

 

வாழ்விழந்து நிற்கும்

அம்பைக்கு நீ தான்

வாழ்க்கை

கொடுக்க வேண்டும்

அம்பைக்கு நேர்ந்த

துயரத்தை நீ

தான் போக்க

வேண்டும்

 

என்னுடைய மனம்

அமைதி அடைய

வேண்டும் என்றால்

அம்பையை நீ

திருமணம் செய்தே

ஆக வேண்டும்

 

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று மறுத்தால்

என்னை உன்னுடைய

எதிரியாக பார்க்க

வேண்டி வரும்

என்னுடன் போரிட

வேண்டி வரும்

 

பீஷ்மர்:

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று நான் எடுத்த

முடிவு தான்

என்னுடைய

இறுதி முடிவு

இதில்

எந்தவிதமான

மாற்றத்திற்கும்

இடமில்லை

 

என் பக்கம் உள்ள

நியாயத்தை ஏற்றுக்

கொள்வீர்கள் என்ற

காரணத்தினால்

இவ்வளவு நேரம்

பேசினேன்

ஆனால் நீங்கள்

ஏற்றுக்

கொள்வதாகத்

தெரியவில்லை

 

சரியானது எது

தவறானது எது

என்று ஆராய்ந்து

அறியும்

அறிவில்லாதவராக

இருக்கும் குருவை

எதிர்த்து

போரிடலாம் என்று

புராணங்களில்

சொல்லப்

பட்டிருப்பதால்

சரியானது எது

தவறானது எது

என்று ஆராய்ந்து

பார்க்கத் தெரியாத

உங்களை எதிர்த்துப்

போரிடுவேன்

 

யார் பக்கம்

நியாயம் இருக்கிறது

என்று ஆராய்ந்து

பார்க்காமல்

நீதியில்லாமல்

நடந்து கொள்ளும்

உங்களை எதிர்த்துப்

போரிடுவேன்

 

அம்பையின்

கண்ணில் வழியும்

கண்ணீருக்கு

தரும் மதிப்பை

என்னுடைய

சபதத்திற்கு தராத

உங்களை

எதிர்த்துப்

போரிடுவேன்

 

எனக்குக் கல்வி

கற்றுக் கொடுத்த

குருவான

உங்களை எதிர்த்துப்

போரிடுவேன்

ஆனால் போரில்

உங்களைக்

கொல்ல மாட்டேன்

 

ஓடுவதற்கு

முயலாமல்

ஷத்திரியனைப்

போல ஆயுதம்

ஏந்தி கோபத்துடன்

போரிடும் ஒரு

பிராமணனைக்

கொல்வது

குற்றமாகாது என்பது

சாத்திரங்களில்

சொல்லப்

பட்டிருந்தாலும்

உங்களுடன்

போரிட்டாலும்

பிராமணான

உங்களைக்

கொல்ல மாட்டேன்

 

தவச்சக்தி

பெற்றிருக்கும்

உங்களிடம்

போரிடுவேன்

ஆனால் உங்களைக்

கொல்ல மாட்டேன்

 

குருஷேத்திரத்தில்

என்னுடன்

தனிப்போரில்

ஒருவருக்கொருவர்

நேரடியாக

நின்று கொண்டு

போரிடுவதற்குத்

தயாராகுங்கள்

 

குருஷேத்திரத்தில்

நான் போரிடும் போது

இந்த சீடனின்

ஆற்றலைப்

பார்க்கப் போகிறீர்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------11--04-2022

-------திங்கள் கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-735 (சாவேயில்லாத சிகண்டி-69)

 ஜபம்-பதிவு-735

(சாவேயில்லாத

சிகண்டி-69)

 

பரசுராமர்:

பிரம்மச்சரியத்தை

விட்டு விடுவதால்

ஒரு பெண்ணிற்கு

வாழ்க்கை

கிடைக்கிறது

என்றால்

பிரம்மச்சரியத்தை

விட்டு விடுவது

நல்லது தானே

 

உலகத்தில் யாரும்

மேற் கொள்ளாத

பிரம்மச்சரியத்தை

நீ ஒன்றும்

புதியதாக

மேற்கொள்ளவில்லை

 

எல்லோரும்

மேற்கொண்ட

பிரம்மச்சரியத்தைத்

தானே நீயும்

மேற்கொண்டிருக்கிறாய்

 

பிரம்மச்சரியம்

மேற்கொண்ட பலர்

பிரம்மச்சரியத்தை

விட்டு விட்டு

திருமணம் செய்து

கொள்ளவில்லையா

 

உலகத்தில் யாரும்

செய்யாததை

ஒன்றும்

உன்னை நான்

செய்யச்

சொல்லவில்லை

பலர் செய்ததைத்

தானே உன்னையும்

செய்யச் சொல்கிறேன்

 

நாம்

மேற்கொண்டிருக்கும்

பிரம்மச்சரியம்

ஒருவரை வாழ

வைப்பதற்காக

இருக்க வேண்டும்

ஒருவருடைய

வாழ்க்கையை

அழிப்பதற்காக

இருக்கக் கூடாது

 

உன்னுடைய

பயனற்ற

பிரம்மச்சரியத்தால்

யாருக்கும்

ஒரு பயனும்

ஏற்படப்போவதில்லை

பிரம்மச்சரியத்தை

விட்டு விட்டு

அம்பையை

திருமணம்

செய்து கொள்

 

பீஷ்மர்:

முடியாது

 

பரசுராமர்:

குருவின்

வார்த்தையை

செயல்படுத்துவது

தான் ஒரு

சீடனின் கடமை

 

பீஷ்மர்:

குருவின்

வார்த்தை சரியாக

இருக்கும் பட்சத்தில்

சீடன் அதை

நிறைவேற்றலாம்

குருவின் வார்த்தை

தவறாக இருந்தால்

சீடனால் எப்படி

நிறைவேற்ற முடியும்

 

பரசுராமர்:

குரு தவறான

வழியைக் காட்டுவார்

என்கிறாயா

 

பீஷ்மர்:

குரு காட்டும்

வழி சில

சமயங்களில்

சீடனுக்கு தவறாகத்

தெரியலாம் அல்லவா

 

பரசுராமர்:

நிகழ்காலத்தில்

நீ செய்திருக்கும்

தவறான செயலால்

உன்னுடைய

எதிர்காலம்

பாதிக்கப்படக் கூடாது

என்பதற்காகச்

சொன்னேன்

 

பீஷ்மர்:

எதிர்காலத்தை

நினைத்து

வருத்தப்பட்டுக்

கொண்டிருந்தால்

நிகழ்காலத்தில்

வாழ முடியாது

 

பரசுராமர்:

எதிர்காலத்தில்

நன்றாக வாழ

வேண்டும்

என்பதற்காகத் தான்

நிகழ்காலத்தில்

எப்படி வாழ

வேண்டும் என்று

சொன்னேன்

 

குருவின்

வார்த்தையை ஏற்றுக்

கொள்ள மாட்டாயா

 

பீஷ்மர்:

குருவின்

வார்த்தையை

ஏற்றுக் கொள்ள

முடியாத நிலையில்

இருக்கிறேன்

 

பரசுராமர்:

குருவின்

வார்த்தையை

ஏற்றுக் கொண்டு

சீடனாக இருந்து

நான்

சொன்னவைகளை

செய்ய முடியாது

என்றால்

சீடனாக

எனக்கு அருகில்

இருக்க முடியாது

எதிரியாக எனக்கு

எதிரில் நிற்க

வேண்டியது தான்

 

பீஷ்மர்:

என்னை சீடனாக

ஏற்றுக் கொண்டு

நால்வகை

ஆயுதங்களையும்

எப்படி கையாள

வேண்டும் என்ற

முறையினை

எனக்குக் கற்றுக்

கொடுத்தீர்கள்

அதனால் நீங்கள்

எப்போதும்

என்னுடைய

குரு தான்

நான் உங்களுடைய

சீடன் தான்

 

நான் எப்போதும்

உங்களை குருவாகத்

தான் பார்க்கிறேன்

நீங்கள் தான்

என்னை எதிரியாகப்

பார்க்கிறீர்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------11--04-2022

-------திங்கள் கிழமை

//////////////////////////////////////////////////