ஜபம்-பதிவு-737
(சாவேயில்லாத
சிகண்டி-71)
பழங்காலத்தில்
இறந்து போன
உங்களுடைய
மூதாதையர்களான
பிராமணர்களின்
ஆத்மாக்களை
ஷத்திரிய
ரத்தத்தைக் கொண்டு
சாந்தி அடையச்
செய்தது போல,
உம்முடைய
இரத்தத்தைக்
கொண்டு
உம்மால்
கொல்லப்பட்ட
ஷத்திரியர்களின்
ஆத்மாக்களை சாந்தி
அடையச் செய்வேன்
தனியாகவே
இந்த உலகத்தில்
உள்ள ஷத்திரியர்கள்
அனைவரையும்
வீழ்த்தியவர்
பரசுராமர் என்று
பிராமணர்களால்
நீங்கள் புகழப்பட்டு
வருவதற்குக்
காரணம் என்ன
தெரியுமா
நீங்கள் ஷத்திரியரை
வீழ்த்திய காலத்தில்
இந்த பீஷ்மன்
பிறக்கவில்லை
இந்த பீஷ்மன்
முன்பே
பிறந்திருந்தால்
இந்த உலகத்தில்
உள்ள ஷத்திரியர்கள்
அனைவரையும்
வீழ்த்தியவர்
பரசுராமர் என்ற
பெயரே
உங்களுக்குக்
கிடைத்திருக்காது
பிராமணர்கள்
உங்களைப்
புகழ்ந்து கொண்டு
இருந்திருக்க
மாட்டார்கள்
மிரட்டினால்
ஓடி ஒளியும்
பூனையை அடித்துக்
கொன்று விட்டு
புலியைக்
கொன்றது போல்
வெற்றிக் களிப்பில்
சுற்றித் திரிந்து
கொண்டிருக்கிறீர்கள்
வைக்கோற்போரை
கொளுத்தி விட்டு
காட்டையே
கொளுத்தியது போல்
வீராவேஷமாக திரிந்து
கொண்டிருக்கிறீர்கள்
எலியைக்
கொன்று விட்டு
சிங்கத்தைக்
கொன்றது போல
தற்புகழ்ச்சியால்
திரிந்து
கொண்டிருக்கிறீர்கள்
நியாயம் என்றால்
என்ன என்று
தெரியாத உங்களை
சரியானது எது
தவறானது எது
என்று ஆராய்ந்து
பார்க்கத் தெரியாத
உங்களை
தவறான பாதையில்
சென்று
கொண்டிருக்கும்
உங்களை
பிராமணர்களால்
போற்றிப்
புகழப்பட்டுக்
கொண்டிருக்கும்
உங்களை
தனியொருவனாக
இந்த உலகத்தில்
உள்ள
ஷத்திரியர்களை
கொன்று
குவித்தவன்
என்று பெருமை
பேசித் திரிந்து
கொண்டிருக்கும்
உங்களை
அடக்குவேன்
உங்களுடைய
ஆவணத்தை
ஒடுக்குவேன்
ஷத்திரியர்களின்
பெருமையை
நிலைநாட்டுவேன்
பரசுராமர்:
பீஷ்மா என்னுடன்
போரிடப் போவதாக
நீ எடுத்த
முடிவு தான்
நீ வாழ்க்கையில்
எடுத்த
முடிவுகளிலேயே
தவறான முடிவு
குருவிடம்
கற்றுக் கொண்ட
கலையை
வைத்துக் கொண்டே
குருவை எப்போது
எதிர்க்கத்
துணிந்தாயோ
அப்போதே நீ
என்னுடைய
எதிரியாகி விட்டாய்
குருவின்
வார்த்தையை
மதிக்காதவனுக்கு
எத்தகைய நிலை
ஏற்படும் என்பதை
இந்த உலகம்
தெரிந்து கொள்ளப்
போகிறது
வீரத்தில் சிறந்தவன்
என்று புகழப்படும்
உன்னை
ஷத்திரியர்களில்
உயர்ந்தவன் என்ற
அழைக்கப்படும்
உன்னை
போரில் தோற்கடிக்க
முடியாதவன் என்று
போற்றப்படும்
உன்னை போரில்
என்னுடைய
கணைகளால்
துளைக்கப் போகிறேன்
குருவின்
வார்த்தையை
மதிக்காத உன்னை
கொல்லப் போகிறேன்
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------11--04-2022
-------திங்கள் கிழமை
No comments:
Post a Comment