ஜபம்-பதிவு-733
(சாவேயில்லாத
சிகண்டி-67)
(பீஷ்மர்
குதிரையிலிருந்து
இறங்கி
பரசுராமரை
சந்திக்க வருகிறார்.
பரசுராமரை
வணங்கி விட்டு
பீஷ்மர் பேச
ஆரம்பிக்கிறார்)
பீஷ்மர்:
குரு பரசுராமருக்கு
சீடனின் வணக்கங்கள்
பரசுராமர்:
நீ தவறு
செய்திருக்கிறாய்
என்று உன்மேல்
குற்றம் சாட்டப்
பட்டிருக்கிறது
பீஷ்மர்:
நான் தவறு
செய்திருப்பேன்
என்று
நினைக்கிறீர்களா
பரசுராமர்:
அதைத்
தெளிவுபடுத்திக்
கொள்ளத்தான்
உன்னை
அழைத்திருக்கிறேன்
பீஷ்மர்:
நான் தவறு
செய்தது
அம்பையின்
விஷயத்தில்
என்கிறீர்களா
பரசுராமர்:
அம்பையின்
விஷயத்தில் நீ
தவறு
செய்திருக்கிறாய்
என்பதை நீயே
ஒத்துக்
கொள்கிறாயே
பீஷ்மர்:
அம்பையின்
விஷயத்தில்
நான் தவறு
செய்திருக்கிறேன்
என்று இந்த
உலகம் தான்
சொல்கிறது
பரசுராமர்:
ஏன் அது
சரியாக
இருக்கக்கூடாது
பீஷ்மர்:
உலகம் சொல்வது
அனைத்தும்
சரியாக இருந்திடுமா
பரசுராமர்:
சரியாக இருப்பதினால்
தானே சொல்கிறது
பீஷ்மர்:
உலகம் சொல்வதை
வைத்துக் கொண்டு
நான் தவறு
செய்திருக்கிறேன்
என்று
முடிவெடுத்து
விட்டீர்களா
பரசுராமர்:
உலகம்
சொல்வதை வைத்துக்
கொண்டு நான்
முடிவெடுக்கவில்லை
எது சரி
எது தவறு என்று
ஆராய்ந்து
பார்த்த பிறகே
நீ தவறு
செய்திருக்கிறாய்
என்று
சொல்கிறேன்
பீஷ்மர்:
அம்பையை சிறை
எடுத்ததை தவறு
என்கிறீர்களா
பரசுராமர்:
அம்பையை சிறை
எடுத்ததை நான்
தவறு என்று
சொல்லவில்லை
பீஷ்மர்:
பிறகு எதை
பரசுராமர்:
வேறொருவனுக்காக
சிறை எடுத்தாயே
அதைத் தான்
தவறு என்கிறேன்
பீஷ்மர்:
தம்பிக்காக
அம்பையை சிறை
எடுக்கக் கூடாதா
பரசுராமர்:
கூடாது
தம்பிக்காக
மட்டுமல்ல
யாருக்காகவும் சிறை
எடுக்கக் கூடாது
அம்பையை நீ
திருமணம்
செய்வதாக
இருந்திருந்தால்
மட்டுமே
அம்பையை சிறை
எடுத்திருக்க
வேண்டும்
வேறொருவனுக்காக
சிறை எடுத்தது
மட்டும் தவறு
கிடையாது
சிறை எடுப்பதற்கு
முன்னர் சிறை
எடுக்கப்போகும் பெண்
யாரையாவது
காதலிக்கிறாளா
என்பதை தெரிந்து
கொள்ளாமல்
சிறை எடுத்ததும்
தவறு தான்
பீஷ்மர்:
அம்பை
காதலிக்கிறாள்
என்று
தெரிந்த பிறகு
அவளை சால்வனிடம்
அனுப்பி வைத்து
விட்டேனே
பரசுராமர்:
சால்வன் தான்
ஏற்றுக்
கொள்ளவில்லையே
பீஷ்மர்:
அது சால்வனின்
தவறு
என்னுடைய
தவறு கிடையாது
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------11-04-2022
-------திங்கள் கிழமை
No comments:
Post a Comment