பரம்பொருள்-பதிவு-45
திருஞான
சம்பந்தர் :
“நான்
என்ன செய்ய
வேண்டும்
என்று நீங்கள்
நினைக்கிறீர்கள்……………….
?”
மக்கள்
:
“இறந்த
பூம்பாவைக்கு
உயிர்
கொடுக்க வேண்டும் ?
திருஞான
சம்பந்தர் :
“இறந்த
பூம்பாவைக்கு
உயிர்
கொடுப்பதன் மூலம்
என்ன
பலன் ஏற்பட்டு
விடப்போகிறது
;
ஒரு
பலனும் ஏற்பட்டு
விடப்போவதில்லை
!”
“இறந்தவரை
உயிரோடு
எழுப்பிய
பிறகு
உயிரோடு
எழுப்பப்பட்டவர்
இறக்காமல்
இருந்து
விடுவாரா………………….?
மீண்டும்
இறக்கத்தானே
போகிறார்
! ”
“
ஒருவரை உயிரோடு
எழுப்புவதன் மூலம்
எழுப்புவதன் மூலம்
எழுப்பப்பட்டவர்
இறக்காமல்
இருந்தால்
உயிரோடு
எழுப்பலாம் ;
மீண்டும்
இறக்கப்போகும்
ஒருவரை
உயிரோடு
எழுப்புவதால்
என்ன
பலன்
ஏற்பட்டு
விடப்போகிறது
;
ஒரு
பலனும் ஏற்பட்டு
விடப்போவதில்லை
!”
மக்கள்
:
“
அந்தக் குடும்பத்
தலைவரை
நம்பித்தான்
அந்த
குடும்பமே இருக்கிறது
அந்த
குடும்பத் தலைவர்
இறந்து
விட்டால் - அந்த
குடும்பமே
கஷ்டப்படும்
என்று
சொல்லத்தக்க
நிலையில்
இருப்பவர்
இறந்து
விட்டால்
இறந்து
விட்ட அந்த
மதிப்பு
மிக்க உயிரை
உயிரோடு
எழுப்பலாமா “
திருஞான
சம்பந்தர் :
“
இறந்து போன உயிர்களில்
மதிப்பு
மிக்க உயிர் ;
மிதிப்பு
இல்லாத உயிர் ;
என்று
எதுவுமே இல்லை ;
இந்த
உலகில் பிறந்த
அனைத்து
உயிர்களும்
மதிப்பு
மிக்க உயிர்கள் தான் “
“
இந்த உலகத்தில்
படைக்கபட்ட
எந்த
உயிர்களும்
ஒன்றை
ஒன்று
சார்ந்து இல்லை ;
சார்ந்து
தான் வாழ
வேண்டும்
என்ற நிலையில்
எந்த
உயிர்களையும்
இறைவன்
படைக்க வில்லை ;”
“
தன்னைத் தானே சுயமாக
காப்பாற்றிக்
கொள்ளும்
வகையில்
தான் இறைவன்
இந்த
உலகத்தில் உள்ள
அனைத்து
உயிர்களையும்
படைத்து
இருக்கிறான் ;”
“
ஒரு குடும்பத்தை
காப்பாற்றிக்
கொண்டு வரும்
குடும்பத்
தலைவராக
இருக்கும்
கணவன்
தான்
இருக்கும் போதே
தன்னுடைய
குழந்தைகளுக்கு
வேலை
வாங்கித் தர வேண்டும் ;
திருமணம்
செய்து
வைக்க
வேண்டும் ;
அவர்களுக்கு
சொத்து
சேர்த்து
வைக்க வேண்டும் ;
தான்
இறந்து விட்டால்
தன்னுடைய
குடும்பத்தை
யார்
காப்பாற்றுவார்கள் ;
யாரும்
காப்பாற்ற
மாட்டார்கள்
என்று
நினைக்கிறார்
;”
“
தன்னை வைத்துத் தான்
இந்த
குடும்பம் ஓடுகிறது
என்று
நினைக்கிறார் ;
தான்
இறந்து விட்டால்
தன்னுடைய
குடும்பத்தை
யாரும்
காப்பாற்ற மாட்டார்கள்
என்று
நினைக்கிறார் ;
எனவே,
தன்னுடைய
குழந்தைகளுக்கு
வாழ்க்கைக்குத்
தேவையான
பாதுகாப்பைச்
செய்ய
வேண்டும்
என்று நினைக்கிறார் ;”
“
ஆனால் அந்த கணவர்
இறந்து
விட்டால்-அந்த
குடும்பம்
ஒன்றும்
நடுத்தெருவிற்கு
வந்து
விடப்போவதில்லை
;
அவருடைய
மனைவியோ !
அவருடைய
மகனோ !
அவருடைய
மகளோ !
அவருடைய
குடும்பத்தை
காப்பாற்றுவார்
!”
“
கணவர் இறந்து பிறகு
அவருடைய
மனைவி
அவருடைய
குடும்பத்தை
காப்பாற்றினார்
என்ற செய்தியை
நீங்கள்
கேட்டதில்லையா ?”
“கணவர்
இறந்த பிறகு
அவருடைய
மகன்
அவருடைய
குடும்பத்தை
காப்பாற்றினார்
என்ற செய்தியை
நீங்கள்
கேட்டதில்லையா? “
“
கணவர் இறந்த பிறகு
அவருடைய
மகள்
அவருடைய
குடும்பத்தை
காப்பாற்றினார்
என்ற செய்தியை
நீங்கள்
கேட்டதில்லையா ?
“யாரையும்
யாரையும் நம்பி
யாரும் பிறக்கவுமில்லை
யாரையும்
யாரையும்
சார்ந்து
யாரும் வாழ
வேண்டிய
அவசியமும்
யாருக்கும்
இல்லை”
“இறந்தவர்களை
எழுப்புவதே
அவசியம்
இல்லை என்ற
நிலையில்
இருக்கும் போது
அதில்
மதிப்பு மிக்க உயிர்
என்பதைப்
பற்றி சிந்திக்க
வேண்டிய
அவசியம் இல்லை”
மக்கள்
:
“நம்
முன்னோர்கள்
இறந்தவரை
எழுப்புவது
அற்புதம்
என்று சொல்லி
விட்டுச்
சென்று இருக்கிறார்கள்”
“நீங்கள்
இறந்தவரை
எழுப்புவது
அற்புதம் இல்லை
என்று
சொல்ல வருகிறீர்களா”
--------
இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
22-07-2019
//////////////////////////////////////////////////////////