March 18, 2019

திருக்குறள்-பதிவு-128


                       திருக்குறள்-பதிவு-128

"மனிதனை
மனிதத்தன்மை கொண்ட
மனிதனாக மாற்றாமல் ;
மதவெறி கொண்ட
மனிதனாக மாற்றி ;
மக்களை அடிமைப்படுத்தும்
வேலையை மதங்கள்
செய்து கொண்டிருக்கின்றன
என்பதை 1548-1600-ல்
ஜியார்டானோ புருனோ
கண்டுபிடித்து சொன்னார்"

"ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட
17-02-1600-;ம் ஆண்டிலிருந்து
250 ஆண்டுகள் கழித்து
அதாவது தற்போது
1889-ம் ஆண்டு மதங்கள்
செய்யும் செயல்களை - நாம்
நன்றாக உற்று பார்த்தால் ;
மதத்தின் நடவடிக்கைகளை
நாம் ஆராய்ந்து பார்த்தால் ;
மதங்கள் மனிதனை
அடிமையாக வைப்பதற்குரிய
செயல்களை செய்து
கொண்டிருக்கிறது என்பதை
நம்மால் உணர்ந்து கொள்ள
முடியும்; இதன் மூலம்
ஜியார்டானோ புருனோ
எவ்வளவு தொலைநோக்கு
பார்வையுடன் சொல்லி
இருக்கிறார் என்பது
நமக்கு தெரியவரும் "

" இதனை நாம் உணர்ந்து
கொண்டு இப்போதாவது
விழித்துக் கொள்ளவில்லை
எனில் - நாமும் நம்முடைய
வருங்கால சந்ததியினரும்
மதத்திற்கு அடிமையாக
இருக்க வேண்டிய நிலைவரும்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும் "

" மக்கள் எப்படி இருக்கக்
கூடாது என்பதற்கு
17-02--1600-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட போது எந்தவித
எதிர்ப்பும் தெரிவிக்காமல்
தங்கள் வாழ்க்கையை மட்டும்
நினைத்துக் கொண்டு
சுயநலமாக இருந்து கொண்டு
உயிருக்கு பயந்து கொண்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டு
அமைதியாக இருந்த
மக்களே சாட்சி "

" ஜியாடானோ புருனோவின்
சிலை திறப்பு விழாவிற்கு
ஆதரவு தந்து - சிலை
திறப்பு விழாவில்
கலந்து கொள்வதன் மூலம்
       
"தங்களுக்கு கிறிஸ்தவ
மதத்தின் மூலம் கிடைத்து
வரும் அனைத்து சலுகைகளும்
ரத்து செய்யப்பட்டாலும்
பரவாயில்லை - என்று
இங்கு கூடியிருக்கும்
மக்களாகிய நீங்கள் ;

"உலகின் எந்த மூலையில்
உள்ள சர்ச்சுகளிலும்
உறுப்பினராக இருக்க
முடியாது என்றாலும்
பரவாயில்லை - என்று
இங்கு கூடியிருக்கும்
மக்களாகிய நீங்கள் ;
       
"கிறிஸ்தவ மதத்தை விட்டு
விலக்கி வைத்தாலும்
பரவாயில்லை - என்று
எதைக் கண்டும் அஞ்சாமல்
இங்கு கூடியிருக்கும்
மக்களாகிய நீங்கள் ;

"1889 ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
ஜியார்டானோ புருனோவின்
சிலை திறப்பு விழாவில்
கலந்து கொண்ட
மக்களாகிய நீங்கள் ;

" நீங்களே மக்கள் எப்படி
இருக்க வேண்டும்
என்பதற்கு சாட்சி ; "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு இருந்தால்
தங்களுக்கு ஆபத்து-என்று
பயந்த காரணத்தினால்
அவரை அழிக்க நினைத்தனர் ;
அதனால் அவரை உயிரோடு
எரித்து கொன்று விட்டனர் ; "

" ஜியார்டானோ புருனோ
சிலை இருந்தால்
தங்களுக்கு ஆபத்து
என்று இந்த சிலையை
நிறுவ விடாமல் தடுக்க
முயற்சி செய்தனர்;-ஆனால்
அவர்களால் முடியவில்லை ; "

" ஜியார்டனோ புருனோ
உயிரோடு இருந்தபோது
அவரை வீழ்த்தி வெற்றி
பெற்றவர்கள் - அவர்
இறந்த பிறகு அவரை
வீழ்த்த முடியாமல்
தோல்வி அடைந்துள்ளனர் ; "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு இருந்தபோது
அவரை பார்த்து பயந்த
கிறிஸ்தவ சமுதாயம் ;
அவர் இறந்த பிறகும்
அவரைப் பார்த்து
பயப்படுகிறது என்றால்
ஜியார்டானோ புருனோ செய்த
சேவை எவ்வளவு அளப்பறிய
சேவை என்பதை -நாம்
தெரிந்து கொள்ளலாம் "
       
" ஜியார்டானோ புருனோவின்
சிலை ஒரு சிலை இல்லை
இது ஒரு வரலாற்று
சின்னம் இந்த வரலாற்று
சின்னம் - பல  
நூற்றாண்டுகளைக் கடந்து
இந்த உலகம் இருக்கும்
அளவும் ஜியார்டானோ
புருனோவின் ஒப்பற்ற
சேவையை இந்த உலகத்திற்கு
உணர்த்திய வண்ணம் இருந்து
கொண்டு தான் இருக்கும்"

"ஜியார்டானோ புருனோவின்
சிலை ஜியார்டானோ
புருனோவின் நினைவைப்
போற்றுவதற்கு மட்டும்
நிறுவப்பட்ட சிலை இல்லை "

" ஜியார்டானோ புருனோவின்
சிலை தற்கால சமுதாயத்திற்கும் ;
எதிர்கால சந்ததியினருக்கும் ;
ஒரு படிப்பினையாக இருக்க
வேண்டும் என்ற காரணத்திற்காக
அமைக்கப்பட்டுள்ளது என்பதை
அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும்"

என்று ஜியார்டானோ
புருனோவின் சிலை திறப்பு
விழாவில் கலந்து கொண்ட
அறிஞர்களும் ; தத்துவ
மேதைகளும் ;
ஜியார்டோனோ புருனோவை
பின்பற்றுபவர்களும் ;
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்களும் ;
தங்களுடைய புரட்சிக்
கருத்துக்களை அனல் தெறிக்க
பேசினர் என்பதை வரலாறு
பதிவு செய்திருக்கிறது..

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  18-03-2019
/////////////////////////////////////////////////////


திருக்குறள்-பதிவு-127


                  திருக்குறள்-பதிவு-127

“ஒரு மதத்திலிருந்து மற்றொரு
மதத்திற்கு மதம் மாற்றுவதன்
மூலம் - மனிதனில்
மதத்தன்மையை விதைத்து
மதத் தன்மையுடைய
மனிதனாக மாற்றப்பட்ட
மனிதன் மூலமாக
அன்பையும் கருணையையும்
இந்த சமுதாயத்தில் பரவிடச்
செய்வதே மதம் மாற்றுவதன்
முக்கிய குறிக்கோளாக இருந்தது”

“ஆனால் மதமாற்றம்
என்ற பெயரில்
மதத்தன்மை கொண்ட மனிதனாக
மனிதனை மாற்றாமல்
அன்பும் கருணையும் இல்லாத
மனிதனை உருவாக்கி
தங்கள் மதத்தைச்
சார்ந்தவர்களுடன்
மட்டும் உறவு வைத்துக்
கொண்டு - அவர்களுக்கு மட்டுமே
உதவி செய்ய வேண்டும்
பிற மதத்தைச் சேர்ந்தவர்களுடன்
உறவு வைத்துக் கொள்ளக்கூடாது
அப்படியே உறவு வைத்துக்
கொண்டாலும் யாராக
இருந்தாலும் சரி
யாருக்கும் எந்த உதவியும்
செய்யக்கூடாது - என்ற
நிலையை - மதம் மாற்றத்தின்
மூலம் செய்து வருகிறார்கள்”

“ஒருவரை ஒரு மதத்திலிருந்து
மற்றொரு மதத்திற்கு மதம்
மாற்றுவதன் மூலம்
மதத்தன்மை கொண்ட
மனிதனை உருவாக்காமல்
மதவெறி கொண்ட
மனிதனை முதலில்
உருவாக்குகிறார்கள் - தங்கள்
மதத்தைச்  சார்ந்தவர்களின்
எண்ணிக்கையை - முதலில்
அதிகப்படுத்திக் கொண்டே
வருகிறார்கள்”

“மதம் மாற்றுவதற்காக
மதவாதிகள் பல்வேறு
வழிகளைக் கையாள்கிறார்கள்
ஏழைகளாக இருப்பவர்களையும்
அறியாமையில் இருப்பவர்களையும்
தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்காக
குறிவைத்து பிடிக்கிறார்கள்
தங்களுடைய ஏழ்மையின்
காரணமாகவும்
தங்களுடைய அறியாமையின்
காரணமாகவும் பலர்
மதம் மாறுகிறார்கள்”

“இவ்வாறு மதம் மாறுபவர்களில்
பெரும்பாலானவர்கள் மதத்தில்
உள்ள கொள்கைகளுக்காகவோ
அதில் உள்ள நல்ல
கருத்துகளுக்காகவோ - ஒரு
மதத்திலிருந்து மற்றொரு
மதத்திற்கு மாறுவதில்லை
தங்களுடைய ஏழ்மையை
எந்த மதம் தீர்க்கிறதோ
அந்த மதத்தில் சேர்கிறார்கள்”

“இவ்வாறு ஒவ்வொரு மதமும்
மதம் மாற்றத்திற்காக
இத்தகைய வழிமுறைகளைக்
கையாண்டு மக்களை - மதம்
மாற்றுகிறது இவ்வாறு மதம்
மாற்றுவதற்கு ஒருசில
முக்கியமானவர்களை
பயன்படுத்துகிறது”

“ஒவ்வொரு மதமும்
வேறு ஒரு மதத்திலிருந்து
தங்கள் மதத்திற்கு மதம்
மாற்றுவதற்கு - சிறந்த
பேச்சாளர்களை உருவாக்குகிறது
இவர்களுடைய சாதுர்யமான
பேச்சாலும் வாழ்க்கைக்கு
உதவாத கருத்துக்களாலும்
மக்களை நல்வழிப்
படுத்துவதற்கு தேவையில்லாத
பேச்சுக்களாலும் மக்களை
எளிதில் முட்டாளாக்கி
மதம் மாற்றுகிறார்கள்”

“மக்களுக்கு நல்வழி காட்டி
மக்களை நல்லவர்களாக
மாற்ற வேண்டும் - என்ற
காரணத்திற்காக மதம் மாற்றம்
செய்யப்படுவது இல்லை
தங்கள் மதத்திற்கு ஆள் பிடித்து
மதத்தில் உள்ளவர்களின்
எண்ணிக்கையை அதிகப்
படுத்துவது தான் - மதம்
மாற்றத்தின் முக்கிய நோக்கமாக
இருந்து வருகிறது”

“இவ்வாறாக தங்கள் மதத்தில்
சேர்ந்தவர்கள் எண்ணிக்கையை
அதிகப் படுத்துகின்றனர்
பிற மதங்களை அழிக்க
எத்தகைய வழிமுறைகளைக்
கையாள முடியுமோ
அத்தனையையும்
கையாள்கின்றனர் - தங்கள்
மதம் மட்டுமே உலகம்
முழுவதும் இருக்க வேண்டும்
என்ற நோக்கத்துடன்
தங்கள் மதத்தில்
உள்ளவர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்துகின்றனர்”

“இவ்வாறாக மதம் மாற்றத்தின்
மூலம் உலகம் முழுவதும்
தங்கள் மதத்தைச்
சேர்ந்தவர்களை
அதிக அளவில் உருவாக்கி
வைக்கின்றனர்”

“உலகின் ஏதேனும் ஒரு
அதிகார மையத்தில்
இருந்து கொண்டு
உலகில் எந்த மூலையிலும்
உள்ள தங்கள் மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கு
கட்டளை இடுகின்றனர்
மதரீதியாக இடப்படும்
கட்டளைகளை ஏற்று
மதவாதிகள் செயல்படுகின்றனர்”

“அந்த கட்டளைகைள்
சரியானவையா
தவறானவையா - என்று கூட
சிந்தித்துப் பார்க்காமல்
அவர்கள் இடும் கட்டளைகளை
தலையாட்டி பொம்மைகளாக
ஏன் என்று கூட கேட்காமல்
செயல்களைச் செய்கிறார்கள்”

“இதன் மூலம் மக்களை
முட்டாளாக்கி
அடிமைப்படுத்தும் நிலையை
உருவாக்குகின்றனர்”

“அரசியல் அதிகாரம்
பொருளாதார பாதுகாப்பு
ஆகியவற்றைப் பயன்படுத்தி
மதம் மாற்றம் செய்யப்பட்டு
உலகம் முழுவதும் மதம்
மாற்றம் செய்யப்பட்ட
மக்களை கட்டுப்படுத்தி
தங்கள் கட்டளைகளை
ஏற்று நடத்தக்கூடிய
அடிமைகளை உருவாக்கக்கூடிய
முயற்சிகளை மதங்கள் செய்து
கொண்டு இருக்கின்றன
என்பதை உணர்ந்து
ஜியார்டானோ புருனோ
சொன்ன காரணத்தினால்
மதம் அவரை
உயிரோடு எரித்து விட்டது”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  17-03-2019
/////////////////////////////////////////////////////