March 18, 2019

திருக்குறள்-பதிவு-127


                  திருக்குறள்-பதிவு-127

“ஒரு மதத்திலிருந்து மற்றொரு
மதத்திற்கு மதம் மாற்றுவதன்
மூலம் - மனிதனில்
மதத்தன்மையை விதைத்து
மதத் தன்மையுடைய
மனிதனாக மாற்றப்பட்ட
மனிதன் மூலமாக
அன்பையும் கருணையையும்
இந்த சமுதாயத்தில் பரவிடச்
செய்வதே மதம் மாற்றுவதன்
முக்கிய குறிக்கோளாக இருந்தது”

“ஆனால் மதமாற்றம்
என்ற பெயரில்
மதத்தன்மை கொண்ட மனிதனாக
மனிதனை மாற்றாமல்
அன்பும் கருணையும் இல்லாத
மனிதனை உருவாக்கி
தங்கள் மதத்தைச்
சார்ந்தவர்களுடன்
மட்டும் உறவு வைத்துக்
கொண்டு - அவர்களுக்கு மட்டுமே
உதவி செய்ய வேண்டும்
பிற மதத்தைச் சேர்ந்தவர்களுடன்
உறவு வைத்துக் கொள்ளக்கூடாது
அப்படியே உறவு வைத்துக்
கொண்டாலும் யாராக
இருந்தாலும் சரி
யாருக்கும் எந்த உதவியும்
செய்யக்கூடாது - என்ற
நிலையை - மதம் மாற்றத்தின்
மூலம் செய்து வருகிறார்கள்”

“ஒருவரை ஒரு மதத்திலிருந்து
மற்றொரு மதத்திற்கு மதம்
மாற்றுவதன் மூலம்
மதத்தன்மை கொண்ட
மனிதனை உருவாக்காமல்
மதவெறி கொண்ட
மனிதனை முதலில்
உருவாக்குகிறார்கள் - தங்கள்
மதத்தைச்  சார்ந்தவர்களின்
எண்ணிக்கையை - முதலில்
அதிகப்படுத்திக் கொண்டே
வருகிறார்கள்”

“மதம் மாற்றுவதற்காக
மதவாதிகள் பல்வேறு
வழிகளைக் கையாள்கிறார்கள்
ஏழைகளாக இருப்பவர்களையும்
அறியாமையில் இருப்பவர்களையும்
தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்காக
குறிவைத்து பிடிக்கிறார்கள்
தங்களுடைய ஏழ்மையின்
காரணமாகவும்
தங்களுடைய அறியாமையின்
காரணமாகவும் பலர்
மதம் மாறுகிறார்கள்”

“இவ்வாறு மதம் மாறுபவர்களில்
பெரும்பாலானவர்கள் மதத்தில்
உள்ள கொள்கைகளுக்காகவோ
அதில் உள்ள நல்ல
கருத்துகளுக்காகவோ - ஒரு
மதத்திலிருந்து மற்றொரு
மதத்திற்கு மாறுவதில்லை
தங்களுடைய ஏழ்மையை
எந்த மதம் தீர்க்கிறதோ
அந்த மதத்தில் சேர்கிறார்கள்”

“இவ்வாறு ஒவ்வொரு மதமும்
மதம் மாற்றத்திற்காக
இத்தகைய வழிமுறைகளைக்
கையாண்டு மக்களை - மதம்
மாற்றுகிறது இவ்வாறு மதம்
மாற்றுவதற்கு ஒருசில
முக்கியமானவர்களை
பயன்படுத்துகிறது”

“ஒவ்வொரு மதமும்
வேறு ஒரு மதத்திலிருந்து
தங்கள் மதத்திற்கு மதம்
மாற்றுவதற்கு - சிறந்த
பேச்சாளர்களை உருவாக்குகிறது
இவர்களுடைய சாதுர்யமான
பேச்சாலும் வாழ்க்கைக்கு
உதவாத கருத்துக்களாலும்
மக்களை நல்வழிப்
படுத்துவதற்கு தேவையில்லாத
பேச்சுக்களாலும் மக்களை
எளிதில் முட்டாளாக்கி
மதம் மாற்றுகிறார்கள்”

“மக்களுக்கு நல்வழி காட்டி
மக்களை நல்லவர்களாக
மாற்ற வேண்டும் - என்ற
காரணத்திற்காக மதம் மாற்றம்
செய்யப்படுவது இல்லை
தங்கள் மதத்திற்கு ஆள் பிடித்து
மதத்தில் உள்ளவர்களின்
எண்ணிக்கையை அதிகப்
படுத்துவது தான் - மதம்
மாற்றத்தின் முக்கிய நோக்கமாக
இருந்து வருகிறது”

“இவ்வாறாக தங்கள் மதத்தில்
சேர்ந்தவர்கள் எண்ணிக்கையை
அதிகப் படுத்துகின்றனர்
பிற மதங்களை அழிக்க
எத்தகைய வழிமுறைகளைக்
கையாள முடியுமோ
அத்தனையையும்
கையாள்கின்றனர் - தங்கள்
மதம் மட்டுமே உலகம்
முழுவதும் இருக்க வேண்டும்
என்ற நோக்கத்துடன்
தங்கள் மதத்தில்
உள்ளவர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்துகின்றனர்”

“இவ்வாறாக மதம் மாற்றத்தின்
மூலம் உலகம் முழுவதும்
தங்கள் மதத்தைச்
சேர்ந்தவர்களை
அதிக அளவில் உருவாக்கி
வைக்கின்றனர்”

“உலகின் ஏதேனும் ஒரு
அதிகார மையத்தில்
இருந்து கொண்டு
உலகில் எந்த மூலையிலும்
உள்ள தங்கள் மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கு
கட்டளை இடுகின்றனர்
மதரீதியாக இடப்படும்
கட்டளைகளை ஏற்று
மதவாதிகள் செயல்படுகின்றனர்”

“அந்த கட்டளைகைள்
சரியானவையா
தவறானவையா - என்று கூட
சிந்தித்துப் பார்க்காமல்
அவர்கள் இடும் கட்டளைகளை
தலையாட்டி பொம்மைகளாக
ஏன் என்று கூட கேட்காமல்
செயல்களைச் செய்கிறார்கள்”

“இதன் மூலம் மக்களை
முட்டாளாக்கி
அடிமைப்படுத்தும் நிலையை
உருவாக்குகின்றனர்”

“அரசியல் அதிகாரம்
பொருளாதார பாதுகாப்பு
ஆகியவற்றைப் பயன்படுத்தி
மதம் மாற்றம் செய்யப்பட்டு
உலகம் முழுவதும் மதம்
மாற்றம் செய்யப்பட்ட
மக்களை கட்டுப்படுத்தி
தங்கள் கட்டளைகளை
ஏற்று நடத்தக்கூடிய
அடிமைகளை உருவாக்கக்கூடிய
முயற்சிகளை மதங்கள் செய்து
கொண்டு இருக்கின்றன
என்பதை உணர்ந்து
ஜியார்டானோ புருனோ
சொன்ன காரணத்தினால்
மதம் அவரை
உயிரோடு எரித்து விட்டது”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  17-03-2019
/////////////////////////////////////////////////////




No comments:

Post a Comment