July 19, 2019

பரம்பொருள்-பதிவு-44


                   பரம்பொருள்-பதிவு-44

சிவநேசர் :
" கடல் கடந்து வாணிபம்
செய்து நான் தேடிய
அளவற்ற செல்வத்தை
என்னிடம் மட்டும்
வைத்துக் கொள்ளாமல்
தேவைப்படுவோருக்கு
தானங்கள் பலவற்றை
செய்தேன் ;"

" ஏழை எளியவர்களுக்கு
நான் செய்த தானத்தின்
பலனாக எனக்கு கிடைத்த
புண்ணியத்தின் மூலமாகவும் ;"

" அண்ட சராசரங்கள்
அனைத்தையும்
தன்னுள் வைத்து இயக்கி
காப்பாற்றி வழிநடத்திக்
கொண்டிருக்கும் எல்லாம்
வல்ல பரம்பொருளான
சிவத்திற்கு தொண்டு
செய்யும் சிவனடியார்களை
உபசரித்ததினால்
எனக்குக் கிடைத்த
புண்ணியத்தின் மூலமாகவும் ;"

"சைவ நெறியைப் பின்பற்றுதல் ;
சிவனை வணங்குதல் ;
சிவநாமத்தை உச்சரித்தல் ;
ஆகியவற்றினால்
எனக்குக் கிடைத்த
அருளின் மூலமாகவும் ;"

" நான் செய்த தவத்தின்
பலனாக எனக்குக் கிடைத்த
வரத்தின் மூலமாகவும் ;"

“எனக்கு மகளாகப் பிறந்தவள்
தான் பூம்பாவை! "

என் மகள் பூம்பாவை
"அழகின் உருவமாகப்
பிறந்தவள் ;"

"அன்பே வடிவமாக
வளர்ந்தவள் ;"

"கருணையே குணமாகத்
திகழ்ந்தவள் ;"

"வீரத்தின் வித்தாக
முளைத்தவள்;"

"பொறுமையின்
சிகரமாக நடந்தவள்;"

"உண்மையை
வார்த்தையாக பேசியவள் ;"

"ஒழுக்கத்திற்கு
உதாரணமாக வாழ்ந்தவள் ;"

"ஏழைகளின் துயர்
கண்டு வாடியவள்;"

"துன்பப்படுவோரின்
துயர் கண்டு துடித்தவள் ;"

"இல்லாதவர்களின் நிலை
கண்டு இரங்கியவள் ;"

"அறிவு. அழகு. அன்பு ஆகிய
அனைத்தையும் தன்னுள்
கொண்டு நல்லோர்
பாரட்டும் வண்ணமும் ;
உயர்ந்தோர் போற்றும்
வண்ணமும்; வாழ்ந்தவள் ;"

" ஒரு பெண் இந்த
சமுதாயத்தில் எப்படி
இருக்க வேண்டுமோ
அப்படி இருந்தவள் ; "

"அனைத்து நற்குணங்களையும்
ஒருங்கே பெற்று
நற்குணவதியாக திகழ்ந்தவள் ;"

" பூம்பாவை
உங்களுக்கென்றே பிறந்தவள் ;
உங்களுக்கென்றே வளர்ந்தவள் ;
உங்களைத் திருமணம்
செய்து கொண்டு உங்களுக்கு
பணிவிடை செய்து
இல்லறத்தை நல்லறமாக
மாற்றுவதற்காகவே
வாழ்ந்தவள் ; "

" இத்தகைய சிறப்புகள்
பலவற்றை தன்னுள் கொண்ட
பூம்பாவைக்கு வயது
ஏழானபோது அனைவருடைய
மனங்களையும் அன்பால்
தீண்டியவளை
பாம்பு ஒன்று நஞ்சு
கொண்டு தீண்டியது ;"

" அதனைத் தொடர்ந்து
மரணமும் அவளைத்
தீண்டியது ;"

"அதனைத் தொடர்ந்து
நெருப்பும் அவளைத்
தீண்டியது ;"

" அவள் தங்களைத்
தீண்டும் பாக்கியமும் ;
தாங்கள் அவளைத்
தீண்டும் பாக்கியமும் ;
அவளுக்கு கிடைக்கவில்லை;"

"என் மகளை நெருப்பு
தீண்டியதால் உண்டானது
தான் இந்த குடத்தில்
உள்ள எலும்புகளும்
சாம்பலும் ;- ஆமாம்
இந்த குடத்தில் என் மகள்
பூம்பாவையின் எலும்புகளும்
சாம்பலும் உள்ளன ;"

" என் மகள் பூம்பாவை
உங்களுக்காகவே பிறந்தவள் ;
உங்களுடைய மனைவியாக
இருக்கவே வளர்ந்தவள் ;
என்ற காரணத்தினால்
பூம்பாவையின் அஸ்தியை
உங்களிடம் ஒப்படைப்பதற்கு
நாங்கள் காத்துக்
கொண்டிருந்தோம்;"

" நீங்களே நேரில் வந்து
விட்டீர்கள் - இந்த அஸ்தியை
பெற்றுக் கொள்ளுங்கள் !"

" இதை தாங்கள் பெற்றுக்
கொண்டீர்கள் என்றால்
என்னுடைய கடமை
முடிந்தது என்று நான்
நினைத்துக் கொள்வேன் !"

"என் மகள் பூம்பாவையின்
அஸ்தியை தாங்கள்
பெற்றுக் கொள்ள் வேண்டும்"

திருஞானசம்பந்தர் :
" பூம்பாவையின் அஸ்தியை
பெற்றுக் கொண்டு நான் என்ன
செய்ய வேண்டும் என்று
நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் "

மக்கள் :
"இறந்த பூம்பாவையை
உயிர்பெறச் செய்ய
வேண்டும்…………………….!"

திருஞானசம்பந்தர் :
"என்ன…………………………………….?"

மக்கள் :
"இறந்த பூம்பாவைக்கு
உயிர் கொடுக்க
வேண்டும்………………….!"

திருஞானசம்பந்தர் :
"_ _ __ _ __ _ __ _ _"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 19-07-2019
//////////////////////////////////////////////////////////