பரம்பொருள்-பதிவு-44
சிவநேசர்
:
"
கடல் கடந்து வாணிபம்
செய்து
நான் தேடிய
அளவற்ற
செல்வத்தை
என்னிடம்
மட்டும்
வைத்துக்
கொள்ளாமல்
தேவைப்படுவோருக்கு
தானங்கள்
பலவற்றை
செய்தேன்
;"
"
ஏழை எளியவர்களுக்கு
நான்
செய்த தானத்தின்
பலனாக
எனக்கு கிடைத்த
புண்ணியத்தின்
மூலமாகவும் ;"
"
அண்ட சராசரங்கள்
அனைத்தையும்
தன்னுள்
வைத்து இயக்கி
காப்பாற்றி
வழிநடத்திக்
கொண்டிருக்கும்
எல்லாம்
வல்ல
பரம்பொருளான
சிவத்திற்கு
தொண்டு
செய்யும்
சிவனடியார்களை
உபசரித்ததினால்
எனக்குக்
கிடைத்த
புண்ணியத்தின்
மூலமாகவும் ;"
"சைவ
நெறியைப் பின்பற்றுதல் ;
சிவனை
வணங்குதல் ;
சிவநாமத்தை
உச்சரித்தல் ;
ஆகியவற்றினால்
எனக்குக்
கிடைத்த
அருளின்
மூலமாகவும் ;"
"
நான் செய்த தவத்தின்
பலனாக
எனக்குக் கிடைத்த
வரத்தின்
மூலமாகவும் ;"
“எனக்கு
மகளாகப் பிறந்தவள்
தான்
பூம்பாவை! "
என்
மகள் பூம்பாவை
"அழகின்
உருவமாகப்
பிறந்தவள்
;"
"அன்பே
வடிவமாக
வளர்ந்தவள்
;"
"கருணையே
குணமாகத்
திகழ்ந்தவள்
;"
"வீரத்தின்
வித்தாக
முளைத்தவள்;"
"பொறுமையின்
சிகரமாக
நடந்தவள்;"
"உண்மையை
வார்த்தையாக
பேசியவள் ;"
"ஒழுக்கத்திற்கு
உதாரணமாக
வாழ்ந்தவள் ;"
"ஏழைகளின்
துயர்
கண்டு
வாடியவள்;"
"துன்பப்படுவோரின்
துயர்
கண்டு துடித்தவள் ;"
"இல்லாதவர்களின்
நிலை
கண்டு
இரங்கியவள் ;"
"அறிவு.
அழகு. அன்பு ஆகிய
அனைத்தையும்
தன்னுள்
கொண்டு
நல்லோர்
பாரட்டும்
வண்ணமும் ;
உயர்ந்தோர்
போற்றும்
வண்ணமும்;
வாழ்ந்தவள் ;"
"
ஒரு பெண் இந்த
சமுதாயத்தில்
எப்படி
இருக்க
வேண்டுமோ
அப்படி
இருந்தவள் ; "
"அனைத்து
நற்குணங்களையும்
ஒருங்கே
பெற்று
நற்குணவதியாக
திகழ்ந்தவள் ;"
"
பூம்பாவை
உங்களுக்கென்றே
பிறந்தவள் ;
உங்களுக்கென்றே
வளர்ந்தவள் ;
உங்களைத்
திருமணம்
செய்து
கொண்டு உங்களுக்கு
பணிவிடை
செய்து
இல்லறத்தை
நல்லறமாக
மாற்றுவதற்காகவே
வாழ்ந்தவள்
; "
"
இத்தகைய சிறப்புகள்
பலவற்றை
தன்னுள் கொண்ட
பூம்பாவைக்கு
வயது
ஏழானபோது
அனைவருடைய
மனங்களையும்
அன்பால்
தீண்டியவளை
பாம்பு
ஒன்று நஞ்சு
கொண்டு
தீண்டியது ;"
"
அதனைத் தொடர்ந்து
மரணமும்
அவளைத்
தீண்டியது
;"
"அதனைத்
தொடர்ந்து
நெருப்பும்
அவளைத்
தீண்டியது
;"
"
அவள் தங்களைத்
தீண்டும்
பாக்கியமும் ;
தாங்கள்
அவளைத்
தீண்டும்
பாக்கியமும் ;
அவளுக்கு
கிடைக்கவில்லை;"
"என்
மகளை நெருப்பு
தீண்டியதால்
உண்டானது
தான்
இந்த குடத்தில்
உள்ள
எலும்புகளும்
சாம்பலும்
;- ஆமாம்
இந்த
குடத்தில் என் மகள்
பூம்பாவையின்
எலும்புகளும்
சாம்பலும்
உள்ளன ;"
"
என் மகள் பூம்பாவை
உங்களுக்காகவே
பிறந்தவள் ;
உங்களுடைய
மனைவியாக
இருக்கவே
வளர்ந்தவள் ;
என்ற
காரணத்தினால்
பூம்பாவையின்
அஸ்தியை
உங்களிடம்
ஒப்படைப்பதற்கு
நாங்கள்
காத்துக்
கொண்டிருந்தோம்;"
"
நீங்களே நேரில் வந்து
விட்டீர்கள்
- இந்த அஸ்தியை
பெற்றுக்
கொள்ளுங்கள் !"
"
இதை தாங்கள் பெற்றுக்
கொண்டீர்கள்
என்றால்
என்னுடைய
கடமை
முடிந்தது
என்று நான்
நினைத்துக்
கொள்வேன் !"
"என்
மகள் பூம்பாவையின்
அஸ்தியை
தாங்கள்
பெற்றுக்
கொள்ள் வேண்டும்"
திருஞானசம்பந்தர்
:
"
பூம்பாவையின் அஸ்தியை
பெற்றுக்
கொண்டு நான் என்ன
செய்ய
வேண்டும் என்று
நீங்கள்
எதிர்பார்க்கிறீர்கள் "
மக்கள்
:
"இறந்த
பூம்பாவையை
உயிர்பெறச்
செய்ய
வேண்டும்…………………….!"
திருஞானசம்பந்தர்
:
"என்ன…………………………………….?"
மக்கள்
:
"இறந்த
பூம்பாவைக்கு
உயிர்
கொடுக்க
வேண்டும்………………….!"
திருஞானசம்பந்தர்
:
"_
_ __ _ __ _ __ _ _"
--------
இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
19-07-2019
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment