July 18, 2019

பரம்பொருள்-பதிவு-43


                              பரம்பொருள்-பதிவு-43

“ திருமயிலாப்பூரில்
குடி கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல
பரம்பொருளான
சிவபெருமானை
தரிசிக்கும் பொருட்டு
திருவொற்றியூரிலிருந்து
திருமயிலாப்பூர் வந்த
திருஞான சம்பந்தர்
கபாலீச்சுரரையும் ;
கற்பகவல்லியையும் ;
பன்முறை பணிந்து
வணங்கி விட்டு
கோயிலை விட்டு
வெளியே வந்தார் ;”

“கோயிலை விட்டு
வெளியே வந்த
திருஞான சம்பந்தரரை
பெருமானே! வருக! வருக!
தாங்கள் வரவு
நல்வரவு ஆகட்டும்!- என்று
அழைத்துக் கொண்டே
திருஞான சம்பந்தரை
நோக்கி ஓடி வந்தார்
சிவநேசர் “

(தன்னை நோக்கி ஓடி
வந்தவரைப் பார்த்து அவர்
யார் என்று மக்களைப்
பார்த்துக் கேட்டார்
திருஞான சம்பந்தர்)

மக்கள் :
“இவர் தான் சிவநேசர் !”

திருஞானசம்பந்தர் :
“இந்த உலகத்தை எல்லாம்
கட்டி காப்பாற்றிக்
கொண்டிருக்கும் சிவனை
தரிசிப்பதற்காக நான்
வரும் வழியில் எனக்கு
எந்தவிதத்திலும் உடற்
களைப்பு ஏற்பட்டுவிடக்
கூடாது என்ற
காரணத்திற்காக - நான்
தங்கி இருந்த
திருவொற்றியூரிலிருந்து
திருமயிலாப்பூர் வரை
நடைப்பந்தர் அமைத்த
மாபெரும் சிவபக்தர்
சிவநேசரா இவர் ;”

மக்கள் :
“ ஆமாம் - இவர்
தான் சிவநேசர் “

(சிவநேசர் திருஞான
சம்பந்தரை வணங்கிய
நிலையில் திருஞான
சம்பந்தர் முனனால்
சிவநேசர் நிற்கிறார்)

திருஞானசம்பந்தர் :
“சிவநேசரே வணக்கம் !”

“தங்களை சந்தித்ததில்
நான் மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன் !”

“ஆண்டவர் மேல் பக்தி
கொண்டு ஆண்டவருக்கு
தொண்டு செய்து
ஆண்டவரின் அருளைப்
பெற்றவர்களைப் பார்த்து
இருக்கிறேன் - ஆனால்
ஆண்டவரின் அடியார்களுக்கு
தொண்டு செய்வதின் மூலம்
ஆண்டவரின் அருளைப்
பெற்றவரை இப்போது
தான் பார்க்கிறேன் !”

“சிவநேசரே! தங்கள் அன்பு
கண்டு வியந்து நிற்கிறேன்!”

“தாங்கள் செய்த செயலைக்
கண்டு என்னால் பேச
முடியவில்லை - மெய்
சிலிர்த்து நிற்கிறேன்!”

“ஆண்டவரின் மேல் காட்டும்
பக்தியை சிவனடியார்களின்
மேலும் காட்டுவதைக் கண்டு
மலைத்து நிற்கிறேன்!”

“சிவனுக்கு தொண்டு செய்யும்
எவ்வளவோ சிவனடியார்கள்
இருந்த போதிலும் - இந்த
எளியவன் மீது தாங்கள்
வைத்திருக்கும் பற்று
கண்டு பேச்சற்று நிற்கிறேன்!”

“இறைவன் அருள் உங்களுக்கு
பரிபூரிணமாக கிடைக்கட்டும்!”

(என்று சொல்லிக் கொண்டே
திருஞானசம்பந்தர்
கன்னிமாடத்தில் ஒரு
பீடத்தில் வைக்கப்பட்ட
குடத்தைப் பார்த்தார்)

திருஞானசம்பந்தர் :
“கன்னி மாடத்தில் பீடத்தில்
ஒரு குடத்தை வைத்து
அந்த குடத்திற்கு பொன்னும்
மணியும் பூட்டியும்
மாலைகள் சாத்தியும்
பல்வேறு அலங்காரங்களையும்
செய்து வைத்திருப்பவர்
யார்………………………………………….? “

“அவர் எங்கிருக்கிறார்?”

“ஏன் அவ்வாறு
செய்து வைத்திருக்கிறார்”

“அந்த குடத்திற்குள்
அப்படி என்ன தான்
இருக்கிறது?”

சிவநேசர் :
“கன்னி மாடத்தில்
பீடத்தில் பல்வேறு
அலங்காரங்களுடன்
காணப்படும் குடம்
என்னுடையது தான்”

“இறந்து போன
என்னுடைய மகள்
பூம்பாவையின்
அஸ்தியைத் தான் அந்த
குடத்தில் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்  ;
பத்திரமாக இருக்க
வேண்டும் என்பதற்காக
பாதுகாப்பாக
வைத்திருக்கிறேன்;”

திருஞானசம்பந்தர் :
“என்ன காரணத்திற்காக
பூம்பாவையின் அஸ்தியை
கரைக்காமல் பாதுகாப்பாக
வைத்திருக்கிறீர்கள்”

சிவநேசர் :
“தங்களிடம் பத்திரமாக
ஒப்படைக்க வேண்டும்
என்ற காரணத்திற்காகத்
தான் பூம்பாவையின்
அஸ்தியை பாதுகாப்பாக
வைத்திருந்தோம்”

“அதனால் தான்
தங்கள் வருகையை
ஆவலுடன் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருந்தோம்”

திருஞானசம்பந்தர் :
“பூம்பாவையின்
அஸ்தியை என்னிடம்
ஒப்படைப்பதற்காகவா?
பாதுகாப்பாக
வைத்திருக்கிறீர்கள் !”

“என்ன காரணத்திற்காக
என்னிடம் ஒப்படைக்க
வேண்டும்……………………………?”

“எதற்காக என்னிடம்
ஒப்படைக்க
வேண்டும்………………………………?”

“ஏன் என்னை
எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டு இருக்கிறீர்கள்………..?”

(சிவநேசர் பேசத்
தொடங்கினார்)

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 18-07-2019
//////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment