February 11, 2019

திருக்குறள்-பதிவு-104


                      திருக்குறள்-பதிவு-104

(சிறையில் இருக்கும்
ஜியார்டானோ
புருனோவை நேரில்
சந்தித்து பாதர்
டிராகாக்லியோலோ
பேசத் தொடங்கினார்)

பாதர் டிராகாக்லியோலோ :
“ உங்களை கொல்ல
வேண்டும் என்றும் :
உங்களை
கொல்லக்கூடாது என்றும் ;
இரு வேறுபட்ட கருத்துக்கள்
உருவாகி விட்ட
காரணத்தினால் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
உங்களால்  இரண்டாக
பிரிந்து நிற்கிறது “

“ நீங்கள் ஏன் உங்கள்
மனதை மாற்றிக் கொள்ள
மாட்டேன் என்கிறீர்கள்?” “

“ மரணத்தைப் பார்த்து
உங்களுக்கு பயமில்லையா?”

ஜியார்டானோ புருனோ :
“ நான் வாழ்க்கையை
வெறுப்பவனும் கிடையாது ;
மரணத்தை கண்டு
பயப்படுபவனும் கிடையாது ;
மரணத்தை பார்த்து நான்
ஏன் பயப்பட வேண்டும் “

“கோள்களின் இயக்கங்கள் ;
பருவகால மாற்றங்கள் ;
மட்டுமின்றி இந்த
பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தும் எப்படி
இயக்க ஒழுங்கு
மாறாமல் இயங்கிக்
கொண்டிருக்கிறதோ
அப்படியே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையே
வாழ்க்கை நடந்து
கொண்டிருக்கிறது “

“ இத்தகைய நித்திய நியதி
இந்த பிரபஞ்சத்தில் உள்ள
அனைவருக்கும் மட்டுமின்றி
அனைத்துக்கும் பொருந்தும் “

“ அப்படி இருக்கும் போது
நான் ஏன் வாழ்க்கையை
வெறுக்க வேண்டும் ;
மரணத்தை கண்டு
பயப்பட வேண்டும் ; “

பாதர் டிராகாக்லியோலோ :
“ உங்களுடைய
இறப்பை
பெரும்பாலானவர்கள்
விரும்பவில்லை “

“ உங்களிடம்
மனமாற்றத்தை
எதிர்பார்க்கிறேன் “

(பாதர் டிராகாக்லியோலோ
ஜியார்டானோ புருனோவை
சந்தித்து பேசி விட்டு
சென்று விட்டார்)

//////////////////////////////////////////////////////////////

(ஜியார்டானோ
புருனோவிற்கு எதிரான
ரோம் நகரத்தின் நான்காம்
கட்ட விசாரணை
துவங்கியது ஜியார்டானோ
புருனோவை போப்பின்
பாதுகாவலர்கள் பல்வேறு
பாதைகளின் வழியாக
அழைத்து சென்று ஒரு
பெரிய மண்டபத்தின்
மையத்தில் கொண்டு
சென்று அவரை தனியாக
நிறுத்தினர், போப்
கிளமெண்ட்-VIII அவர்களின்
பாதுகாவலர்கள்
ஜியார்டானோ
புருனோவை சுற்றி
பாதுகாப்புக்காக
நின்று கொண்டனர்,

அவருக்கு நேர் எதிராக
போப் கிளமெண்ட்-VIII
அவர்கள் அமர்ந்து
கொண்டிருந்தார் - அவரைச்
சுற்றி அவரது
பாதுகாவலர்கள்
நின்று கொண்டிருந்தனர்

கார்டினல் சார்டோரி ;
பெல்லரமினோ ; பாதர்
டிராகாக்லியோலோ ;
ஆகியோரும்
கார்டினல்களும் அந்த
அறையில் அமர்ந்து
இருந்தனர் - அங்கே
அமர்ந்து
இருந்தவர்களில்
ஒரு அதிகாரி எழுந்து
பேசத் தொடங்கினார் )

அதிகாரி :
“ இந்த நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட
குழுவானது ஜியார்டானோ
புருனோவால்
எழுதப்பட்ட எழுத்துக்கள்
அனைத்தையும் முதலாவதாக
கவனமாக படித்து
ஆராய்ந்து பார்த்தது “

“ இரண்டாவதாக
விசாரணையின் போது
எழுதப்பட்ட பதிவுகள்
அனைத்தையும் ஒன்றுக்கு
மேற்பட்டு பலமுறை
படித்து பார்த்தது “

“ அதனைத் தொடர்ந்து
இரண்டையும் ஒப்பிட்டு
பார்த்ததில் - இந்த
குழுவானது ஒரு
முடிவுக்கு வந்திருக்கிறது;
இந்தக்குழு எடுத்த முடிவை
புனித போப் அவர்கள்
முன்னால் படிப்பதற்கு
அனுமதி அளிக்குமாறு
இந்தக்குழுவின் சார்பாக
நான் கேட்டுக் கொள்கிறேன்”

(அப்பொழுது பெல்லரமினோ
தன்னுடைய இருக்கையை
விட்டு எழுந்து பேசத்
தொடங்கினார்)

பெல்லரமினோ  :
“ ஜியார்டானோ புருனோ
தன்னுடைய கருத்துக்களை
இங்கே சொல்ல
விரும்பினால் - அவர்
தன்னுடைய கருத்துக்களை
இங்கே அனைவர்
முன்பும் சொல்லலாம் “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

பெல்லரமினோ  :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
குற்றவாளிகளை
தண்டிப்பதற்கான
செயல்களைத்தான்
செய்யும் ;
குற்றமற்றவர்களை
தண்டிக்கும் செயலைச்
செய்யாது ; 

“ நாங்கள் பாவங்கள்
தான் இறக்க வேண்டும்
என்று நினைப்போமே
தவிர ;  பாவிகள் இறக்க
வேண்டும் - என்று
நினைத்ததில்லை, “

 “நாங்கள் பாவங்களை
கொல்லும்
அதிகாரத்தைத்தான்
பெற்றிருக்கிறோம் ;
பாவிகளை கொல்லும்
அதிகாரத்தை
பெற்றிருக்கவில்லை ; “.

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  11-02-2019
//////////////////////////////////////////////