நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்-பதிவு-55-சுபம்
உலகில்
மனிதர்கள் கொள்ளும்
உறவு முறைகளை
எல்லாம்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்
ஒன்று : இரத்த சம்பந்தமுள்ள
உறவு முறை
இரண்டு : இரத்த
சம்பந்தமில்லாத
உறவு முறை
இரத்த சம்பந்தமுள்ள
உறவு முறையில்
தந்தை, தாய்,
அண்ணன், தம்பி
அக்கா, தங்கை
சொந்தக் காரர்கள்
ஆகியோர் அடங்குவர்.
இரத்த சம்பந்தமில்லாத
உறவு முறையில்
நண்பர்கள்
மட்டுமே அடங்குவர்,
இரத்த சம்பந்தமில்லாத
உறவு முறையான
நண்பர்கள் கொள்ளும்
நட்பை இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்
ஒன்று : கற்புடைய
நட்பு
இரண்டு : கற்பில்லாத
நட்பு
எதிர்பார்ப்பு
அற்று
நட்பு
கொள்வது,
எந்த
சூழ்நிலையிலும்
ஒரே
மாதிரியாக
இருப்பது,
எத்தகைய
விஷயத்தையும்
செய்வதற்குத்
தயாராக
இருப்பது
ஆகியவற்றைக்
கொண்டிருக்கும்
நட்பு
கற்புடைய
நட்பு எனப்படும்.
எதிர்பார்ப்புடன்
நட்பு
கொள்வது,
எந்த
சூழ்நிலையிலும்
ஒரே
மாதிரியாக
இல்லாமல்
இருப்பது,
எத்தகைய
விஷயத்தையும்
செய்வதற்குத்
தயாராக
இல்லாமல்
இருப்பது,
ஆகியவற்றைக்
கொண்டிருக்கும்
நட்பு
கற்பில்லாத
நட்பு
எனப்படும்.
மனிதன்
மனிதனாக இருந்து
மனிதனுக்குரிய
உயர்ந்த குணங்களுடன்
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக
உயர்ந்த கருத்துக்களையும்,
வாழ்வியல் நெறி
முறைகளையும்,
ஒழுக்கங்களையும்,
பழக்க வழங்கங்களையும்,
தங்களுடைய
எண்ணிக்கையில் அடங்காத
பழமொழிகள், பாடல்கள்
இலக்கியங்கள்
ஆகியவற்றின் மூலம்
நம் முன்னோர்கள்
சொல்லிச் சென்றுள்ளனர்.
அதில் முக்கியமான
ஒன்று தான்.
“””கொண்டு வந்தால்
தந்தை ;
கொண்டு வந்தாலும்
வராவிட்டாலும்
தாய் ;
சீர் கொண்டு
வந்தால் சகோதரி
;
கொலையும்
செய்வாள் பத்தினி
;
உயிர் காப்பான்
தோழன் ;””””
என்பதாகும்
இதில்
இரத்த சம்பந்தமுள்ள
உறவுகளான
தாய், தந்தை,
சகோதரி, மனைவி
ஆகியோரைக் குறிப்பிட்டு
அவர்களுக்குரிய
தன்மைகளைக்
குறிப்பிட்டு இருப்பார்கள்
ஆனால்,
இரத்த சம்பந்தமில்லாத
உறவான நண்பனைக்
குறிப்பிடும் போது
மட்டும் தான்
உயிர் காப்பான் தோழன்
என்று குறிப்பிட்டு
இருப்பார்கள்
உயிரைக் காக்கும்
மிகப்பெரிய பொறுப்பை
இரத்த சம்பந்தமில்லாத
உறவான
நண்பர்களிடம் தான்
கொடுத்து இருக்கிறார்கள்
இரத்த சம்பந்தமுடைய
உறவுகளிடம்
கொடுக்கவில்லை
என்பதை நாம்
உணர்ந்து கொண்டால்
நண்பன் கொள்ளும் நட்பு
எவ்வளவு உயர்ந்தது
புனிதமானது
என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்.
இரத்த சம்பந்தமுள்ள
உறவில் பெரிய
அளவில் பாதிப்புகள்
ஏற்பட்டாலும்
பெரிதாக எடுத்துக்
கொள்ளப்படுவதில்லை
ஆனால்
இரத்த சம்பந்தமில்லாத
உறவான
நட்பில் சிறிதளவு
பாதிப்பு ஏற்பட்டாலும்
நட்பில் களங்கம்
ஏற்பட்டு விடும்
எனவே,
எதிர்பார்ப்புடன்
நட்பு கொண்டு,
எல்லா சூழ்நிலைகளிலும்
ஒரே மாதிரியாக
இல்லாமல்,
எந்த செயலையும்
செய்யத் தயாராக
இல்லாமல் இருக்கும்
கற்பில்லாத நட்பாக
நம்முடைய
நட்பு இல்லாமல்,
எந்தவிதமான
எதிர்பார்ப்பும் அற்று
எல்லா சூழ்நிலைகளிலும்
ஒரே மாதிரியாக இருந்து
எந்தச் செயலையும்
செய்யத் தயாராக
இருக்கும் நட்பு தான்
கற்புள்ள நட்பு என்பதை
நாம் புரிந்து கொண்டு
கற்புள்ள நட்பாக
நம்முடைய நட்பு
இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.
மனிதன்,
மனிதனாக இருந்து,
மனிதனுக்குரிய
குணங்களைப் பெற்று,
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக,
பின்பற்ற வேண்டிய
உயர்ந்த கருத்துக்களை,
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்
என்பதை நாம்
உணர்ந்து கொண்டு
அவர்களை வணங்குவோம்
---------நம்
முன்னோர்கள்
புத்திசாலிகள்-சுபம்
-----------05-08-2018
///////////////////////////////////////////////////////////