July 15, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-42



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-42

“””””உயிர் காப்பான் தோழன்””””

உலகம் முழுவதும்
எடுத்துக் கொண்டால்
பிறருடன் நட்பு
கொள்பவர்களின்
நட்பை இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்

   ஒன்று  எதிர்பார்ப்புடன்
           நட்பு கொள்பவர்கள்

   இரண்டு எதிர்பார்ப்பு
            அற்று
            நட்பு கொள்பவர்கள்

எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்களை
ஆதாயத்திற்காக
நட்பு கொள்பவர்கள்
என்றும்
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்பவர்களை
ஆதாயம் இல்லாமல்
நட்பு கொள்பவர்கள்
என்றும் சொல்லலாம்

எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்பவர்களின்
எண்ணிக்கையை விட
எதிர்பார்ப்புடன்
நட்பு கொள்பவர்களின்
எண்ணிக்கையே அதிகம்

பெரும்பாலானவர்கள்
பிறருடன் நட்பு
கொள்ளும் போது
இவரால் தனக்கு
எத்தகைய லாபங்கள்
கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது என்பதை,
கணக்கில் எடுத்துக்
கொண்டு நட்பு
கொள்கின்றனர்.
இவ்வாறு நட்பு
கொள்கிறவர்கள்
எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்கள்

துரிபோதனன் கர்ணன்
நட்பு எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பு

துரியோதனன், கர்ணனிடமும்
கர்ணன், துரியோதனனிடமும்
நட்பு கொண்டிருந்தது
ஏதோ ஒன்றை
எதிர்பார்த்துத்தான்
கர்ணன் போர்க் கலைகளில்
வல்லவனாக இருக்கிறான்
என்ற காரணத்தினாலும்,
அர்ஜுனனை
எதிர்த்து போர் புரியக்கூடிய
ஆற்றல் கர்ணனிடம்
இருக்கிறது என்ற
காரணத்தினாலும்,
அர்ஜுனனை அழிக்கக்
கூடிய சக்தி
கர்ணனிடம் இருக்கிறது
என்று நினைத்த
காரணத்தினாலும்
தான் துரியோதனன்
கர்ணனிடம் நட்பு
கொண்டான்.
அதைப்போல கர்ணனும்
தன்னுடைய
விரோதியாகக் கருதிய
அர்ஜுனனை அழிக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும்,
அரச நிலையில் இருக்கும்
அர்ஜுனனை அழிக்க
வேண்டுமானால்
அரசனுடைய உதவி
தேவைப்படும் என்ற
காரணத்தினாலும் தான்
துரியோதனனுடன் கர்ணன்
நட்பு கொண்டான்,

துரியோதனன் கர்ணன்
நட்பு எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பு

துரியோதனன் தவறு
செய்த போதெல்லாம்
அவன் செய்யும் தவறுகளை
சுட்டிக் காட்டி
அவனை திருத்த முயற்சி
செய்யாமல்
அவனுடன் இருந்து
அவன் செய்த அனைத்து
தவறான செயலுக்கும்
துணையாக இருந்தான்
கர்ணன்

நண்பன் தவறு
செய்யும் போது
அவன் செய்யும்
தவறுகளை சுட்டிக் காட்டி
அவனை திருத்த முயற்சி
செய்பவனே
உண்மையான நண்பன்
ஆனால் கர்ணன்
அதைச் செய்யவில்லை
துரியோதனனை திருத்த
முயற்சி செய்யவில்லை

கர்ணன் நண்பனுக்காக
உயிரை கொடுத்தான்
உயிர் காப்பான் தோழன்
என்பதற்கு கர்ணன்
எடுத்துக் காட்டு
என்று சொல்ல முடியாது
தவறான நண்பர்களுடன்
சேர்ந்தது மட்டுமல்லாமல்
அவர்கள் செய்த
தவறுகளை சுட்டிக்காட்டி
அவர்களை திருத்த
முயற்சி செய்யாமல்
தானும் சேர்ந்து
தவறு செய்த
காரணத்தினால் தான்
கர்ணன் இறந்தான்
என்று தான் எடுத்துக்
கொள்ள வேண்டும்
நண்பனுக்காக உயிரைக்
கொடுத்தான்
என்று எடுத்துக்
கொள்ள முடியாது

எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்களை
உயிர் காப்பான் தோழன்
என்று சொல்ல முடியாது
ஆனால்
எதிர்பார்ப்பு இல்லாமல்
நட்பு கொள்பவர்களை
உயிர் காப்பான் தோழன்
என்று சொல்ல முடியும்

நண்பன் ஒருவன்
நான் கஷ்டத்தில்
இருக்கிறேன் எனக்கு
உதவி செய் என்று
கேட்கும் போது
உதவி செய்பவனும்,
நண்பன் ஒருவன்
நான் கஷ்டத்தில்
இருக்கிறேன் எனக்கு
உதவி செய் என்று
கேட்காவிட்டாலும்
நண்பன் கஷ்டத்தில்
இருக்கிறான்
என்பதை அறிந்து
ஓடிச்சென்று
உதவி செய்பவனும்
தான் உண்மையான நண்பன்
அவன் தான்
உயிர் காப்பான் தோழன்

நண்பன் கஷ்டத்தில்
இருக்கும் போது
எனக்கு உதவி செய்
என்று கேட்டும்
உதவி செய்யாமல்
இருப்பவனும் நண்பன்
கஷ்டத்தில் இருக்கிறான்
என்பதை உணர்ந்தும்
அவனுக்கு
உதவி செய்யாமல்
எதுவும் தெரியாதது போல்  
கண்டு கொள்ளாமல்
இருப்பவனும்,
உயிர் காப்பான்
தோழன் இல்லை

----------இன்னும் வரும்
----------15-07-2018
///////////////////////////////////////////////////////////