October 23, 2021

பதிவு-8-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-8-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

கண்களை

மூடும் போது

இரண்டு

புருவங்களுக்கு

மத்தியில்

இருள் என்பது

மட்டுமே

நிலையாக

தோன்றினால்

நாம் பிரபஞ்ச

சக்தியுடன்

இணைந்து

இருக்கிறோம்

என்று பொருள்

 

நம்முடைய

ஜீவாத்மா

பரமாத்மாவுடன்

இணைந்து

இருக்கிறது

என்று பொருள்

 

நாம் சமாதி

நிலையில்

இருக்கிறோம்

என்று பொருள்

 

நாம்

இறைவனுடன்

இரண்டறக்

கலந்து

இருக்கிறோம்

என்று பொருள்

 

நாம் பேரின்பப்

பெருவெள்ளத்தில்

நீந்திக் கொண்டு

இருக்கிறோம்

என்று பொருள்

 

பிரபஞ்ச சக்தியுடன்

இணைந்து

இருப்பவர்களுக்கு

பிரபஞ்ச சக்தியே

அனைத்தும்

அளிக்கும்

தேவையானவற்றை

அளிக்கும்

விருப்பமானவற்றை

அளிக்கும்

இக்கட்டான

சூழ்நிலையிலிருந்து

நம்மை

காப்பாற்றும்

 

நம்மைச் சுற்றி

இருப்பவர்கள்

இவன் இந்த

பிரச்சினையிலிருந்து

வெளியே

வரவே

முடியாது என்று

சொன்னாலும்

அந்த

பிரச்சினையிலிருந்து

வெளியே

கொண்டு வந்து

காப்பாற்றும்

 

மரணத்தையே

முத்தமிடக்கூடிய

நிலை வந்தாலும்

மரணத்தையே

தள்ளி

போடக்கூடிய

நிலையை

உருவாக்கும்

இது தான்

தவத்தின்

உயர்ந்த நிலை

ஆகும்

 

எளிமையாக

சொல்ல

வேண்டும்

என்றால்

பிரபஞ்ச

சக்தியுடன்

இணைந்து

இருப்பவர்களுக்கு

அதாவது

பேரின்பத்தில்

திளைப்பவர்களுக்கு

காலத்தையே

மாற்றும்

சக்தி உண்டு

என்பதைத்

தெரிந்து

கொள்ள

வேண்டும்

 

நம்முடைய

வாழ்வில்

இன்பம்

துன்பம்

அமைதி

பேரின்பம்

என்ற நான்கு

வெளிப்படுகிறது

அவ்வாறு

வெளிப்படும்

இந்த நான்கில்

இன்பம்

துன்பம்

இரண்டையும்

ஒன்றாகப்

பாவித்து

அமைதி என்ற

நிலையை

அடைந்து

இறைவனுடன்

இரண்டறக்

கலந்து

இறைவனின்

அருளைப்

பெற்றவர்களுக்கு

பிறவிகள்

பல எடுத்து இந்த

உலகமாகிய

நரகத்தில்

வாழ வேண்டிய

அவசியம் இல்லை

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

"அருள்சேர்ந்த

நெஞ்சினார்க்

கில்லை

இருள்சேர்ந்த

இன்னா

உலகம்

புகல்""

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

பதிவு-7-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-7-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

ஒளி என்பது

இயக்க நிலையில்

இருப்பது

இயக்க நிலையில்

இருப்பவைகள்

அனைத்தும்

தனது இயக்கம்

நின்றவுடன்

இருப்பு நிலையாகி

இருப்பு நிலையுடன்

ஒன்றாகி

இருப்பு

நிலையாகவே

மாறி விடும்

 

முதலில்

இருள் இருக்கிறது

இருளுக்குள்

ஒளி வருகிறது

ஒளி கரைகிறது

ஒளி அழிகிறது

இறுதியில்

இருளே இருக்கிறது

 

ஆரம்பத்தில்

இருந்ததும்

இருள் தான்

முடிவில்

இருப்பதும்

இருள் தான்

 

ஒளி என்பது

இருளுக்குள் வந்து

விட்டு மட்டுமே

செல்கிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தங்கி விட்டு

மட்டுமே செல்கிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தன்னுடைய

வேலையை செய்ய

மட்டுமே வருகிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தன்னுடைய

வேலையை

முடித்தவுடன்

இருளில் கரைந்து

விடுகிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தன்னுடைய

வேலையை

முடித்தவுடன்

இருளாகவே மாறி

விடுகிறது

இதிலிருந்து

ஒளி என்பது

நிலையானது

கிடையாது என்பது

தெரிகிறது

ஒளியால் நிலையாக

இருக்க முடியாது

என்பது தெரிகிறது

 

ஒளி என்பது

இயக்க நிலையில்

இருப்பது

இயக்க நிலையில்

இருப்பவைகள்

அனைத்தும்

நிலையானவைகள்

கிடையாது

அப்படி

இருக்கும் போது

ஒளியை எப்படி

கடவுள் என்று

சொல்ல முடியும்

 

நிலையாக

இல்லாதது எப்படி

கடவுளாக

இருக்க முடியும்

நிலையாக

இருப்பது மட்டுமே

கடவுளாக

இருக்க முடியும்

 

நிலையாக

இருப்பது

இருள் மட்டும் தான்

எனவே

நிலையாக

இருக்கும் இருளே

கடவுள் ஆகும்

நிலையற்ற ஒளி

என்பது

கடவுள் கிடையாது

என்பதை உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

இருளில் தான்

அனைத்து பரிணாம

வளர்ச்சிகளும்

நிகழ்கின்றன

 

இருளில் தான்

பிரபஞ்ச பரிணாமங்கள்

அனைத்தும் ஏற்பட்டும்

நடந்தும் வருகிறது

 

இருளில் தான்

பிரபஞ்ச பரிணாமங்கள்

நடைபெற்று

பிரபஞ்சமாகத்

திகழ்கின்றது

 

இருளில் தான்

படைத்தல், காத்தல்,

அழித்தல், மறைத்தல்.

அருளல் என்ற

ஐந்து தொழில்கள்

நடைபெற்று

வருகிறது

 

தவத்தின்

உயர்ந்த நிலை

என்பது

நம்முடைய உயிர்

பிரபஞ்ச சக்தியுடன்

இணைந்து

இருப்பது ஆகும்

நம்முடைய

ஜீவாத்மா

பரமாத்மாவுடன்

இணைந்து

இருப்பது ஆகும்

 

தவத்தின்

உயர்ந்த நிலையில்

இரண்டு கண்களை

மூடும் போது

இரண்டு

புருவங்களுக்கு

மத்தியில்

எந்த விதமான

ஒளியும் இருக்காது

எந்தவிதமான

தோற்றங்களும்

இருக்காது

எந்தவிதமான

நிறங்களும்

இருக்காது

இரண்டு

புருவங்களுக்கு

மத்தியில்

சூன்யம் மட்டுமே

இருக்கும்

இருள் என்பது

மட்டுமே இருக்கும்

இருளைத் தவிர

வேறு ஒன்றும்

இருக்காது

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

பதிவு-6-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-6-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

இந்தப் பிரபஞ்சத்தில்

உள்ள எந்த

ஒரு பொருளையும்

நாம் பார்க்க

வேண்டும் என்றால்

இரண்டு

விஷயங்கள் தேவை

 

ஒன்று

கண் பார்வை

 

இரண்டு

ஒளி

 

கண்பார்வை

இருந்து

ஒளி இல்லை

என்றால்

கண்பார்வையை

வைத்துக் கொண்டு

எந்த ஒரு

பொருளையும்

நம்மால்

பார்க்க முடியாது

 

அதைப்போல

ஒளி இருந்து

கண்பார்வை இல்லை

என்றால்

ஒளியை

வைத்துக் கொண்டு

எந்த ஒரு

பொருளையும்

நம்மால்

பார்க்க முடியாது

 

இந்த உலகத்தில்

உள்ள எந்த

ஒரு பொருளையும்

பார்க்க வேண்டும்

என்றால்

கண்பார்வையும்

ஒளியும் தேவை

 

நாம்

உறங்கிக் கொண்டு

இருக்கும் போது

கனவு வருகிறது

கனவு காண்கிறோம்

கனவில் பல்வேறு

நிகழ்வுகளைப்

பார்க்கிறோம்

 

நாம்

உறங்கிக் கொண்டு

இருக்கும் போது

கனவுகளை எவ்வாறு

பார்க்கிறோம்

கனவுகளை எவ்வாறு

நம்மால்

பார்க்க முடிகிறது

 

நமக்கு வெளியே

கண்பார்வையும்

ஒளியும்

இருக்கும் போது

எப்படி பொருள்களைப்

பார்க்கிறோமோ

அவ்வாறே

நமக்கு உள்ளே

ஒளியும்

கண்பார்வையும்

இருக்கின்ற

காரணத்தினால் தான்

நாம்

உறங்கிக் கொண்டு

இருக்கும் போதும்

கனவுகள்

நமக்கு தெரிகிறது

நம்மால்

கனவுகளைப்

பார்க்க முடிகிறது

 

வெளியில்

இருப்பது

உள்ளேயும்

இருக்கிறது

வெளியில் எப்படி

ஒளியும்

கண்பார்வையும்

இருந்தால்

பொருள்கள்

தெரிகிறதோ

அதைப்போல

நமக்கு

உள்ளேயும்

ஒளியும்

கண்பார்வையும்

இருக்கின்ற

காரணத்தினால் தான்

கனவுகளில்

நடக்கக்கூடிய

நிகழ்வுகள்

நமக்குத் தெரிகிறது

 

இதிலிருந்து

நாம் ஒன்றைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

நமக்கு உள்ளே

ஒளி இருக்கிறது

கண் பார்வை

இருக்கிறது

 

ஒளி

என்பது

இயக்க நிலை

கண்பார்வை

என்பது

இருப்பு நிலை

 

இந்த உலகத்தில்

உள்ள சில பேர்

கடவுள் ஒளியாக

இருக்கிறான் என்பார்கள்

தவத்தின்

உயர்ந்த நிலையில்

நமக்கு உள்ளே

புருவ மத்தியில்

ஒளி தெரியும்

என்பார்கள்

புருவ மத்தியில்

ஒளி தெரிந்தால்

தவத்தின்

உயர்ந்த நிலையை

அடைந்து விட்டதாக

சொல்வார்கள்

புருவ மத்தியில்

ஒளி தெரிவது

தவத்தின்

உயர்ந்த நிலை

கிடையாது

புருவ மத்தியில்

ஒளி தெரிவது

தவத்தின்

உயர்ந்த நிலை

என்பது

தவறான கருத்தாகும்

புருவ மத்தியில்

ஒளி தெரிவது

என்பது

தவத்தின்

ஆரம்ப நிலை

மட்டுமே ஆகும்

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

பதிவு-5-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-5-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

நாம் இறக்கும் போது

நம்முடைய

உடலிலிருந்து

உயிர்

பிரியும் போது

உயிருடன்

பாவ புண்ணியங்கள்

அடங்கிய

கர்மா நம்முடைய

உடலை விட்டு

செல்கின்றன

என்பதையும்

தெரிந்து கொள்ளலாம்

 

அவ்வாறு தெரிந்து

கொள்ளும் போது

கடவுள்

நம் உடலில்

எந்த இடத்தில்

இருக்கிறார்

கடவுளை

அடையக்கூடிய

வழி எது

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்துவது

எது என்பதை

உணர்ந்து

கொள்ளலாம்

 

அவ்வாறு

உணர்ந்து

கொள்ளும் போது

சித்தவித்தை

எனப்படும்

வாசியோகத்தை

பயன்படுத்தி

தொடர்ந்து

செய்து வரலாம்

 

அவ்வாறு

செய்து வரும் போது

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம்

என்பது ஏற்பட்டு

அமைதி

என்பது மனதில்

உண்டாகும்

 

இந்த நிலையில்

தான் மனிதன்

என்பவன்

அமைதி என்பது

எவ்வாறு ஏற்படுகிறது

என்பதை உணர்ந்து

கொள்கிறான்

 

(4) பேரின்பம்

 

உலகத்தில் உள்ள

பொருட்களுடன்

தொடர்பு

கொள்ளும் போது

ஏற்படுவது

சிற்றின்பம்

உலகத்தில் உள்ள

பொருட்களை

விட்டு விலகி

இறைவனுடன்

இரண்டறக்

கலக்கும் போது

ஏற்படுவது

பேரின்பம்

 

சிற்றின்பம்

கர்மாவை

உண்டாக்கும்

பேரின்பம்

கர்மாவை

அழிக்கும்

 

சமாதி

என்ற நிலையில்

இருக்கும் போது

பேரின்பம்

என்பது ஏற்படும்

 

சமம் + ஆதி = சமாதி

ஆதி நிலைக்கு

சமாமாக

மனிதன் உயர்வது

சமாதி எனப்படும்

அதாவது

மனிதன் கடவுள்

நிலைக்குச் சமமாக

உயர்வது எனப்படும்

 

சமாதி நிலை

என்பது

தனது அறிவானது

தன்னுடைய

ஆதி நிலையில்

நின்று இந்த

பிரபஞ்சத்

தோற்றங்கள்

அனைத்திலும்

தன்னையும்

ஆதி நிலையையும்

சமமாகப் பார்க்கும்

நிலையாகும்

 

சமாதி நிலை

அனுபவம்

கிடைக்கப் பெற்றவன்

காணக்கூடிய

பொருள்கள்

அனைத்திலும்

தன்னையே காண்பதால்

காண்பவனும்

காணப்படும்

பொருளும்

வேறு வேறு அல்ல

என்பதை

உணர்ந்து கொள்கிறான்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////