October 23, 2021

பதிவு-4-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-4-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

இன்ப

உணர்வுகளையும்

துன்ப

உணர்வுகளையும்

வார்த்தைகளால்

வெளிப்படுத்த முடியாது

செயல்களால்

மட்டுமே

வெளிப்படுத்த முடியும்

 

(3) அமைதி

 

இன்பத்தையும்

துன்பத்தையும்

சமமாக

ஏற்றுக் கொள்ளும்

நிலைக்கு

மனிதன்

வரும்போது

மனிதனுடைய

மனதில் அமைதி

என்பது ஏற்படுகிறது

 

மௌனம்

என்பதற்கும்

அமைதி என்பதற்கும்

வேறுபாடு இருக்கிறது

 

மௌனம் என்பது

சத்தங்கள்

அனைத்தும்

நீங்கிய பின்

ஏற்படுவது

ஆனால்

அமைதி என்பது

உண்மையை

உணரும் போது

ஏற்படுவது

 

தவம் செய்வதின்

மூலம் கிடைக்கும்

ஞானம்

சமாதி

முக்தி

என்ற மூன்று

நிலைகளில்

 

முதல் நிலையான

ஞானம் என்பது

ஏற்படும் போது

அமைதி என்பது

உண்டாகிறது

அமைதி என்பது

மனிதனுக்கு

ஞானம் என்பது

ஏற்பட்டால்

மட்டுமே

உண்டாகும்

 

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம்

என்பது வராமல்

யாராலும்

தவத்தின் உயர்ந்த

நிலைகளை

அடைய முடியாது

 

தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைந்தவர்கள்

அனைவரும்

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம்

கொண்டு அமைதியாக

இருப்பார்கள்

என்பதை தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைந்தவர்களை

உற்று

நோக்கினாலோ

தெரியும்

 

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம் இல்லாமல்

அமைதியாக

செயல்படாமல்

இருப்பவர்கள்

தாங்கள் தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைந்திருக்கிறேன்

என்று சொன்னால்

அவர் தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடையவில்லை

என்று பொருள்

 

தவத்தின்

உயர்ந்த நிலைகளை

அடைய வேண்டும்

என்றால்

கோபம் நீங்கி

பொறுமை நிதானம்

வர வேண்டும்

அப்படி வந்தால்

மட்டுமே அமைதி

என்பது ஏற்படும்

 

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம் என்பது

வரவில்லை என்றால்

அமைதி என்பது

வரவே வராது

 

நம்முடன்

ஒட்டிக் கொண்டு

வருவது எது

என்பதையும்

நாம் நம்முடன்

ஒட்ட வைத்துக்

கொள்வது எது

என்பதையும்

நம்முடன்

ஒட்டிக் கொண்டு

போவது எது

என்பதையும்

மனிதன் ஆராய்ச்சி

செய்கிறான்

 

அவ்வாறு மனிதன்

ஆராய்ச்சி

செய்யும்போது

நம்முடைய உயிரில்

ஒட்டிக் கொண்டு

வருவது நாம்

செய்த பாவ

புண்ணியங்கள்

அடங்கிய கர்மா

என்பதையும்

 

நாம் உயிர்

வாழும் போது

நாம் செய்யும்

செயல்கள் மூலம்

பாவ புண்ணியங்கள்

அடங்கிய கர்மாவை

நம்முடைய உயிரில்

ஒட்ட வைத்து

கொள்கிறோம்

என்பதையும்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment