தீபப் பயிற்சி-பதிவு - 1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
உலகின் பல்வேறு இடங்களில் தீபப் பயிற்சி தவத்தின் ஆரம்ப நிலை பயிற்சியாக இன்றும் செய்யப் பட்டு வருகிறது .தீபப் பயிற்சி விளக்கு பயிற்சி என்றும் அழைக்கப் படுகிறது.
தீபப் பயிற்சி எண்ணெய் ஊற்றப் பட்ட விளக்கு வைத்தோ ,ஏற்றி வைக்கப் பட்ட மெழுகுவர்த்தி வைத்தோ தீபப் பயிற்சி செய்யப் படுகிறது.
தீபப் பயிற்சி உடலிலுள்ள ஜீவகாந்தத்தை பெருக்கும் பயிற்சியாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டு வருகிறது.
ஆனால் ,தீபப்பயிற்சி மூலம் பல்வேறு சக்திகளைப் பெறமுடியும் என்பதையும், தீபப் பயிற்சி மூலம் பெற்ற சக்திகளை எளிதாக சோதனை செய்தும் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தீபப் பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்:
1 ஜீவகாந்த சக்தி பெருகுகிறது.
2 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது.
3 ஸ்துhல உடலிலிருந்து சூட்சும உடல் தனியாகப் பிரியும் தன்மையைப் பெறுகிறது.
4 சூட்சும உடல் ஆன்ம ஒளியைப் பெறுகிறது.
5 சூட்சும உடல் தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது.
தீபப் பயிற்சி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
1 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
2 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்.
3 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் கண்டிப்பாக செய்யக் கூடாது.
4 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யும் பொழுது தீய ஆவிகளின் தொற்றுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் தீபப் பயிற்சியை செய்ய வேண்டும். அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது.
5 தீபப் பயிற்சி செய்வதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு மந்திரம் ,திக்கு கட்டு மந்திரம் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும் .
தீபப் பயிற்சி செய்வதற்கு தேவைப்படுபவை:
1 அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
2 சாதாரண விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.
3 விளக்கில் எண்ணெய் வகைகளாக நெய், விளக்கு எண்ணெய் ,கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
4 மண்ணெண்ணெய் நிரப்பப் பட்ட விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.
5 மெழுகுவர்த்தியை பயன்படுத்த வேண்டாம் .
தீபப் பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:
முதல் நிலை -1
a ) தீபப் பயிற்சியில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யவேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து மூன்று நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும்.
5 பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்.
6 மேலே கண்ட செயல்முறையைப் போலவே தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
b ) தீபப் பயிற்சியில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டியது
1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
4 தீபத்தை தொடர்ந்து 15 நிமிடங்கள் (அல்லது) 20 நிமிடங்கள் வரை பார்க்க வேண்டும்.
5 தீபத்தில் பல்வேறு நிறங்கள் தெரிவதைப் பார்க்க முடியும்.
6 பச்சை, சிகப்பு என்று பல்வேறு பட்ட நிறங்களை தீபப் பயிற்சியில் நாம் வளர்ச்சி அடையும் பொழுது நாம் காணக் கூடிய நிறங்களாகும்.
தீபப் பயிற்சியின் முதல்நிலையில் பல்வேறு வகையான நிறங்கள் தெரிந்த பிறகு அடுத்து அடுத்து தீபத்தில் தெரியும் விஷயங்கள் தீபப் பயிற்சியில் சூட்சும ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”