December 19, 2018

திருக்குறள்-பதிவு-71


                          திருக்குறள்-பதிவு-71

ஜியார்டானோ புருனோ
சிறையில் இருந்த
7 ஆண்டுகள்
கொடுமையான
சித்திரவதைக்கு
உள்ளாக்கப்பட்டார்

தேசத் துரோக குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கும் ;
அரசாங்கத்தை எதிர்த்து
சதி வேலைகள்
செய்பவர்களுக்கும் ;
ஆட்சியை கவிழ்க்க
குள்ளநரித்தனம்  
புரிபவர்களுக்கும் ;
தீவிரவாதிகள் என்று
அடையாளம்
காட்டப்பட்டவர்களுக்கும் ;
வழங்கப்படும்
கொடுமையான
சித்திரவதைகள்
ஜியார்டானோ
புருனோவிற்கு
வழங்கப்பட்டது

ஒவ்வொரு முறையும்
ஜியார்டானோ
புருனோவை
சித்திரவதை செய்து
முடித்த பின்
ஜியார்டானோ
புருனோவிடம்
மன்னிப்பு கேட்டுக்கொள்
உன்னை விட்டு
விடுகிறோம் என்பார்கள்
நான் எந்த ஒரு
தப்பையும் செய்யவில்லை
நான் எதற்காக
மன்னிப்பு
கேட்க வேண்டும்
நான் மன்னிப்பு கேட்க
மாட்டேன் என்பார்
ஜியார்டானோ புருனோ

7 வருட சிறை
வாழ்க்கையில்
நரக வேதனையை
அனுபவித்த
ஜியார்டானோ புருனோ
தொடர்ந்து 7 வருடங்களாக
அவருக்கு வழங்கப்பட்ட
கொடுமையான
சித்திரவதை
காரணமாக
நடைபிணமாக
ஆக்கப் பட்டார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன சூரிய
மையக் கோட்பாடு
சரியானது என்று
இந்தப் பிரபஞ்சத்தையே
தன்னுடைய
கண்களால் பார்த்து
சொன்ன ஜியார்டானோ
புருனோ இந்தப்
பிரபஞ்சத்தின் சிறிய
ஒளியைக் கண்டாலே
அலறும் நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

பிரபஞ்சத்தின்
ஒலியில் தான்
இந்தப் பிரபஞ்சத்தின்
உயிர்த் தன்மையே
இருக்கிறது ;
பிரபஞ்சத்தின்
ஒலியைக் கேட்பவர்கள்
இந்தப் பிரபஞ்சத்தின்
உயிர்த்தன்மையை
புரிந்து கொள்வார்கள் ;
பிரபஞ்சத்தின்
உயிர்த்தன்மையை
புரிந்து கொள்ள
வேண்டும் என்றால்
பிரபஞ்ச ஒலியைக்
கேட்க வேண்டும் ;
என்று சொன்ன 
ஜியார்டோனோ
புருனோ இந்தப்
பிரபஞ்சத்தின் சிறு
ஒலியைக் கேட்டாலே
அலறும் நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

ஜியார்டோனோ
புருனோவின் நாவானது
அசைந்தால்
புல் கூட
வாள் எடுத்து
போர்முனைக்கு
செல்லும் ;
பிறந்த குழந்தையும்
புதிய வரலாறு படைக்க
புரட்சி கீதம் இசைக்கும் ;
என்று சொல்லத்தக்க
நாவன்மை படைத்த
ஜியார்டோனோ புருனோ
தன்னுடைய நாவை
அசைத்து ஒரு
வார்த்தை கூட பேச
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

உண்மையான
கருத்துக்களை
சாகாத சரித்திரமாக்கி ,
உயிருள்ள எழுத்துக்களில்
எழுதி நூலாக
வெளியிட்ட ,
ஜியார்டானோ புருனோ
ஒரு சிறு எழுத்தைக்
கூட கைகளால் எழுத
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

உண்மைக் கருத்துக்களை
உலகம் முழுவதும்
எடுத்துரைக்க .
ஊர் ஊராக திரிந்து
மக்களிடையே
விழிப்புணர்வை
ஏற்படுத்திய
ஜியார்டானோ புருனோ
ஒரு அடி கூட எடுத்து
வைத்து நடக்க
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

பல்வேறு கொடுமையான
சித்திரவதைகளை
7 வருட சிறை
வாழ்க்கையில்
அனுபவித்தும்
விசாரணை
செய்கிறோம்
என்ற பெயரில்
பல்வேறு நிலைகளில்
நடத்தப்பட்ட
விசாரணையில்
ஜியார்டனோ புருனோ
நடை பிணமாக
ஆக்கப்பட்டார்

7 வருட
ஜியார்டானோ
புருனோவின்
சிறை வாழ்க்கையில்
அவருக்கு தண்டனை
வழங்கியவர்களும் ;
அத்தண்டனையை
நிறைவேற்றியவர்களும் ;
நம்பவே முடியாத
அசாத்திய மன உறுதியை
ஜியார்டானோ
புருனோவிடம்
கண்டு பயந்து
தான் போயினர் ;
தங்கள் வாழ்நாளில்
இப்படியொரு
நெஞ்சுரம் படைத்த
மனிதரை சந்தித்தது
இல்லை என்று
சொல்லும் வகையில்
ஜியார்டானோ புருனோ
எதற்கும் கலங்காத
மன  உறுதியுடன்
இருந்தார்

---------  இன்னும் வரும்
---------  19-12-2018
///////////////////////////////////////////////////////////




திருக்குறள்-பதிவு-70


                       திருக்குறள்-பதிவு-70

டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும் ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் கொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்ன காரணத்தினால்
ஜியார்டானோ புருனோ
பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொல்கிறார் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராக செயல்படுகிறார் ;
என்று மதத் துவேஷ
குற்றம் அவர் மேல்
சுமத்தப்பட்டு
ஜியார்டானோ புருனோ
1585-ஆம் ஆண்டு
இங்கிலாந்திலிருந்து
வலுக்கட்டாயமாக
வெளியேற்றப்பட்டார்.

1585-ஆம் ஆண்டு
இங்கிலாந்திருந்து
வெளியேற்றப்பட்ட
ஜியார்டானோ புருனோ
பிரான்ஸில்
தங்கினார்
அங்கு அவர்
அரிஸ்டாட்டில்
சொன்ன கருத்துக்கள்
பலவற்றில் உள்ள
குறைகளை சுட்டிக்காட்டி
சரியான விளக்கங்களை
மக்களிடம்
கொண்டு சென்றார்
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து கருத்து
சொன்ன காரணத்தினால்
ஜியார்டானோ புருனோ
1586-ஆம் ஆண்டு
பிரான்ஸிலிருந்து
வலுக்கட்டாயமாக
வெளியேற்றப்பட்டார்

பிரான்ஸிலிருந்து
வெளியேறிய
ஜியார்டானோ புருனோ
ஜெர்மனி சென்றார்

ஜெர்மனியில்
1586-1587
1587-1588
ஆகிய இரண்டு
ஆண்டுகள்
ஜெர்மனியில் தங்கி
அரிஸ்டாட்டிலின்
கருத்துக்கு எதிர்
கருத்து தெரிவித்த
காரணத்தினால்
ஜெர்மனியின்
கோபத்திற்கு ஆளான
காரணத்தால்
ஜியார்டானோ
புருனோவால்
ஜெர்மனியில்
நீண்ட நாட்கள்
இருக்க முடியவில்லை

1588-ஆம் ஆண்டு
பராகுவே(Prague)
சென்றார்

1591-ஆம் ஆணடு
இத்தாலிக்க நண்பர்கள்
ஜியார்டானோ
புருனோவை
அழைத்ததின் பேரில்
ஜியார்டானோ புருனோ
இத்தாலி சென்றார்
நினைவாற்றல்
கணக்கை எப்படி
பயன்படுத்த வேண்டும்
என்பதையும்,
அதன் மாய
மந்திரங்களை
எப்படி பயன்படுத்த
வேண்டும் என்பதையும்
கற்றுக் கொடுப்பதற்காக
அழைக்கப்பட்டார்

ஜியோவானி மொசிங்கோ
(Giovanni Mocenigo)
எதிர்பார்த்தபடி
ஜியார்டானோ புருனோ
மாயங்கள் எதுவும்
சொல்லித் தரவில்லை
ஏமாந்த
ஜியோவானி மொசிங்கோ
ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக
செயல்படுகிறார்
என்று அவரை
குற்றம் சாட்டி
மதத் துவேஷம்
என்ற போர்வையில்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையிடம்
புருனோவைக்
காட்டி கொடுத்தார்

டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும் ;
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்ற நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கோட்பாடு
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்ன
காரணத்திற்காக
பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொன்னார் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
செயல்பட்டார் ;
என்று
1592-ஆம் ஆண்டு
மே மாதம் 22-ஆம் தேதி
ஜியார்டானோ புருனோ
கைது செய்யப்பட்டார்

1593-ஆம் ஆண்டு
ரோமிற்கு கொண்டு
வரப்பட்டார்
அன்றைய போப்
எட்டாம் கிளமெண்ட்
(Pope Clement VIII)
தன்னுடைய நிலையில்
உள்ள உண்மையை
உணர்ந்து கொள்வார்
அதனை புரிந்து
கொண்டு நல்ல
ஒரு முடிவை
எடுப்பார் என்று
ஜியார்டானோ புருனோ
எதிர்பார்த்தார்
ஆனால்
ஜியார்டானோ
புருனோவின்
எதிர்பார்ப்பு
ஈடேறவில்லை
ஜியார்டானோ புருனோ
சிறையில்
அடைக்கப்பட்டார்.

---------  இன்னும் வரும்
---------  19-12-2018
///////////////////////////////////////////////////////////