October 14, 2021

பதிவு-7-புத்தேள்- திருக்குறள்-

 பதிவு-7-புத்தேள்

திருக்குறள்-

 

ஆகட்டும் என்று

டாக்டர் குன்ஸை

அடுத்த வேலையை

பார்க்கக் சொன்னார்

அவர் தன்னால்

முடியாது என்று

அங்கிருந்து நகர்ந்தார்

என்னால் மட்டும்

முடியுமா என்ன

மக்டா தவித்தாள்.

 

ஹிட்லரின் பிரத்யேக

டாக்டர் லூட்விக்

ஸ்டெம்ப்பெக்கரை

வரவழைத்தாள்.

அவர் தயக்கத்துடன்

ஒப்புக் கொண்டார்.

ஆறு குழந்தைகளின்

வாயிலும் இனிப்பு

கலந்த கலவை

ஊற்றப்பட்டது.

அதில் சயனைடு

கலந்து இருந்தது.

 

போரில்

பல்லாயிரக்

கணக்கானவர்களின்

உயிரைக் குடித்த

அதே சயனைடு

 

குழந்தைகளின்

இறுதி இருமல்கள்

அந்த அறை

முழுவதும்

எதிரொலித்தது

நெஞ்சு வெடித்த

நிலையில்

அறைக்குள்ளிருந்து

வெளியேறினாள்

மக்டா

அதற்குள்

குழந்தைகளின்

உயிர்கள்

வெளியேறி

இருந்தன

 

தன் அறையில்

கோர்ட் தொப்பி

கையுறை எல்லாம்

அணிந்து

கோயபெல்ஸ்

தயாராகவே இருந்தார்.

மக்டாவைப் பார்த்த

கோயபெல்ஸ்

அவரிடம் எதுவும்

கேட்கவுமில்லை

ஒன்றும்

பேசவுமில்லை

மக்டாவும்

அமைதியாக இருந்தார்

அவரும் எதுவும்

சொல்லவில்லை.

மக்டாவின்

கையைப் பிடித்து

அங்கிருந்து

வெளியேறினார்

கோயபெல்ஸ்.

 

நிலவறையின்

மேற்குப் பக்க

படிக்கட்டுக்களில்

ஏறி தோட்டத்துக்கு

வந்தார்கள்.

அங்கே

இரு வீரர்கள்

பெட்ரோல் கேனுடன்

தயாராக இருந்தார்கள்

கோயபெல்ஸும்

மக்டாவும்

சற்று தள்ளி ஒரு

மறைவிடத்துக்குச்

சென்றார்கள்

 

எதிர் எதிரே

நின்று கொண்டார்கள்.

அடுத்த நிமிடம்

தோட்டா வெடிக்கும்

சத்தம் கேட்டது

அடுத்த நொடியில்

கோயபெல்ஸின்

அலறரோடு

இன்னொரு

தோட்டா வெடித்தது

 

இரண்டு வீரர்கள்

இரண்டு கேன்களுடன்

ஓடி வந்தார்கள்

 

பிணமாகக் கிடந்த

கோயபெல்ஸ் மற்றும்

மக்டா மீது

பெட்ரோலை

ஊற்றினார்கள்.

பெட்ரோல்

குறைவாகத்

தான் இருந்தது

 

பரவாயில்லை

நெருப்பை வை

என்றார்கள்.

கோயபெல்ஸ்

மக்டா கோயபெல்ஸ்

ஆகிய இருவருடைய

உடலும்

அரை குறையாக

எரிந்து அணைந்தது.

 

நம்பிக்கைக்கு

எடுத்துக் காட்டாய்

இந்த உலகத்தில்

வாழ்ந்த கோயபெல்ஸ்

உடல் சாம்பலானது

 

ஹிட்லர்

வாழும் போதே

நம்பிக்கைக்குரியவராக

வாழ்ந்தவர்

ஹிட்லர்

சொன்னவைகளை

செயல்படுத்தியவர்

ஹிட்லர்

இறந்த பிறகு

ஹிட்லருக்காக

தன்னுடைய

குடும்பத்தையே

அழித்துக்

கொண்டவருடைய

சாம்பல்

காற்றில் கலந்தது

 

ஹிட்லர்

உயிரோடு

இருந்த போதும்

ஹிட்லர்

இறந்த பிறகும்

அவருடைய

நம்பிக்கையை

காப்பாற்றுபவராகவே

இருந்தார்

கோயபெல்ஸ்

 

கோயபெல்ஸ்

தனக்காக

வாழாமல்

தன்னுடைய

குடும்பத்திற்காக

வாழாமல்

ஹிட்லருக்காகவே

வாழ்ந்தவர்

ஹிட்லருக்காகவே

இறந்தவர்

“இந்த உலகத்திலும்,

வேறு எந்த

உலகத்திலும்

பிறருக்காகவே

வாழ்வதைப் போன்ற

செயலை விட

உயர்ந்த செயல்

வேறு ஒன்றும்

கிடையாது.”

என்பதை

கோயபெல்ஸ்

தான் வாழ்ந்த

வாழ்க்கையின்

மூலம் இந்த

உலகத்திற்கு

நிரூபித்து

இருக்கிறார்

 

இந்த உலகத்திலும்,

வேறு எந்த

உலகத்திலும்

பிறருக்காகவே

வாழ்வதைப் போன்ற

செயலை விட

உயர்ந்த செயல்

வேறு ஒன்றும்

கிடையாது.”

என்பதைத் தான்

 

“புத்தேள்

உலகத்தும்

ஈண்டும்

பெறல்அரிதே

ஒப்புரவின்

நல்ல பிற”

 

என்ற திருக்குறளின்

மூலம்

தெளிவுபடுத்துகிறார்

திருவள்ளுவர்

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

பதிவு-6-புத்தேள்- திருக்குறள்

 பதிவு-6-புத்தேள்-

திருக்குறள்-

 

ஹிட்லர்

இறந்த செய்தி

மக்களுக்கு

தெரியவும் கூடாது

ஹிட்லர்

இறுதி நிமிடத்தில்

தப்பி விட்டார்

என்ற

செய்தியைத் தான்

பரப்ப வேண்டும்

என்பதே

கோயபெல்ஸ் திட்டம்

 

நிலவறையில்

மீதமிருந்த

சில தளபதிகளும்

அதிகாரிகளும்

கோயபெல்ஸைத்

தேடி வந்தனர்.

அனைவருமே

அங்கிருந்து தப்பிக்கும்

அவசரத்தில்

நீங்களும் என்னுடன்

வந்து விடுங்கள்

என்றனர்

 

சோதனையான

தருணத்தில் நான்

தலைநகரை விட்டு

ஓடிவிட்டால் பிறகு

மற்றவர்களைக்

குற்றம் சொல்ல

முடியாது

என்னைக்

காப்பாற்றிக்

கொள்வதற்காகத்

தான் என்றாலும்

நான் அப்படிச்

செய்ய மாட்டேன்

ஒரு கப்பல்

மூழ்கும் போது

அதன் மாலுமியும்

சேர்த்து மூழ்கத்

தான் வேண்டும்

என்று

நிதானமாகச்

சொன்னார்

கோயபெல்ஸ்

 

இது கூட சில

தினங்களுக்கு முன்

ஹிட்லர் சொன்ன

வார்த்தைகள் தான்

அனைவரும்

அவரிடமிருந்து

விடை பெற்றார்கள்

 

கோயபெல்ஸ்ஸுக்கு

ஆறு குழந்தைகள்

மூத்தவளுக்கு

வயது 12

கடைசி பெண்ணுக்கு

வயது 4

HELGA.

HILDE.

HELMUT.

HOLDE,

HEDDA.

HEIDE.

எல்லோருடைய

பெயரும் H–ல்

தான் ஆரம்பிக்கும்..

 

கோயபெல்ஸ்க்கு

ஹிட்லர் மேல்

இருந்த பாசம்

தன்னுடைய

குழந்தைகளுக்கு

பெயர் வைத்ததிலிருந்து

தெரிகிறது

 

இரவு மணி 08.40

 

தங்களுக்குள்

சிரித்து பேசி

விளையாடிக்

கொண்டிருந்த

குழந்தைகள்

கோயபெல்ஸின்

மனைவி

மக்டா கோயபெல்ஸ்

அறைக் கதவைத்

திறந்து உள்ளே

நுழைந்ததுமே

தத்தம்

படுக்கைகளுக்குத்

தாவிச் சென்று

படுத்துக் கொண்டனர்

 

ஒவ்வொரு

குழந்தையின்

அருகில் சென்று

நெற்றியில்

முத்தமிட்டாள்

இறுதியாக

மூத்த பெண்

ஹெல்காவை

முத்தமிட்டாள்

 

அப்போது

பல் டாக்டர் குன்ஸ்

அறைக்குள்

தன்னுடைய

உதவியாளருடன்

நுழைந்தார்.

அவர் கையிலிருந்த

ஊசியைப் பார்த்ததும்

12 வயது

ஹெல்காவுக்கு

ஏதோ நடக்கப்

போகிறது என்று

தெரிந்து விட்டது

அதை அவளது

கண்கள் மற்றும்

உடல் அசைவின்

மூலம் உணர்ந்து

கொண்ட மக்டா,

 

ஹெல்காவின்

கரங்களை

இறுகப் பற்றினாள்.

குன்ஸ்

ஹெல்காவுக்கு

ஊசி போட்டார்

 

அது MORPHINE

என்ற மயக்க மருந்து.

ஒவ்வொரு

குழந்தையின்

உடம்பிலும்

ஊசி இறங்கியது.

மிரண்டு போன

ஒன்பது வயது

சிறுவன் ஹெல்மட்,

தன்னுடைய

படுக்கையிலிருநது

குதித்து

ஓடப்பார்த்தான்.

அவனை பிடித்து

வலுக்கட்டாயமாக

ஊசியைப் போட

வேண்டியதாயிற்று.

குழந்தைகள்

மயங்கினார்கள்

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

பதிவு-5-புத்தேள்- திருக்குறள்

 பதிவு-5-புத்தேள்-

திருக்குறள்

 

தன்னுடைய

குறைகளையே

நிறைகளாக்கி

வாழ்க்கையின்

உயர்வான

நிலைகளை

அடைந்தவர்

 

ஆமாம்

அவமானங்களையும்

ஏளனங்களையும்

தாண்டி சரித்திரம்

படைத்தவர் தான்

கோயபெல்ஸ்

 

நினைவில் நிறுத்த

வேண்டிய பெயர்

கோயபெல்ஸ்

 

அத்தகைய

கோயபெல்ஸ்

தான் தகடு

பொருத்தப்பட்ட

குறையுடைய

தன்னுடைய

வலது காலால்

கெந்திக் கெந்தி

நடந்தபடி தன்

அறையில்

நுழைந்தார்

 

நம்முடைய

குழந்தைகளை

மட்டுமாவது

இந்த பெர்லினை

விட்டு வெளியேற்றி

அனுப்பி விடலாமா

அல்லது

நீயும் அவர்களுடன்

பெர்லினை விட்டு

வெளியேறி

செல்கிறாயா என்று

கோயபெல்ஸ்

தன்னுடைய

மனைவி மக்டா

கோயபெல்ஸ்ஸைப்

பார்த்துக் கேட்டார்

 

இப்படி செய்வது

ஹிட்லர் உயிரோடு

இருக்கும் போது

அவருக்கு

நம்பிக்கையாக

இருந்து விட்டு

ஹிட்லர்

இறந்த பிறகு

நான் பெர்லினை விட்டு

வெளியேறுவதும்

நம்முடைய

குழந்தைகளை

பெர்லினை விட்டு

வெளியேற்றுவதும்

ஹிட்லருக்கு

நாம் செய்யும்

நம்பிக்கை துரோகமாக

இருக்காதா  

 

உங்களை நம்பிக்கையாக

கூட வைத்திருந்த

உங்கள் தலைவர்

ஹிட்லருக்கு

நீங்கள் செய்யும்

நம்பிக்கைத்

துரோகமாக இருக்காதா

இப்படி சொன்னார்

அவருடைய மனைவி

மக்டா கோயபெல்ஸ்

 

என்னுடைய

தலைவர் ஹிட்லர்

அவர்களுக்கு

நான் தான்

நம்பிக்கைக்குரியவன்

என்று நினைத்தேன்

என்னுடைய

மனைவியான

நீயும் நம்பிக்கைக்கு

உரியவளாக

இருப்பது எனக்கு

மகிழ்ச்சியாக

இருக்கிறது

 

நீ எந்த

நிலையில்

இருக்கிறாய்

குழந்தைகளின் மேல்

பாசம் கொண்ட

ஒரு தாயாக

இருக்கிறாயே

குழந்தைகளைக்

காப்பாற்றும் எண்ணம்

உன்னுடைய

சிந்தனையில்

இருக்கிறதா என்பதை

அறிந்து

கொள்வதற்காகத்

தான் கேட்டேன்

 

என்னுடைய தலைவர்

ஹிட்லர் உயிரோடு

இருக்கும் போதும்

இறந்த பிறகும்

நான் மட்டும்

இல்லை

என்னுடைய

மனைவியான நீயும்

நம்முடைய

குழந்தைகளும்

ஹிட்லருக்கு

நம்பிக்கைக்கு

உரியவர்களாக

இருந்திருக்கிறோம்

என்பது இப்போது

தெளிவாகி விட்டது

என்றார் கோயபெல்ஸ்

 

என்னுடைய தலைவர்

ஹிட்லர்

இறந்த பிறகு

என்னுடைய தலைவர்

ஹிட்லர்

வழிமுறையைப்

பின்பற்றி

என்னுடைய

மனைவியும்

என்னுடைய

குழந்தைகளும்

இறப்பதற்கு

சம்மதித்து விட்டார்கள் 

இவ்வாறு தன்னுடைய

மரண சாசனத்தை

எழுதினார்

கோயபெல்ஸ்

 

மே 1, 1945

முற்பகல் நேரம்

 

நிபந்தனை ஏதுமின்றி

சரணடைய

ரஷ்யப்

படைகளிடமிருந்து

அழைப்பு வந்திருந்தது.

அந்த அழைப்பை

நிரராகரித்தார்

கோயபெல்ஸ்.

 

அப்போது வரை

ஹிட்லரின்

இறப்புச் செய்தி

கசியவில்லை

ஹிட்லர்

இறந்து விட்டார்

என்ற செய்தி

உலகத்திற்கு தெரியாது

 

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////

பதிவு-4-புத்தேள்- திருக்குறள்-

 பதிவு-4-புத்தேள்-

திருக்குறள்-

 

தனக்காக வாழாமல்

ஹிட்லருக்காகவே

வாழ்ந்தவர் ;

ஹிட்லருக்காக

தன்னையே

அர்ப்பணித்தவர் ;

நம்பிக்கைக்கு

அடையாளமாகத்

திகழ்ந்தவர் .

 

ஹிட்லருக்காகவே

தன்னையே

அழித்துக் கொண்டவர்.

 

இந்த உலகம்

காணாத மிகச்சிறந்த

அரசியல்

ராஜதந்திரியாக

இருந்தவர் .

 

வரலாற்றினால்

தவறாக

சித்தரிக்கப்பட்டவர் .

 

வரலாற்றினால்

சரியாக

கணிக்கப் படாதவர் .

 

ஹிட்லர் ஒரு

இறைத்தூதர் என்று

ஜெர்மானியர்களை

நம்ப வைத்த

பிரசார பீரங்கியாக

இருந்தவர்.

 

இல்லாத ஒன்றை

மீண்டும் மீண்டும்

சொல்லிச் சொல்லியே

பொய்களை

நிஜமாக்கியவர்.

 

நம்பிக்கைக்கு

எடுத்துக் காட்டாய்

இருந்தவரை

பொய்யர் என்ற

வார்த்தைக்குள்

வரலாறு தவறாக

சித்தரித்து

வைத்து இருப்பவர்.

 

ஹிட்லருக்குப் பிறகு

நாஜிப்படைகளின்

தலைவராக

இருந்தவர்.

 

ஜெர்மனியின்

கொள்கைப்

பிரசார அமைச்சர்,

ஜெர்மன் அரசின்

செய்திப்பிரிவு,

செய்தித்தாள்,

வானொலி,

திரைப்படங்கள்

நாடகங்கள்

உள்ளிட்ட அனைத்து

ஊடகங்களும்

தனது கட்டுப்பாட்டில்

வைத்து இருந்தவர்.

 

அனைத்து

ஊடகங்களும்

அவர் இடும்

கட்டளைக்கு

அடிபணிந்து

செயல்படக் கூடிய

நிலையில்

வைத்து இருந்தவர்.

 

ஊடகங்களை

தான் சொல்லும்

வேலைகளைச்

செய்யும்

வேலைக்காரர்களாக

எதிர்த்து பேசாமல்

செயல்படும்

அடிமைகளாக

வைத்து இருந்தவர்.

 

இவர் இல்லாமல்

எந்த ஒரு ஊடகமும்

அசைய முடியாது

என்ற நிலையில்

இருந்தவர்.

 

இல்லாத ஒன்றை

இருப்பது போலவும் ;

 

இருக்கின்ற ஒன்றை

இல்லாதது போலவும் ;

 

நடக்காத ஒன்றை

நடந்தது போலவும் ;

 

நடந்த ஒன்றை

நடக்காதது போலவும் ;

 

நடக்கப்போகும்

ஒன்றை இனி

நடக்கவே முடியாது

என்பது போலவும் ;

 

தன்னுடைய

வலிமையான

வார்த்தைகளாலேயே

அனைவரையும்

நம்ப வைத்தவர்.

 

தன்னுடைய

பேச்சாற்றலால்

அனைவரையும்

அடிமைப்படுத்தியவர் ;

 

தன்னுடைய

வார்த்தைகளாலேயே

மக்கள் மனதில்

எழுச்சியூட்டியவர் ;

 

தன்னுடைய

சொற்களாலேயே

உலக நாடுகளையே

மிரள வைத்தவர்  ;

 

உலக அரசியலில்

அழிக்க

முடியாத பெயர்

 

ஆமாம்

மக்களால்

ஒதுக்கப்பட்டவர்

மக்களால்

ஏளனமாகப்

பார்க்கப்பட்டவர்

மக்களால்

அவமதிக்கப்

பட்டவர்

உலக மக்கள்

அனைவரையும்

ஜெர்மானியர்களுக்கு

அடிமையாக்குவதற்கான

செயல்களைச்

செய்தார்

 

 

-----என்றும் அன்புடன்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----14-10-2021

/////////////////////////////////////////