April 15, 2020

பரம்பொருள்-பதிவு-201


              ஜபம்-பதிவு-449
            (பரம்பொருள்-201)

“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
நீ செய்த
இந்தத் தியாகம்
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவராலும்
போற்றப்படப்
போகிறது “
    
“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய
புகழ் அழியாமல்
நிலைத்து
நிற்கப்
போகிறது “

“இந்த உலகமே
உன்னை
தெய்வமாக
நினைத்து
வழிபடக் கூடிய
நிலை உருவாகப்
போகிறது “

“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
உன்னை
நினைத்து
வழிபடக் கூடியவர்கள்
இருந்து
கொண்டு தான்
இருக்கப்
போகிறார்கள் “

“இந்த உலகம்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய
இறப்புக்காக
கண்ணீர்
சிந்தக் கூடிய
இலட்சக்கணக்கான
மக்கள் இருந்து
கொண்டு தான்
இருக்கப்
போகிறார்கள் “

“காளிதேவி
பஞ்ச
பாண்டவர்களை
நோக்கி
திரும்பினாள் “

“அர்ஜுனா !
நீ பெற்றெடுத்த
மகன் என்றும்
பாராமல்
உலக மக்களின்
நன்மைக்காக
உன்னுடைய
மகனையே
எனக்கு
களப்பலியாகக்
கொடுத்திருக்கும்
உன்னுடைய
செயல்
என்னை
பிரமிக்க
வைக்கிறது “

“பஞ்ச
பாண்டவர்களாகிய
நீங்கள்
அனைவரும் 
ஒன்றாகச் சேர்ந்து ;
அனைவருடைய
ஒப்புதலையும்
பெற்று ;
அனைவரும்
ஒன்றாக
இணைந்து ;
அரவானை
களப்பலியாகக்
கொடுத்த செயல்
என் மனதை
நெகிழச்
செய்கிறது ; “

“இந்த உலகமே
இரண்டு
அணிகளாக
பிரிந்து
எதிர் எதிராக நின்று
போரிடுவதற்காகக்
காத்துக்
கொண்டிருக்கும்
குருஷேத்திரப்
போரில்
பாண்டவர்களாகிய
நீங்களே
வெற்றி
பெறுவீர்கள் “

“இந்த உலகம்
முழுவதையும்
ஒரு குடையின்
கீழ் வைத்து
அரசாண்டு
மக்களை
காக்கக் கூடிய
மிகப்பெரும்
பொறுப்பைக்
கொண்ட
மாபெரும்
அரசர்களாக
பஞ்ச
பாண்டவர்களாகிய
நீங்கள் ஐவரும்
திகழ்ந்து இந்த
உலகத்தையே
அரசாள்வீர்கள் “

“என்ற வரங்களை
உங்களுக்கு
அளிக்கிறேன் என்று
காளிதேவி
வாழ்த்தினாள் “

“நின்ற நிலையில்
வணங்கிக்
கொண்டிருந்த
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
காளிதேவியின்
காலில்
விழுந்து
வணங்கினர் “

“காளிதேவி
அனைவரையும்
ஆசிர்வதித்தாள் “

“கிருஷ்ணன்
இரண்டு
கைகளாலும்
காளியை
வணங்கினார் “

“காளிதேவி
கிருஷ்ணனைப்
பார்த்து
சிரித்து விட்டு
மறைந்து
விட்டாள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////



பரம்பொருள்-பதிவு-200


              ஜபம்-பதிவு-448
            (பரம்பொருள்-200)

“அந்த இடமே
பலத்த சத்தத்தால்
அதிரும் வகையில்
காற்றில்
பரந்த கூந்தலை
தலையில் தாங்கி ;
கருமையான
நிறத்தை
உடலில் தாங்கி ;
ஆவேசத்தை
முகத்தில் தாங்கி ;
கோபக்கனலை
விழிகளில் தாங்கி ;
அச்சமூட்டும்
புருவங்களைத் தாங்கி ;
நெற்றியில்
நெற்றிச்
சுட்டியைத் தாங்கி ;
காதில்
கம்மலைத் தாங்கி ;
மூக்கில்
மூக்குத்தியைத் தாங்கி ;
சிவப்பை
நாக்கில் தாங்கி ;
மண்டை ஓடுகளை
கழுத்தில் தாங்கி ;
காலில்
கொலுசுகளைத் தாங்கி ;
கையில்
வாளைத் தாங்கி ;
அரவானுக்கு
அருளை வாரி
வழங்குவதற்காக
காளிதேவி
ஆவேசமாக
அரவான் முன்னால்
வந்து நின்றாள் ; ‘

“காளிதேவியின்
முகத்தில்
இருந்த இரத்தம்
அரவானுடைய
இரத்தம் என்று
தெள்ளத்
தெளிவாகத்
தெரிந்தது  

“காளிதேவியின்
நாக்கில்
இருந்து
வழிந்த
அரவானுடைய
இரத்தம்
காளிதேவியின்
உடலை
இரத்தத்தால்
நனைத்துக்
கொண்டிருந்தது  

“காளிதேவியின்
வாயைச்
சுற்றிலும்
இருந்த
இரத்தத் துளிகள்
காளிதேவி
அரவானுடைய
இரத்தத்தை
குடித்ததற்கான
அடையாளமாக
இருந்து கொண்டு
இருந்தது “ 

“ஆவேசத்தை
வெளிப்படுத்திக்
கொண்டு
நேரில் தோன்றிய
காளி ;
அச்சத்தை
ஊட்டும் வகையில்
நேரில் தோன்றிய
காளி  ;
பயத்தை ஏற்படுத்தும்
வகையில்
நேரில் தோன்றிய
காளி ;
பஞ்ச
பாண்டவர்களையும்
கிருஷ்ணனையும்
பார்த்து விட்டு
கொஞ்சம்
கொஞ்சமாக
அமைதி
நிலைக்கு
திரும்பினாள் ; “

“பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
காளிதேவியை
இரு கரங்களையும்
ஒன்றாகக் குவித்து
வணங்கிய
வண்ணம் நின்று
கொண்டிருந்தனர்  

“அமைதி நிலைக்கு
திரும்பிய காளி
அரவானை நோக்கி
பேசத் தொடங்கினாள் “

“மகனே !
அரவான்
நீ செய்த
செயலால்
என்னுடைய தாகம்
தணிந்தது ;
யாராலும் எளிதில்
குளிர்விக்க முடியாத
என்னுடைய
உள்ளம் உன்னால்
குளிர்ந்தது ;
காலம் காலமாக
வறண்டு கிடந்த
என்னுடைய
மனம்
மகிழ்ந்தது ; “

“யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய
தியாகத்தைச்
செய்து இருக்கிறாய் “

“தன்னலம்
கருதாது
பொதுநலத்திற்காக
உன்னையே
களப்பலியாகத்
தந்திருக்கிறாய் “

“உன்னையே
இந்த உலகத்தின்
நன்மைக்காக
ஒப்படைத்திருக்கிறாய் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-199


               ஜபம்-பதிவு-447
              (பரம்பொருள்-199)

“கண்ணிமைக்கும்
நேரத்தில்
அந்த இடமே
மாறத்
தொடங்கியது “

“வானத்தில்
திரிந்து
கொண்டிருந்த
மேகங்கள்
அனைத்தும்
ஒன்றாகக் கூடி
கருமையாக
மாறியதால்
அந்த இடத்தில்
உள்ள
வெளிச்சம்
முழுவதும்
மறையத்
தொடங்கியது ; “

“வெளிச்சம்
மறையத்
தொடங்கியதால்
ஒளியால்
நிரம்பியிருந்த
அந்த இடமே
இருளால் சூழத்
தொடங்கியது “

“இருளால்
சூழப்பட்டு
இருந்ததால்
இரவு என்று
நினைக்கும்
வகையில்
அந்த இடம்
இருந்தது “

“கதிரவன்
தன்னை
மறைத்துக்
கொண்டு
எங்கு
சென்றான்
என்றே
தெரியவில்லை “

“பலமாக அடித்த
காற்றினால் 
அந்த
இடத்தில்
உள்ள
இலைகள் ;
தழைகள் ;
பூக்கள் ;
அனைத்தும்
காற்றினால்
அடித்துச்
செல்லப்பட்டுக்
கொண்டு
இருந்தது “

“மழை
வருவதற்கான
எந்தவிதமான
அறிகுறியும்
தென்படவில்லை “

 “ஆனால்
இடியும்
மின்னலும்
மாறி மாறி
அடித்துக்
கொண்டு
இருந்தது “

“நரிகள்
ஒன்றாகக் கூடி
ஊளையிடும்
சத்தம் கேட்டது ;
ஆந்தைகள்
ஒன்றாகக் கூடி
அலறும்
சத்தம் கேட்டது ;
கோட்டான்கள்
ஒன்றாகக் கூடி
குமுறும் சத்தம்
கேட்டது ;

“காட்டில்
வாழ்ந்து
கொண்டிருக்கும்
பல்லாயிரக்கணக்கான
மிருகங்கள்
அனைத்தும்
காட்டில்
அங்கும்
இங்கும்
பயத்துடன்
ஓடத்
தொடங்கியது “

“பல்லாயிரக்கணக்கான
பறவைகள்
அனைத்தும்
அச்சத்தில்
ஒரே
சமயத்தில்
வானத்தை
நோக்கி
பறக்கத்
தொடங்கியது “

“பல்லாயிரக்கணக்கான
விலங்குகள்
எழுப்பிய
ஒலியும்  ;
பல்லாயிரக்கணக்கான
பறவைகள்
எழுப்பிய
ஒலியும் ;
இதயத்தை
வெடிக்கச்
செய்யும்
வகையில்
இடி எழுப்பிய
ஒலியும் ;
அந்த
இடத்தையே
அதிர
வைத்துக்
கொண்டிருந்தது ; “

“என்ன
நடந்து
கொண்டிருக்கிறது
என்று
கணிக்க முடியாத
அளவிற்கு
அச்சத்தை
ஏற்படுத்தும்
வகையில்
அந்த இடமே
மாறி
விட்டிருந்தது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-198


             ஜபம்-பதிவு-446
            (பரம்பொருள்-198)

“அங்கு
நிரம்பியிருந்த
அமைதியை
கிழித்துக் கொண்டு
அரவான் …………………….
என்று குரல்
கொடுத்தார்
கிருஷ்ணன் “

“அந்த இடமே
அரவான் என்ற
வார்த்தையால்
அதிரும் வகையில்
அரவான்……………………
என்று கத்தினார்
கிருஷ்ணன் “

“அரவான் என்ற
குரலைக் கேட்ட
அதே நேரத்தில்
ஆவேசத்துடன்
உடலை சிலிர்த்த
அரவான்
இடது கையால்
தலையில் உள்ள
தலை முடியைப்
பிடித்துக் கொண்டு
வலது கையில்
இருந்த வாளை
எடுத்து
கழுத்தை
ஒரே வீச்சில்
வெட்டினான்
அரவான் “

“தலை
உடலிலிருந்து
தனியாக
பிரிந்தது “

“இடது கையால்
தனது தலையை
உடலிலிருந்து
பிரித்து
எடுத்தான்
அரவான் “

“வெட்டப்பட்ட
தலை இருந்த
அரவானின்
உடலில் இருந்து
இரத்தம்
வானத்தை நோக்கி
பீறிட்டு அடிக்கத்
தொடங்கியது “

“அரவான்
இடது கையில்
பிடித்திருந்த
தலையில் இருந்து
சிந்திய இரத்தம்
பூமியை
நனைக்கத்
தொடங்கியது “

“அரவான்
உடலிலிருந்து
பீறீட்ட இரத்தம்
வானத்தை
நோக்கியும் ;
தலையிலிருந்து
சிந்திய இரத்தம்
பூமியை
நோக்கியும் ;
சிந்தத்
தொடங்கியதால்
அந்த இடமே
இரத்தக் காடாக
மாறி இருந்தது “

“அந்த இடம்
முழுவதும்
அரவானுடைய
இரத்தம்
ஆறாக ஓடிக்
கொண்டிருந்தது  

“அந்த இரத்த
ஆற்றில் தான்
அனைவரும்
நின்று
கொண்டிருந்தனர்  

“அரவான் தலையை
வெட்டிய போது
சிதறிய இரத்தம்
பஞ்ச
பாண்டவர்களின்
உடலையும்  ;
கிருஷ்ணனின்
உடலையும்
நனைத்தது ;”

“தரையில்
ஓடிய இரத்தம்
பஞ்ச
பாண்டவர்களின்
காலையும்
கிருஷ்ணனின்
காலையும்
நனைக்கத்
தொடங்கியது “

“வலது கையில்
இரத்தம் வழியும்
வாளுடனும் ;
இடது கையில்
வெட்டப்பட்டு
இரத்தம் வழிந்து
கொண்டிருக்கும்
தலையுடனும் ;
கழுத்து
அறுபட்ட நிலையில்
நின்று
கொண்டிருக்கும்
உடலுடனும் ;
அரவான்
காளிதேவியின்
முன்னால்
நின்று
கொண்டிருந்தான் “

“பஞ்ச
பாண்டவர்களுடைய
உடல் மீது
அரவானுடைய
இரத்தம் சிதறியதால்
அவர்களுடைய
உடல் சிவப்பாக
மாறி இருந்தது “

“கிருஷ்ணனின்
உடல் மீதும்
அரவானுடைய
இரத்தம் சிதறியதால்
கிருஷ்ணனுடைய
உடலும் சிவப்பாக
மாறி இருந்தது “

“அரவானுடைய
உடலும்
அரவானுடைய
இரத்தத்தாலேயே
சிவப்பாக மாறி
இருந்தது “

“பசுமையாக இருந்த
அந்த இடமே
இரத்தத்தால்
சிவப்பாக
மாறி இருந்தது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////