December 17, 2018

திருக்குறள்-பதிவு-69


                       திருக்குறள்-பதிவு-69

1581-ஆம் ஆண்டு
பிரான்ஸ் வந்த
ஜியார்டானோ புருனோ
பிரான்ஸிலுள்ள
பாரிசில் அரசர்
மூன்றாம் ஹென்றியின்
(Henry III) ஆதரவுடன்
1581-1582
1582-1583
ஆகிய இரண்டு
ஆண்டுகள் தங்கினார்

இங்கே ஜியார்டானோ
புருனோ தன்னுடைய
அசாத்திய பேச்சுத்
திறமையால் தனக்கென்று
பல நண்பர்களை
உருவாக்கிக் கொண்டார்
இவர்கள் அனைவரும்
ஜியார்டானோ புருனோ
அவர்களின் பேச்சால்
கவரப்பட்டவர்கள் ;
இவர்கள் அனைவரும்
கடவுள் தொடர்பான
செயல்களில்
நம்பிக்கை உள்ளவர்கள் ;
நினைவுக் கலையை
பலப்பல வடிவங்களில்
அவர்களுக்கு
ஜியார்டானோ புருனோ
சொல்லித் தந்தார்.

ரோமாண்டுலாலி
(Raymond Lully)
பற்றியும்,
நினைவுக்கலையின்
அற்புதம் பற்றியதுமான
இவரின் வெளியீடுகள்
பாரிஸில் தான் நிகழ்ந்தன.

ஜியார்டானோ புருனோ
1583-ஆம் ஆண்டு
இங்கிலாந்து சென்றார்
அங்கே காஞ்டெலாஜோ
என்ற நண்பரின்
உதவியுடன்
இங்கிலாந்து அரசியை
(Queen Elizabeth I)
அணுகினார்.
1583-1584
1584-1585
ஆகிய இரண்டு ஆண்டுகள்
இங்கிலாந்தில் தங்கினார்
இங்கிலாந்தில் இரண்டு
ஆண்டுகள் வாழ்ந்த
போதே அவரது
சிறந்த படைப்புகள்
வெளியிடப்பட்டன
இங்கு தான் பிரபஞ்சம்
பற்றிய தனது புதிய
கருத்தை புத்தகமாக
வெளியிட்டார்
ஜியார்டானோ புருனோ

இங்கிலாந்தில் தான்
ஜியார்டானோ புருனோ
உலகப் பிரசித்திப்
பெற்ற தன்னுடைய
புத்தகங்களை ;
வரலாற்றை மாற்றி
அமைத்த தன்னுடைய
புத்தகங்களை ;
மிகப் பெரும்
பிரச்சினைகளை
ஏற்படுத்திய தன்னுடைய
புத்தகங்களை ;
வெளியிட்டார்


டa Cena de
le Ceneri
(1584 ; The Ash
Wednesday Supper)


De I'infinito
universo et mondi
(1584 ; On the
Infinite Universe
and Worlds)


De la causa,
principio et uno
(1584 ; Concerning
the Cause,
principle, and One)

இந்த மூன்று
புத்தகங்களிலும்
ஜியார்டானோ புருனோ
தன்னுடைய இரண்டு
முக்கியமான
கருத்துக்களை விளக்கமாக
குறிப்பிட்டு இருந்தார்

ஒன்று
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கருத்து சரியானது
என்ற கருத்தை
வெளியிட்டு இருந்தார்

இரண்டு
விண்மீன்களுக்கு
இடையே ஈதர் என்ற
காற்று உள்ளது
என்ற கருத்தை
வெளியிட்டு இருந்தார்.

பிரபஞ்சம்
எல்லையில்லாதது ;
முடிவில்லாதது ;
பிரபஞ்சத்தின் ஒரு
பகுதியாக உள்ளது தான்
சூரிய குடும்பம் ;

சூரிய குடும்பத்தில்
பூமி தன்னைத்தானே
சுற்றுகிறது ;
பூமி தன்னைத்தானே
சுற்றுவதால் இரவுபகல்
உண்டாகிறது ;
சூரியன் என்பது இரவு
வானத்தில் தெரியும்
விண்மீன் போல
இருப்பது ஆகும் ;
“””“”சூரியன் தான்
பூமி போன்ற
கோள்களின் மையம்””””
சூரியனை மையமாக
வைத்துத் தான்
பூமி சுற்றுகிறது
இவையனைத்தும்
சேர்ந்தது தான்
சூரிய குடும்பம் ;

வானத்தில் தெரியும்
பல்வேறுபட்ட
விண்மீன்களுக்கும்
இதே போன்ற
கோள்கள் உண்டு ;
விண்மீன்கள்
பிரபஞ்ச வெளியில்
விரவிக் கிடக்கின்றன ;

விண்மீன்கள் இயற்பியல்
விதிப்படி இயங்குகின்றன ;
விண்மீன்களுக்கு
இடையே ஈதர் என்ற
காற்று உள்ளது ;
என பல்வேறுபட்ட
கருத்துக்களை விதைத்தார்
ஜியார்டானோ புருனோ

டாலமி சொன்ன
பூமி மையக் கொள்கை
தவறு என்றும் ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன சூரிய
மையக் கொள்கையே
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்னது அவருக்கு
பிரச்சினையை கொஞ்சம்
கொஞ்சமாக கொண்டு
வந்து கொண்டு இருந்தது

---------  இன்னும் வரும்
---------  17-12-2018
///////////////////////////////////////////////////////////