July 09, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-39


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-39

ஒருவன் தான்
செய்த பாவத்திற்குரிய
விளைவுகள்
தன்னையும்
தன்னுடைய குடும்பத்தையும்
தன்னுடைய சந்ததிகளையும்
பாதிக்கும் என்பதை
அனுபவ ரீதியாக
உணர்ந்து
தான் செய்த
பாவத்திற்குரிய விளைவானது
தன்னையும்
தன்னுடைய குடும்பத்தையும்
தன்னுடைய சந்ததிகளையும்
பாதிக்காமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
செய்யும் செயல்களை
மூன்று நிலைகளாக
பிரித்து விடலாம்

அதாவது
பாவங்களைப் போக்குவதற்காக
மனிதர்களால்
கையாளப்படும் முறைகளை
மூன்று நிலைகளில்
பிரித்து விடலாம்

1.பிராயச்சித்தம்
2.மேல் பதிவு
3.அடியோடு அழித்தல்

1.   பிராயச்சித்தம்
செய்த பாவத்தை
உணர்ந்து வருந்தி
இனிமேல் பாவம்
செய்யக்கூடாது
என்று முடிவெடுத்து
அன்னதானம் செய்வது
கன்னிப் பெண்களுக்கு
திருமணம் செய்வது
ஏழைகளுக்கு உதவுவது
போன்ற பல்வேறு
செயல்களைச் செய்து
பாவத்திற்குரிய
விளைவைக் குறைக்க
பாவத்தின் விளைவு
தங்களை பாதிக்காமல்
இருப்பதற்காக
செய்வது தான்
பிராயச்சித்தம் எனப்படும்.

2.   மேல்பதிவு
செய்த பாவத்தினால்
விளையும் துன்பங்கள்
தன்னை அதிக அளவில்
பாதிக்காமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
தொடர்ந்து நல்ல
செயல்களையே
செய்து கொண்டிருந்தால்
தொடர்ந்து
நல்ல விளைவுகளையே
தரக்கூடிய
செயல்களைச் செய்து
கொண்டிருந்தால்
புண்ணியத்தின்
எண்ணிக்கை அதிகமாகி
புண்ணியத்தின் விளைவான
நன்மைகளைக் கொடுத்து
பாவத்தின் விளைவான
துன்பங்கள் நம்மை
அதிக அளவில்
பாதிக்காமல்
இருக்கும்படிச் செய்யும்
அதனைத் தொடர்ந்து
பாவங்களின்
எண்ணிக்கை குறைந்து
படிப்படியாக பாவமே
இல்லாமல் போய்விடும்
இது தான்
மேல்பதிவு எனப்படும்

3.   அடியோடு அழித்தல்
பக்தி மார்க்கத்தின்               
மூலமாகவோ
ஞான மார்க்கத்தின்
மூலமாகவோ
ஏதேனும் ஒரு
வழியைப் பின்பற்றி
பாவத்தை எப்படி
அழிக்க வேண்டும்
என்ற வழி
முறையை அறிந்து
அத்தகைய முறையைப்
பயன்படுத்தி
பாவத்தின் விளைவுகள்
தன்னை தாக்கி
தீமைகளை
அளிக்காமல் இருக்க
பாவங்களை முற்றிலுமாக
அழித்து விட வேண்டும்
பாவத்தை முற்றிலுமாக
அழிந்து விட்டால்
எந்த ஒரு தீய
விளைவும் ஏற்படாது,
இது தான்
அடியோடு அழித்தல்
எனப்படும்.

பிராயச்சித்தம் என்றால்
செய்த தவறுக்கு
வருந்தி
அதே தவறை
மீண்டும் செய்யாமல்
இருப்பது
என்று பொருள்
இதனை உணராமல்
பிராயச்சித்தம்
செய்பவர்கள் தொடர்ந்து
செய்த பாவத்தையே
மீண்டும் மீண்டும்
செய்து பிராயச்சித்தம்
தேடுவதால்
ஒரு பயனும் இல்லை.

தாங்கள் செய்த
பாவத்தின் விளைவு
தன்னை தன்னுடைய
சந்ததிகளை பாதிக்காமல்
இருப்பதற்காக
கடவுளை வணங்குபவர்களை
பயத்துடன் கடவுனை
வணங்குபவர்கள்
என்று சொல்லலாம்.

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்கள்
பிராயச்சித்தம்
மட்டும் செய்வர்
அவர்களால் மேல்பதிவு
அடியோடு அழித்தல்
ஆகியவற்றைச்
செய்ய முடியாது

மேல்பதிவு
அடியோடு அழித்தல்
ஆகியவைகளை
பக்தியுடன்
வணங்குபவர்களால்
மட்டுமே செய்ய
முடியும்

செய்த தவறு
தன்னையும்
தன்னுடைய குடும்பத்தையும்
சந்ததிகளையும்
பாதிக்காமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக கடவுளை
பயத்துடன் வணங்குகின்றனர்
இத்தகையவர்களைத்
தான் நாம்
பயத்துடன் கடவுளை
வணங்குபவர்கள்
என்கிறோம்

தவறு செய்யாதவன்
கடவுளை பயத்துடன்
வணங்க வேண்டிய
அவசியம் இல்லை
தவறு செய்பவன் தான்
கடவுளை பயத்துடன்
வணங்க வேண்டும்

இவர்கள் தான்
கடவுIளை பயத்துடன்
வணங்குபவர்கள்

பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்களைப் பற்றி
இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////