போகர்-7000- சாயா தரிசனம்-தோற்றப் பலன்கள்-பதிவு-9-சுபம்
“”பதிவு ஒன்பதை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
சாயா தரிசனம் - தோற்றப் பலன்கள்:
பாடல்- 1:
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேளையில் காணும் உருவத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும்,
அந்த மாற்றங்கள் என்ன ரகசியத்தைச் சொல்ல வருகின்றன என்பதையும் தொடர்ந்து பார்ப்போம் .
“”””””பார்க்கையிலே சிரசதுவும் தோற்றாவிட்டால்
பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு
தீர்க்கமுடன் இருகரமும் காணாவிட்டால்
தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு
சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு
செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
ஆறவே அறுதிங்கள் மரணமாவான்
அப்பனே சாயாவின் புருஷன்தானே”””””””””
-----------போகர் ------7000------------
“”””””பார்க்கையிலே சிரசதுவும் தோற்றாவிட்டால்
பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு””””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபமாய் எதிரே தெரியும் உருவத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களை வைத்து சாயா தரிசனம் செய்பவர் தனக்கு வருங்காலத்தில் நடைபெறக் கூடிய நிகழ்வுகளை, மாற்றங்களை , நன்மை , தீமைகளை அறியும் வகைகளைப் பற்றி போகர் கூறுகிறார் .
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது “தன் ரூபத்தில் தலை இல்லாவிட்டால் “ அதாவது தன் ரூபத்தில் தலை தெரியாவிட்டால் சாயா தரிசனம் செய்பவர் ஒரு மாதத்தில் இறந்து விடுவார்.
“””””””தீர்க்கமுடன் இருகரமும் காணாவிட்டால்
தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது “தன் ரூபத்தில் இரண்டு கரங்களும் இல்லாவிட்டால்” அதாவது தன் ரூபத்தில் இரண்டு கைகளும் தெரியாவிட்டால் சாயா தரிசனம் செய்பவர் மூன்று மாதங்களில் இறந்து விடுவார் .
“”””””சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு
செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
ஆறவே அறுதிங்கள் மரணமாவான்
அப்பனே சாயாவின் புருஷன்தானே”””””””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது “தன் ரூபத்தில் மார்பில் ஓட்டை தெரிந்து “ அந்த ஓட்டை வழியாக பார்த்தால் செம்மை நிறமுள்ள சூரியன் நம் கண்களுக்குத் தெரியுமானால் சாயா தரிசனம் செய்பவர் ஆறு மாதங்களில் இறந்து விடுவார்.
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களை வைத்து நமக்கு வருங்காலத்தில் நிகழக் கூடியவைகளை தெரிந்து கொள்ளலாம்.
எனவே சாயா தரிசனம் செய்து வருங்காலத்தில் நமக்கு ஏற்படக் கூடியவைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் போகர்.
பாடல்-2
“”””””தானான தரிசனங்கள் காணும்போது
தகமையுள்ள சொரூபமது குறைவுகண்டால்
கோனான காலாங்கி வாக்குபோலே
கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை
தேனான மனோன்மணியாள் சொரூபம்போல
தெளிவாக உன்ரூபம் கண்டாயானால்
பானான பாருலகில் வெகுகாலம்தான்
பாலகனே இருப்பதுவும் உறுதியாமே “””””””””
-----------போகர் ----7000-----------
“”””””தானான தரிசனங்கள் காணும்போது
தகமையுள்ள சொரூபமது குறைவுகண்டால்
கோனான காலாங்கி வாக்குபோலே
கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை””””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதாவது உருவத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் சாயா தரிசனம் செய்பவர் .
என் குருநாதர் காலங்கிநாதர் சொன்னது போல , அவருடைய வாக்கு போல, சாயா தரிசனம் செய்பவர் இறப்பார் என்பது உண்மை , அதில் பொய் என்ற ஒன்றும் இல்லை என்கிறார் போகர் .
“””””””தேனான மனோன்மணியாள் சொரூபம்போல
தெளிவாக உன்ரூபம் கண்டாயானால்
பானான பாருலகில் வெகுகாலம்தான்
பாலகனே இருப்பதுவும் உறுதியாமே “””””””””
மனோன்மணி :
மனோன் மணி என்றால் மனம் மணி ஆன நிலை என்று பொருள் .
அதாவது மனம் சுருங்கி உயிருடன் இணைந்து பரமாக மாறுவதால் அது அதுவாக மாறுகிறது மனம் மணி ஆகிறது .
மனம் சலனமற்று புலனடக்கம் பெற்று உறுதி பெற்ற நிலை .
தன் உயிர் நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறிந்து உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகிறது இந்த நிலை தான் மனோன்மணி எனப்படும் .
மனம் மணியானவர் ,மனம் தெளிவு பெற்றவர் , உருவம் எப்படி இருக்குமோ அப்படிபட்ட ஒரு உருவத்தை ஒரு முழுமையான உருவத்தை எந்தவிதமான குறைவுகளும் இல்லாமல் சாயா தரிசனம் செய்பவர் தன் உருவத்தைக் கண்டால் ,
சாயா தரிசனத்தில் உருவத்தில் எந்த வித குறைபாடுகளும் , எந்த வித மாற்றங்களும் இல்லாமல் இருந்தால் ,
சாயா தரிசனம் செயபவர் , இந்த உலகத்தில் வெகுகாலம் இருப்பார் ,வாழ்வார் என்பது உண்மை என்கிறார் போகர் .
சாயா தரிசனம் என்றால் என்ன என்றும் ,
சாயா தரிசனம் எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ,
சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் சக்திகள் , பலன்கள் , மகிமைகள் எவை என்றும்,
போகர் கூறியவற்றை பார்த்தோம் .
என்னால் முடிந்தவரை சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் வார்த்தைகளால் சொல்லி விட்டேன் .
மேலும் சாயா தரிசனத்தை செய்து அதன் பலன்களைப் பெற விருப்பப் படுபவர் , சாயா தரிசனம் செய்து அதன் பலன்களை அனுபவித்த ,அனுபவ சாலிகளை அணுகி குருவாக ஏற்றுக் கொண்டு சாயா தரிசனத்தை கற்றுக் கொண்டு பலன் பெறவும்.
சாயா தரிசனத்தை செய்வோம் .
நல்ல பலன்களைப் பெறுவோம்.
சிறப்பான சக்திகளைப் பெறுவோம் .
அதை நல்ல வழிகளுக்கு மட்டுமே பயன் படுத்துவோம்
"“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் சாயாதரிசனம் தான்முற்றதாமே “”