December 13, 2019

பரம்பொருள்-பதிவு-98


            பரம்பொருள்-பதிவு-98

அரவான்  :
"அன்பும் ;கருணையும் ;
கொண்டவனாக
இந்த உலகத்தில்
நான் வாழ்வதற்கு
காரணமாக இருப்பவர் ;
உலகில் உள்ள
அனைத்து உயிர்களையும்
நேசிக்க வேண்டும்
என்று எனக்கு
கற்றுக் கொடுத்தவர் ;
தன்னைப் போல
பிறரை எண்ணும்
தன்மை உள்ளத்தில்
வர வேண்டும்
என்பதை எனக்கு
சொல்லிக் கொடுத்தவர் ;"

"பிறர் நமக்கு துன்பம்
செய்தால்
நாம் எவ்வாறு
கஷ்டப்படுவோமோ ?
அதே போல் தான்
பிற உயிர்களை
நாம் துன்புறுத்தும் போது
அந்த உயிர்களும்
நம்மைப் போல்
கஷ்டப்படும் - எனவே
பிற உயிர்களை
துன்புறுத்தக்கூடாது ?
என்ற உயர்ந்த நெறியை
எனக்கு போதித்தவர் ;"

"அன்பிற்கு
இலக்கணமாக இருப்பவர் ; ;
பாசத்திற்கு
பிறப்பிடமாக உதித்தவர் ;
மாதருக்குள்
மாணிக்கமாகத் திகழ்பவர் ;
பெண்களுக்குள்
வரலாறாக வசிப்பவர் ;
தாய்களுக்குள்
தெய்வத் தாயாக
வாழ்பவர் ;"

"தன்னுடைய கணவனை
எப்போதும் நினைவில்
வைத்து போற்றிக்
கொண்டிருப்பவர் ;
கணவரை கண்
கண்ட தெய்வமாக
அனுதினமும் வழிபட்டுக்
கொண்டிருப்பவர் ;
தன்னுடைய
கணவரைத் தவிர
வேறு யாரையும்
சிந்தனையால் கூட
தீண்டாதவர் ;"

"இந்த உலகம்
கண்டிராத அற்புத
பிறவி அவர்  ;
உலகமே கண்டிராத
அதிசயத்தின் அதிசயமாக
வாழ்ந்து கொண்டிருக்கும்
கருணை தெய்வமான
உலூபியே
என்னுடைய தாய் ;"

"அர்ஜுனன் தன்
இருக்கையில் இருந்து
எழ முயற்சி செய்தான்  ;
கிருஷ்ணன் அவன்
கையைப் பிடித்து
அழுத்தினான் ;
அவன் பேசட்டும்
என்று கண்ணால்
சொன்னார் கிருஷ்ணன்
அர்ஜுனன் தன்
இருக்கையில் அமர்ந்தான் ;"

"அரவான்
தொடர்ந்து பேசினான் "

அரவான்  :
"பொன்னைப் போன்ற
உடல் படைத்து
பொன்னிறமாக
ஒளிர்பவர்  ;
எஃகைப் போன்ற
உள்ளம் படைத்து
கஷ்டங்களை
புறமுதுகிட்டு
ஓடச் செய்தவர் ;
சிங்கம் நிகர்த்த
நடை கொண்டவர்  ;"

"அச்சம் என்றால்
என்ன என்றும்
அச்சத்திற்கான பொருள்
என்னவென்றும்
தெரியாதவர்  ;”

"யாருக்கும் எதற்கும்
எதைக் கண்டும்
எப்போதும்
எந்த காலத்திலும்
அஞ்சாதவர் ;
கலக்கம் என்ற
ஒன்று எப்போதும்
எழாத வகையில்
உறுதியான மனதைக்
கொண்டவர் ;"

"சூழ்ச்சிகளைத்
தகர்த்தெறிந்து
சூதுமதியினரை
அழித்தொழித்து
சூதினால் தன்னை
அழிக்க முடியாது
என்று நிரூபித்துக்
காட்டியவர்  ;
பெண்களை மதித்துப்
போற்றி தெய்வமென
வணங்கி வாழ்ந்து
கொண்டிருப்பவர் ;"

"எதிரிகளின் தூக்கத்தைக்
கலைத்து மரண
பயத்தை ஏற்படுத்திக்
கொண்டிருப்பவர்  ;
இந்த உலகத்தில்
வீரத்திற்கு
எடுத்துக்காட்டாக
திகழ்ந்து
கொண்டிருப்பவர் ;
இந்த உலகம் கண்டிராத
மாவீரனாக இருப்பவர் ;
இனியும் இந்த
உலகம் காண
முடியாத மாவீரனாக
இருக்கக் கூடியவர் ;"

"பீஷ்மரின் அன்பைப்
பெற்றவர்  ;
கிருபாச்சாரியாரின்
ஆசியைப் பெற்றவர்  ;
விதுரரின்
மதிப்பைப் பெற்றவர்  ;
துரோணாச்சாரியாரின்
பிரதம சீடரான
அர்ஜுனனே
என்னுடைய தந்தை !"

"நான் அவர்களுடைய
மகன்
என்னுடைய பெயர்
அரவான் "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 13-12-2019
//////////////////////////////////////////