July 25, 2019

பரம்பொருள்-பதிவு-48

                   பரம்பொருள்-பதிவு-48

திருஞான சம்பந்தர் :
“சிவனின் மகிமையை
இந்த உலகத்தில் உள்ள
அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காக பல்வேறு
செயல்களைச் செய்ய
வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும்;”

“சிவநாமத்தை இந்த
உலகத்தில் உள்ள
அனைவரும் ஏற்றுக்
கொண்டு உச்சரித்து
சிவனை அடைந்து
பிறவிக் கடனை
முடிக்க வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்தோடு
செயல்களைச்
செய்ய வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும்;”

“சைவநெறியின்
கொள்கைகளை
இந்த உலகம் எங்கும்
பரவும்படிச் செய்து
சைவநெறி தழைத்தோங்க
வேண்டும் எனற
காரணத்திற்காக
செயல்களைச் செய்ய
வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும்;”

“சிவனில் இரண்டறக்
கலந்தவன் ;
சிவனின் அருளைப்
பெற்றவன் ;
சிவனின் புகழை
பரப்ப வந்தவர்களில்
நானும் ஒருவன்
என்பதையும் ;”

“நீங்கள் ஒப்புக் கொள்ள
வேண்டும் என்றால்
இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பும்
அற்புதத்தை நான்
செய்து தான் ஆக
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீகளா?”

மக்கள் :
“உங்களுக்கு முன்பு
இருந்தவர்கள்
பல்வேறு விதமான
அற்புதங்களை செய்து
காட்டி இருக்கிறார்களே!”

“பல்வேறு விதமான
அற்புதங்களைச் செய்து
காட்டித் தானே
இந்த உலகத்தில்
வாழ்ந்திருந்தவர்கள்
தங்களுடைய
கொள்கைகளையும்
தங்களுடைய
மதங்களையும்
நிறுவி இருக்கிறார்கள் “

“அத்தகைய
பல்வேறுவிதமான
அற்புதங்களில் ஒன்று
தானே இறந்தவரை
எழுப்புகின்ற அற்புதமும்”

“அப்படி இருக்கும் போது
நீங்கள் மட்டும் ஏன்
இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்ப
மறுக்கிறீர்கள்”

திருஞான சம்பந்தர் :
“இறந்த பூம்பாவையை
உயிரோடு நான்
எழுப்பினால் தான்
நான் வணங்கும்
சிவனின் சக்தியையும்
சிவனின் அருள் பெற்ற
என்னுடைய
சக்தியையும்
நீங்கள் ஏற்றுக்
கொள்வீர்களா?”

“ஒருவர் செய்யும்
அற்புதத்தை வைத்து
அவர் வணங்கும்
கடவுளின் சக்தியையும்;
கடவுளின் அருள்
பெற்ற அவருடைய
சக்தியையும்; எந்த
அளவுகோல் கொண்டு
கணக்கீடு செய்வீர்கள்”

“ஒருவர் செய்யும்
அற்புதத்தை வைத்து
அவர் பெற்ற கடவுள்
சக்தியை எந்த
அளகோலையும்
வைத்து கணக்கீடு
செய்ய முடியாது”

மக்கள் :
“எங்களுக்கு கணக்கீடு
பற்றி எல்லாம்
எதுவும் தெரியாது”

“அதைத் தெரிந்து
கொள்வதற்கு நாங்கள்
விருப்பப்படவும் இல்லை”

“எங்களுக்கு தெரிந்தது
அற்புதம் மட்டுமே”

“இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பி
நீங்கள் அற்புதம்
செய்தால் மட்டுமே
நீங்கள் வணங்கும்
சிவன் உயர்ந்த
சக்தி படைத்தவர்
என்பதையும் ;
நீங்களும் அந்த
சிவனின் அருள்
பெற்றவர் என்பதையும்;
நாங்கள் ஏற்றுக்
கொள்வோம்

திருஞான சம்பந்தர் :
“இல்லாவிட்டால்”

மக்கள் :
“நாங்கள் ஏற்கனவே
சொல்லியது தான்
ஏற்றுக் கொள்ள மாட்டோம்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 25-07-2019
////////////////////////////////////