June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-50


              ஜபம்-பதிவு-542
        (அறிய வேண்டியவை-50)

கிருஷ்ணன் :
“பரிட்சித்
இறந்து
உயிர்ப்
பெற்று
இருக்கிறான்;
இறந்து
உயிர்த்தெழுந்திருக்கிறான்
இறப்பை
வென்று
வந்திருக்கிறான்
இறப்பு
கூட
பரிட்சித்திடம்
தோற்று
விட்டது
இறப்பை
வென்று
உயிர்த்தெழுந்து
வந்த
பரிட்சித்
கிருபரிடம்
விற்பயிற்சி
பெற்று
அறுபது
ஆண்டுகள்
இந்த
உலகத்தை
ஆளுவான்
பாண்டவர்களின்
புகழை
நிலை
நாட்டுவான்
தர்மத்தை
நிலை
நாட்டுவான்
மக்களை
நல்வழியில்
வழி
நடத்துவான்
பரிட்சித்தால்
பாண்டவர்கள்
புகழ்
மேலும்
ஓங்கும்”

(என்று
பரிட்சித்தை
ஆசிர்வதித்தார்
கிருஷ்ணன்)

இந்தக்
கதையின்
மூலம்
நாம்
தெரிந்து
கொள்ள
வேண்டிய
உண்மை
என்னவென்றால்
வித்தையைப்
பயன்படுத்தி
ஒன்றைச்
செலுத்தத்
தெரிந்தவனுக்கு
அதை
திரும்ப
அழைக்கும்
வழி
தெரிந்திருக்க
வேண்டும்
தெரியாமல்
அதை
பயன்படுத்தக்
கூடாது
அப்படி
பயன்
படுத்தினால்
அது
நம்முடைய
அழிவிற்கே
காரணம்
ஆகிவிடும்”

“பிரம்மாஸ்திரத்தை
செலுத்தத்
தெரிந்த
அஸ்வத்தாமனுக்கு
அதை
திரும்ப
அழைக்கும்
வித்தை
தெரியவில்லை
அதனால்
ஏற்பட்ட
பாவத்தால்
தான்
இன்றும்
கூட
அஸ்வத்தாமன்
நிம்மதி
இல்லாமல்
அலைந்து
கொண்டிருக்கிறான் “

“இந்த
அண்ட
சராசரங்களின்
கடைசி
நாள்
வரை
நிம்மதி
இல்லாமல்
அலையக்கூடிய
நிலை
அஸ்வத்தாமனுக்கு
ஏற்பட்டு
இருக்கிறது
என்பதை
நாம்
தெரிந்து
கொள்ள
வேண்டும்

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-49


            ஜபம்-பதிவு-541
       (அறிய வேண்டியவை-49)

கிருஷ்ணன் :
“அழாதே உத்தரை
இந்த உலகத்தின்
ஆதியும்
இருள் தான்   
அந்தமும்
இருள் தான்
இந்த உலகத்தின்
ஆரம்பமும்
இருள் தான்
முடிவும்
இருள் தான்”

“இந்த உலகமே
இருளால் தான்
சூழப்பட்டிருக்கிறது
ஒளி வந்து விட்டு
செல்வது தான்
ஒளி
நிலையானது அல்ல
ஒளி நிலையாக
இருக்க முடியாது”

“இருளில் ஒளி
இருந்து விட்டுத்
தான் செல்லும்
இருளில் இருக்கும்
ஒளி இருளில்
கரைந்து
இருளாகவே
மாறி விடும்
ஒளி என்று ஒன்று
தனியாக இல்லை
ஒளி இருளில்
வந்து விட்டுச்
செல்வது தான்
ஒளி
நிலையில்லாதது
இருள்
நிலையானது”

“ஒளியை மதிக்கும்
நாம் - இருளை
மதிப்பதே இல்லை
இருளின் மதிப்பு
யாருக்கும்
தெரிவதே இல்லை
இருளின் மதிப்பை
உணர்ந்தவர்கள் தான்
இருளைப்
போற்றுவார்கள்
இருளின்
மதிப்பைப் பற்றித்
தெரியாதவர்கள் தான்
இருளைக் கண்டு
பயப்படுவார்கள்
இருளின் மதிப்பை
உணர்ந்தவர்கள்
இருளிலிருந்து தான்
அனைத்தும்
தோன்றியது
என்பதை
உணர்ந்து
இருப்பார்கள்
பிரபஞ்ச
படைப்பிற்கு
அடிப்படை
காரணமே
இருள் தான்”

“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள உயிர்கள்
அனைத்தும்
தோன்றியதே
இருளில் தான்
ஏன் தாயின்
கர்ப்பப்பையில்
குழந்தை இருளில்
தான் இருக்கிறது
இருளில் இருந்து
தான் அதன்
பிறப்பே
தோன்றுகிறது
அப்பேற்பட்ட
சிறப்புகள் வாய்ந்த
இருளைப்
பற்றி தவறாக
நினைக்காதே
உத்தரை”

“இருளே
அனைத்திற்கும்
மூலம்
இருளே கடவுள்
எப்போது
உன்னுடைய
வாயிலிருந்து
என்னுடைய
வாழ்க்கை
இருளாகி
விட்டது என்று
சொன்னாயோ
எப்போது
உன்னை
அறியாமல்
இருள் உன்னுடைய
வாழ்க்கையை
சூழ்ந்துவிட்டது
என்று
சொன்னாயோ
இருளின் வடிவமாக
இருக்கும் கடவுள்
உனக்கு துணை
செய்ய வந்து
விட்டார்”

“ஆமாம் நான் உன்
குழந்தைக்கு
உயிர் கொடுக்க
வந்திருக்கிறேன்
உன்னுடைய
குழந்தைக்கு
உயிர் கொடுக்கப்
போகிறேன்”

(கிருஷ்ணன்
இறந்து கிடக்கும்
குழந்தைக்கு
முத்தமிடுகிறார்)

கிருஷ்ணன்:
“எழுந்திரு பரிட்சித்
உறங்கியது
போதும் எழுந்திரு”

(என்று கிருஷ்ணன்
சொன்னவுடன்
இறந்த
குழந்தை
கண்களை
திறந்தது இறந்த
குழந்தை உயிர்
பெற்று  விட்டது)

(கிருஷ்ணன் செய்த
அற்புதத்தைக்
கண்டு
திரௌபதி
சுபத்திரை
உத்தரை
ஆகியோர்
என்ன செய்வது
என்று தெரியாமல்
திகைத்து விட்டனர்
கிருஷ்ணன் இறந்த
குழந்தையை
எழுப்பிய
அதிசயத்தைக்
கண்டு
மெய் மறந்து
இருந்தனர்
கிருஷ்ணன் இறந்த
குழந்தையை
எழுப்பிய செயலால்
ஏற்பட்ட
சந்தோஷத்தின்
மிகுதியால்
நன்றி கூட
அவர்களால்
சொல்ல
முடியவில்லை
அவர்களுடைய
நாவிலிருந்து
வார்த்தை
வெளிப்படவில்லை
கண்களில் இருந்து
ஆனந்தக் கண்ணீர்
மட்டுமே
வெளிப்பட்டது

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-48


              ஜபம்-பதிவு-540
        (அறிய வேண்டியவை-48)

“நீ செய்த
கர்மாக்களின்
பலனை
எப்படி
அனுபவிப்பாய்
என்று சொன்னேன்”

“செய்த வினை
செய்தவனை சும்மா
விடாது என்பது
உனக்குத் தெரியாதா?”

“உலகத்தின் எந்த
மூலைக்குச்
சென்றாலும்
நீ செய்த
கர்மாவின்
விளைவிலிருந்து
தப்பிக்க முடியாது
என்பது
உனக்குத்
தெரியாதா?”

“மனித குலத்திற்கு
எதிராக நீ செய்த
மிகப்பெரிய பாவம்
கர்மாவாக
உருவெடுத்து  
உன்னை
அலைக்கழிக்கக்
காத்துக்
கொண்டிருக்கிறது”

“உன்னை நிம்மதி
இல்லாமல் அலைய
வைக்கக் காத்துக்
கொண்டிருக்கிறது”

“செய்த வினையின்
விளைவை
அனுபவிக்கக்
காத்துக் கொண்டிரு”

அஸ்வத்தாமன் :
“என்னை
காப்பாற்றுவதற்கு
யாரும் இல்லையா
முனிவரே யாராலும்
என்னைக்
காப்பாற்ற
முடியாதா
நீங்களாவது
என்னைக்
காப்பாற்றுங்கள்
முனிவரே”

வியாசர்:
கிருஷ்ணன்
சொல்லியவை
அனைத்தும் சத்தியம்
அவர்
சொல்லியவைகள்
அனைத்தையும் நீ
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்
செய்த வினையின்
விளைவை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் “

கிருஷ்ணன் :
“பெரியண்ணா
அந்த ரத்தினத்தை
எடுத்துக்
கொள்ளுங்கள்
நமக்கு ஒரு
முக்கியமான
வேலை
காத்துக்
கொண்டிருக்கிறது ;
அதை செயல்படுத்த
நேரம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது ;
கால தாமதம்
செய்ய வேண்டாம் ;
உடனே செல்லலாம்
வாருங்கள் “

தர்மர் :
“எங்கே?”

கிருஷ்ணன் :
“உத்தரையிடம்”

(உத்தரை
கூடாரத்தில்
அமர்ந்து கொண்டு
இருக்கிறாள்
அப்பொழுது ஒரு
புல் வந்து
விழுகிறது
உத்தரை துடிக்க
ஆரம்பிக்கிறாள்
ஐயோ வலி
உயிர் போகிறதே
சுபத்திரை
திரௌபதி
ஆகியோர்
ஓடி வருகிறார்கள்
வைத்தியர் ஓடி
வருகிறார்)
 
வைத்தியர் :
“வயிற்றிலேயே
குழந்தை இறந்து
விட்டது - இறந்த
குழந்தை தாயின்
வயிற்றிலிருந்து
பிரிந்து வர
வேண்டும்
அவ்வாறு
வரவில்லையெனில்
இறந்த குழந்தையை
தாயின்
வயிற்றிலிருந்து
பிரித்து எடுக்க
வேண்டும்
குழந்தையை
எடுக்காவிட்டால்
தாயின் உயிருக்கு
ஆபத்து “

திரௌபதி :
“உடனே செய்யுங்கள்”

(வைத்தியர்  
உத்தரையிடமிருந்து
இறந்த
குழந்தையை
பிரித்து எடுத்து
உத்தரையின்
அருகில்
வைக்கிறார்)

(திரௌபதி
சுபத்திரை
உத்திரை மற்றும்
அங்குள்ள
அனைவரும்
துக்கத்தின்
மிகுதியால்
அழுது
கொண்டிருந்தனர்
அந்த நேரம்
பார்த்து கிருஷ்ணன்
உள்ளே வருகிறார்)

உத்தரை :
“பார்த்தீர்களா மாமா
அவர்களே எனக்கு
இருந்த ஒரே
நம்பிக்கையும்
என்னை விட்டுப்
போய் விட்டது
நான் யாருக்காக
வாழ வேண்டும்
என்று நினைத்தேனோ
அந்த குழந்தையும்
இறந்து விட்டது
இனி இந்த
உலகத்தில் நான்
யாருக்காக
வாழ வேண்டும்
நான் வாழ்வதால்
யாருக்கும்
எந்த பயனும்
இல்லை - என்
வாழ்க்கை இருளால்
சூழப்பட்டு விட்டது
என்ன செய்வேன்
சொல்லுங்கள்
மாமா அவர்களே”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////