ஜபம்-பதிவு-532
(அறிய
வேண்டியவை-40)
பூதம்
:
“உள்ளே
செல்வதை
நான்
தடுத்தால்”
அஸ்வத்தாமன்
:
“உன்னை
அழித்து
விட்டு
நான்
உள்ளே
செல்வேன்”
பூதம்
:
“முடிந்தால்
என்னை
அழித்து
விட்டு
பாண்டவர்களின்
பாசறைக்குள்
செல்”
(அஸ்வத்தாமன்
சிறிதும்
பயப்படாமல்
அந்த
பூதத்தின் மீது
அம்பு
மழை
பொழிந்தான்
;
அத்தனை
அம்புகளையும்
அந்த
பூதம்
தன்னுடைய
வாயால்
விழுங்கி
விட்டது ;
வாளை
ஏவினான்
பூதத்தின்
மீது
பட்ட
வாள்
பஞ்சுபோல்
ஆயிற்று ;
கதாயுதத்தை
எறிந்தான்
- அது
துகளானது
எல்லா
ஆயுதங்களையும்
இழந்து
அஸ்வத்தாமன்
நின்றான்)
அஸ்வத்தாமன்:
(மனதிற்குள்)
“எனக்கு
இந்த நிலை
ஏன்
ஏற்பட்டது
கிருபர்
கிருதவர்மன்
ஆகியோருடைய
பேச்சை
நான்
கேட்டிருக்க
வேண்டுமோ?
கேட்காததால்
இந்த
துயர்
எனக்கு
ஏற்பட்டதா
இந்த
பூதம்
யார் என்று
தெரியவில்லையே
!
வலிமை
மிக்கதாக
இருக்கிறதே
இந்த
பூதத்தை
என்னால்
வீழ்த்த
முடியவில்லையே
!”
“என்னுடைய
ஆயுதங்கள்
எதுவும்
அந்த
பூதத்தை
ஒன்றும்
செய்யவில்லையே
இனி
நான்
என்ன
செய்வது
நான்
செய்ய
வேண்டியது
ஒன்றே
ஒன்றைத்
தான்
பரமேஸ்வரனின்
உதவியை
நாடுவது தான்
இந்த
பிரச்சினையைத்
தீர்க்க
ஒரே வழி “
“பரமேஸ்வரனை
நினைத்து
தவத்தில்
ஈடுபடுவது
தான்
இந்தப்
பிரச்சினையை
தீர்ப்பதற்கு
ஒரே வழி “
(என்று
சிந்தனை
செய்து
கொண்டே
தேரில்
இறந்து
இறங்கினான்
அஸ்வத்தாமன்
சிவபெருமானை
நினைத்து
வழிபடத்
துவங்கினான் ;
அஸ்வத்தாமன்
சிவபெருமானை
நினைத்து
தியானம்
செய்யத்
தொடங்கிய
சிறிது
நேரத்தில்
அவன் முன்
ஒரு
யோக குண்டம்
தோன்றியது
அதில்
இருந்து
விந்தையான
உருவங்கள்
வெளிப்பட்டன
அக்கினியில்
பூத
கணங்கள்
தோன்றி
அவன்
முன் ஆடின
அவனுக்கு
அச்சத்தை
உண்டாக்கும்
விதத்தில்
ஆடின
அச்சம்
சிறிதும்
இல்லாது
இருந்தான்
அஸ்வத்தாமன்
தொடர்ந்து
சிவபெருமானையே
தியானம்
செய்து
கொண்டிருந்தான்)
அஸ்வத்தாமன்
:
“பரமேஸ்வரா
நான்
என்னையே
ஆகுதியாகத்
தருகிறேன் “
(என்று
சொல்லிக்
கொண்டே
அந்த
யாக
குண்டத்தில்
குதித்தான்
தன்னுடைய
உயிரையே
பலியாகத்
தருவதற்குத்
துணிந்த
அஸ்வத்தாமனின்
செயலைக்
கண்டு
மனம்
குளிர்ந்த
சிவபெருமான்
அஸ்வத்தாமன்
முன்
தோன்றினார்)
சிவபெருமான்
:
“உத்தம
குணம்
கொண்ட
கிருஷ்ணனால்
உண்மை
நேர்மை
வாய்மை
தூய்மை
ஆகியவற்றால்
நான்
ஆராதிக்கப்பட்டேன் ;
அதனால்
நான்
பாஞ்சாலர்களுக்கு
காவலாக
இருந்தேன் ;
பாஞ்சாலர்களுக்கு
முடிவுக்
காலம்
நெருங்கி
விட்டது ;”
“வாழ்நாள்
முடிவுக்கு
வரும்
நேரம்
நெருங்கி
விட்டது ;
பாஞ்சாலர்களுக்கு
இனி
வாழ்வு இல்லை ;
பாஞ்சாலர்கள்
இனி
இந்த
உலகத்தில்
வாழ
முடியாது ;
இந்த
வாளை
வாங்கிக்
கொள் ;”
(என்று
வாளை
கொடுத்து
விட்டு
சிவபெருமான்
மறைந்து
விட்டார்)
(வாளைப்
பெற்றுக்
கொண்ட
அஸ்வத்தாமன்
நேராக
திருஷ்டத்யும்னன்
இருக்கும்
இடம்
சென்றான்
திருஷ்டத்யும்னன்
படுக்கையில்
அயர்ந்து
படுத்துக்
கொண்டிருந்தான்)
(படுக்கையில்
படுத்துக்
கொண்டிருந்த
அவனுடைய
தலை
முடியைப்
பிடித்து
இழுத்து
வந்து
தரையில்
போட்டு
எட்டி
உதைத்தான்
தன்னுடைய
காலடியில்
அவனைப்
போட்டு
கையால்
அவனைக்
குத்தினான்)
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
24-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment