June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-37


              ஜபம்-பதிவு-529
       (அறிய வேண்டியவை-37)

“என்னுடைய உடலில்
வலிமை குறைந்து
கொண்டு வருகிறது  ;
உனக்காக நான்
காத்துக் கொண்டிருப்பேன் ;
நீ கொண்டு வரும்
செய்திக்காக நான்
காத்துக் கொண்டிருப்பேன் ;
நீ வரும் வரை
என்னுடைய உயிர்
என்னை விட்டு போகாது ;”

“செல் கடமையைச்
செய்யச் செல்”

(அஸ்வத்தாமன் முன்னே
செல்ல கிருபர்
கிருதவர்மன் ஆகியோர்
அஸ்வத்தாமனை
தொடர்ந்து சென்றனர் ;
அஸ்வத்தாமன்
கிருபர் கிருதவர்மன்
ஆகியோர்
தென்திசை நோக்கி
பயணம் செய்தனர்
பாண்டவர்களின்
பாசறைக்கு அருகில்
வந்தார்கள்
பாண்டவர்களின்
பாசறைக்கு செல்லாமல்
பாண்டவர்களின்
பாசறைக்கு அருகில்
இருக்கும்  யாராலும்
நுழைய முடியாத ஒரு
காட்டிற்குள் நுழைந்தனர் ;
அங்கே மூவரும்
ஆலமரத்தின் கீழ்
ஓய்வு எடுத்துக்
கொண்டனர் - மூவரும்
அந்த ஆலமரத்தின்
கீழ் படுத்தனர் )

(பழிவாங்கும் எண்ணம்
அஸ்வத்தாமனின்
மனதில் ஆழமாக
பதிந்து இருந்ததால்
அவனால் உறங்க
முடியவில்லை ;
விழித்துக் கொண்டு
இருந்தான் சுற்றி
நடப்பதை
பார்த்தபடியே இருந்தான் ;)

(அந்த ஆலமரத்தின்
பல கிளைகளில்
காக்கைகள் தங்கள்
கூடுகளில் ஆழ்ந்து
உறங்கிக் கொண்டு
இருந்தன - திடீரென்று
அங்கு வந்த ஒரு
ஆந்தை அந்த
காக்கைகளின் மேல்
தாக்கியது - அந்த
தாக்குதலை சமாளிக்க
முடியாமல் காக்கைகள்
அனைத்தும் இறந்து
ஆலமரத்தில் இருந்து
கீழே விழுந்தது ;
இக்காட்சியைக்
கண்டான்
அஸ்வத்தாமன் ;
தன்னுடைய மனதில்
நினைத்துக் கொண்டான்)

அஸ்வத்தாமன் :
“நான் காணும் இந்தக்
காட்சியின் மூலம்
எனக்கு ஒரு
விஷயம் விளங்குகிறது ;
நான் என்ன செய்ய
வேண்டும் என்பதை
இந்தக் காட்சி
எனக்கு விளக்குகிறது ;
உறங்கிக் கொண்டிருந்த
காக்கைகளை இரவில்
இருளில் ஆந்தை
கொன்று எனக்கு
பாண்டவர்களைக்
கொல்வதற்கு சரியான
வழியைக் காட்டி உள்ளது ;”

“பாண்டவர்களை
கொல்வதாக
துரியோதனனுக்கு
நான் வாக்கு
கொடுத்திருக்கிறேன் ;
பாண்டவர்களை நேருக்கு
நேர் நின்று கொல்வது
அவ்வளவு எளிதான
காரியம் இல்லை ;
வஞ்சனையால் தான்
பாண்டவர்களை
வீழ்த்த வேண்டும் ;
ஆந்தை எப்படி
இரவில் இருளில்
உறங்கிக் கொண்டிருந்த
காக்கைகளைத் தாக்கி
கொன்றதோ அவ்வாறே
பாண்டவர்கள்
அனைவரையும்
கொல்வேன் ;
பாண்டவர்கள்
இரவில் உறங்கிக்
கொண்டிருக்கும் போது
இருளில் வைத்து
அவர்கள்
அனைவரையும்
கொல்வேன் ;”

(என்று முடிவு
எடுத்த அஸ்வத்தாமன்
எழுந்து நின்றான் ;
கிருபரையும்
கிருதவர்மனையும்
எழுப்பி பேசத்
தொடங்கினான்)

அஸ்வத்தாமன் :
“நான் ஒரு திட்டத்தை
வைத்திருக்கிறேன்
கேளுங்கள்  ;
பாண்டவர்களை
இரவில் இருளில்
அவர்கள் உறங்கிக்
கொண்டிருக்கும் போது
அவர்களைத் தாக்கிக்
கொல்வோம் - இதற்கு
நீங்கள் சம்மதிக்கிறீர்களா?”

கிருபர் :
“இது தவறான
முடிவு அஸ்வத்தாமா
வீரத்தில் சிறந்தவன் நீ !
உயர்ந்த கல்வியை
உயர்ந்தவர்களிடம்
இருந்து கற்றவன் நீ !
உயர்ந்த வித்தையைப்
பயின்றவன் நீ !
யாருக்கும் கிடைக்காத
உயர்ந்த
அஸ்திரங்களைப்
பெற்றவன் நீ!
அத்தகைய வீரம்
செறிந்த நீ
நேர்வழியில்
செல்லாமல்
அதர்ம வழியில்
செல்லக்கூடாது ;  
வீரனுக்குத்
தேவையானது
நேர்வழி தானே தவிர
குறுக்குவழி கிடையாது ;
குறுக்கு வழியில்
செல்லும் வீரனின்
வீரத்தை இந்த
உலகம் மதிக்காது ;
உலகமே போற்றக்கூடிய
வீரனாக இருந்தாலும்
குறுக்கு வழியில்
சென்று வெற்றியைத்
தேட முயற்சித்தால்
அவனுடைய வீரத்தை
இந்த உலகம்
ஏற்றுக் கொள்ளாது ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment