ஜபம்-பதிவு-527
(அறிய
வேண்டியவை-35)
(துரியோதனன்
படுகாயமுற்று
இரத்த
வெள்ளத்தில்
தரையில்
படுத்துக்
கொண்டிருக்கிறான்
;
தொடைகள்
முறிக்கப்பட்டு
புழுதியினால்
மூடப்பட்ட
நிலையில்
தரையில்
படுத்துக்
கொண்டிருந்த
துரியோதனனுடைய
அருகில்
சென்ற
சஞ்சயனிடம்
துரியோதனன்
பேசத்
தொடங்கினான்;)
துரியோதனன்
:
“சஞ்சயனே
பதினோரு
அக்ரோணி
சேனைக்குத்
தலைவனாக
இருந்த
துரியோதனனான
என்னை
நேருக்கு நேர்
நின்று
போர் புரிந்து
வெற்றி
பெற முடியாது
என்பதைத்
தெரிந்து
கொண்ட
கோழைகளான
பாண்டவர்கள்
;
கபடவேடதாரியான
கிருஷ்ணனின்
கால்
பிடித்து
வாழும்
பாண்டவர்கள் ;
தர்மத்தின்
வழி
செல்கிறேன்
;
தர்மத்தை
நிலை
நாட்டப்
போகிறேன் ;
என்று
சொல்லிக்
கொண்டு
நல்லவர்கள்
போல்
நடித்துக் கொண்டு
அதர்மங்களை
செய்து
கொண்டிருக்கும்
பாண்டவர்கள்
;
பீமனை
வைத்து
நயவஞ்சக
வேலை
செய்து
போர்
விதிமுறைகளை
மீறி
என்னைத்
தாக்கியதால்
நான்
அடிபட்டு
வீழ்ந்தேன்
இதற்கு
காரணம்
சூழ்ச்சிகளைச்
செய்யும்
கிருஷ்ணன்
தான்;”.
“கபட
வேடதாரி
கிருஷ்ணனின்
தூண்டுதலின்
பேரில்
பீமன் போரின்
விதிமுறைகளை
மீறி
என்னை
தாக்கி
படுகாயமுறச்
செய்து
இருக்கிறான் ;
இச்செயலால்
காயமுற்ற
நான்
தரையில்
இரத்த
வெள்ளத்தில்
புழுதிக்கு
நடுவே
நகர
முடியாமல்
இறப்பை
எதிர்
நோக்கிக்
காத்துக்
கொண்டிருக்கிறேன்
;
என்னால்
நகர
முடியாமல்
கஷ்டப்
பட்டுக்
கொண்டிருக்கிறேன்
;
இரத்த
வெள்ளத்தில்
துடித்துக்
கொண்டிருக்கிறேன்
;
நயவஞ்சகம்
என்னை
இந்த
மண்ணில்
கிடத்தி
இருக்கிறது ;
சூழ்ச்சி
என்னை
நகர
முடியால்
செய்து
இருக்கிறது ;
சதித்திட்டம்
என்னை
தோல்விக்கு
கொண்டு
சென்று
இருக்கிறது ;’
“எனக்கு
ஏற்பட்டுள்ள
இந்த
நிலைமையை
என்னுடைய
தாய்
தந்தையரிடம்
சென்று
சொல்
நான் என்னுடைய
வாழ்க்கையில்
அனைத்துவிதமான
சுகங்களையும்
அனுபவித்து
விட்டேன் ;
அரச
தர்மப்படி
போர்
செய்து அதனால்
ஏற்பட்ட
காயத்தால்
நான்
உயிர் துறக்க
இருக்கிறேன்
;
நான்
புறமுதுகு காட்டி
ஓடவில்லை
;
போர்க்களத்தில்
உயிர்
துறக்க
இருக்கிறேன் ;
நயவஞ்சகம்
என்னை
சாய்த்து
விட்டது ;
இந்த
உலகத்தை விட்டு
செல்லக்கூடிய
நேரம்
நெருங்கிக்
கொண்டிருக்கிறது
;
எனக்கு
ஏற்பட்டிருக்கும்
இந்த
முடிவை
அஸ்வத்தாமன்
கிருபர்
கிருதவர்மன்
ஆகியோரிடம்
சென்று
சொல் ;”
(என்றான்
துரியோதனன்
இச்செய்தியைக்
கேள்விபட்ட
அஸ்வத்தாமன்
கிருபர்
கிருதவர்மன்
ஆகியோர்
துரியோதனன்
இருக்கும்
இடம்
வந்தனர்
துரியோதனன்
இருக்கும்
நிலையைப்
பார்த்து
அஸ்வத்தாமன்
கிருபர்
கிருதவர்மன்
ஆகியோர்
கண்
கலங்கி
நிற்கின்றனர்)
அஸ்வத்தாமன்
:
“இளவரசே
வீரத்திற்கு
இலக்கணமாக
இருந்தீர்கள் ;
யாராலும்
உங்களை
வீழ்த்த
முடியாது
என்று
சொல்லத்தக்க
வகையில்
வீரனாகவே
வாழ்ந்தீர்கள் ;”
“யாருக்கும்
தலை
வணங்காத
நீங்கள்
தரையில்
புழுதியில்
படுத்துக்
கொண்டிருக்கிறீர்கள்
;
உலகத்தையே
ஆளக்கூடிய
வல்லமை
படைத்த
நீங்கள்
தரையில் நகர
முடியாமல்
இருக்கிறீர்கள் ;”
“:உம்முடைய
அரியணை
எங்கே ?
உம்முடைய
வெண்கொற்றக்குடை
எங்கே?
உம்முடைய
மாபெரும்
படை
எங்கே ?
உம்முடைய
வீரமும்
புகழும்
எங்கே ?
என்னுடைய
கண்களையே
என்னால்
நம்பமுடியவில்லை
;
வீரம்
வீழ்ந்து
கிடக்கிறது
;
வீரம்
நகர
முடியாமல்
இருப்பதை
என்னால்
நம்பவே
முடியவில்லை
;
இளவரசே
உங்களுக்கு
நேருக்கு
நேராக
நின்று
போரிட்டு
வெற்றி
பெற
முடியாத
போது
உங்களை
எப்படி
வீழ்த்தினார்கள்
;”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
24-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment