June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-36


              ஜபம்-பதிவு-528
       (அறிய வேண்டியவை-36)

துரியோதனன் :
“வஞ்சனை என்னை
வீழ்த்தி விட்டது ;
சூழ்ச்சி என்னை
சாய்த்து விட்டது ;
போரின் விதிமுறைகளை
மீறி பீமன் என்னை
கிருஷ்ணனின்
தூண்டுதலின் பேரில்
என்னைத் தாக்கினான் ;
அதனால் நான்
இந்த நிலைக்கு
ஆளானேன் ;
நான் வாழ்க்கையில்
அனுபவிக்க வேண்டிய
அனைத்து சுகங்களையும்
அனுபவித்து விட்டேன் ;
ஆகவே நீங்கள்
கவலைப்பட வேண்டாம் ;
இறப்பு என்னை
நெருங்கிக்
கொண்டிருக்கிறது  ;
காலன் என்னை
அழைக்க வந்து
கொண்டிருக்கிறான் ;
இந்த உலகத்தை
விட்டு செல்வதற்கான
நேரம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது ; “

அஸ்வத்தாமன் :
“பாண்டவர்கள் தாங்கள்
நல்லவர்கள் என்பதை
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவருடைய
மனதிலும்
ஆழமாக பதித்து
வைத்து இருக்கிறார்கள் ;
இதனால் உலகம்
பாண்டவர்களை
நல்லவர்கள் என்று நம்பிக்
கொண்டு இருக்கிறது ;”

“இதனால் பாண்டவர்கள்
செய்யும் தவறுகள்
இந்த உலகத்தில்
உள்ள மக்களுக்கு
தெரிவதே இல்லை  ;
அதர்மச் செயல்களை
பாண்டவர்கள் புரிந்தாலும்
அதை கவனத்தில்
கொள்வதே இல்லை ;
சூழ்ச்சிகள் செய்தாலும்
அதை பெரிதாக
எடுத்துக் கொள்வதில்லை ;
நயவஞ்சகம் புரிந்தாலும்
இந்த உலகம்
நம்புவதே இல்லை  ;”

“ஆனால் கௌரவர்களை
இந்த உலகம்
கெட்டவர்கள் என்றே
பார்க்கிறது ;
கெட்டவர்கள் என்பதை
இந்த உலகம்
தன்னுடைய மனதில்
ஆழமாக பதித்து
வைத்திருக்கிறது ;
அதனால் கௌரவர்கள்
நல்லது செய்தாலும்
அதை இந்த உலகம்
கவனத்தில் எடுத்துக்
கொள்வதில்லை ;”

“கௌரவர்கள் எந்த
செயலைச் செய்தாலும்
அதை தவறாகவே
பார்க்கிறது - கௌரவர்கள்
பக்கம் உள்ள
நியாயத்தை சிந்தித்துக்
கூட பார்ப்பதில்லை ;
தர்மத்தின் வழி நின்று
தர்ம காரியங்களைச்
செய்தாலும்
அதர்மமாகவே பார்க்கிறது ;”

“நல்லவர்கள் என்ற
போர்வையைப்
போர்த்திக் கொண்டு
பாண்டவர்கள் செய்யும்
அட்டூழியங்கள்
எல்லை மீறியதால்
தான் இளவரசே
தங்களுக்கு இந்த
முடிவு ஏற்பட்டிருக்கிறது ;
தங்களுக்கு ஏற்பட்ட
இந்த செயலுக்கு
நான் பழி வாங்குவேன் ;”

“சூழ்ச்சியால் என்னுடைய
தந்தை கொல்லப்பட்ட
போதும் நான்
இவ்வளவு வேதனை
அடையவில்லை  ;
உங்களைக் கண்டு
அளவிட முடியாத
வேதனை அடைகிறேன் ;
உங்களுக்கு ஏற்பட்ட
இந்த நிலைக்கு பழி
வாங்குவேன் இந்த
செயலுக்கு
காரணமானவர்கள்
ஒருவரையும் நான்
சும்மா விடப்போவதில்லை  ;
பாண்டவர்களையும்
பாஞ்சாலர்களையும்
கொன்று குவிப்பேன் ;
இது சத்தியம்
எனக்கு அனுமதி
அளியுங்கள் இளவரசே!”

துரியோதனன் :
“கிருபாச்சாரியாரே ஒரு
பாத்திரத்தில் நீர்
கொண்டு வாருங்கள்”

(கிருபாச்சாரியார் ஒரு
பாத்திரத்தில் நீர்
கொண்டு வருகிறார்)

“கிருபாச்சாரியாரே
நம்முடைய படைகளுக்கு
அஸ்வத்தாமனை
சேனாதிபதியாக்குகிறேன் ;
அஸ்வத்தாமனை
சேனாதிபதியாக்குவதற்கு
செய்ய
வேண்டியவைகளை
செய்யுமாறு
கேட்டுக் கொள்கிறேன் ;”

(கிருபாச்சாரியார்
அஸ்வத்தாமன்
தலையில்
நீர் ஊற்றுகிறார்
மங்களஸ்நானம்
செய்கிறார் ;
துரியோதனன் அருகில்
சென்றான் அஸ்வத்தாமன் ;
அஸ்வத்தாமனுக்கு
துரியோதனன்
இரத்தத்தால்
திலகமிட்டான் ;)

அஸ்வத்தாமன் :
“எனக்கு என்ன
கட்டளை இளவரசே ‘

துரியோதனன் :
“பாண்டவர்கள் மடிய
வேண்டும் பாண்டவர்கள்
இறப்பு சாதாரணமாக
நிகழக் கூடாது யாரும்
கனவிலும் நினைத்து
கூட பார்க்காத வகையில்
பயங்கரமானதாக
இருக்க வேண்டும்  ;
பாண்டவர்களுடைய
அறுபட்ட தலைகள்
எனக்கு வேண்டும் ;
பாண்டவர்களுடைய
தலையை கொய்து
என்னிடம் கொண்டு வா
பாண்டவர்கள்
இறந்தார்கள் என்ற
செய்தி கேட்டு
விட்டுத் தான் நான்
உயிர் துறப்பேன்  ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment