August 13, 2020

திருக்குறள்-தேரான் -பதிவு-4

 திருக்குறள்-தேரான்

-பதிவு-4

 

“ஆனால்

ஒருவர்

நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

அவருக்கு நாம்

ஒரு வேலையைக்

கொடுத்து

அவர் செய்யும்

நிலையைப்

பொறுத்து

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதைத்

தெரிந்து

கொள்ளலாம்”

 

“ஒருவர் நமக்கு

மரியாதை

கொடுப்பது போல்

எவ்வளவு காலம்

வேண்டுமானாலும்

நடிக்கலாம்

ஆனால்

ஒருவருக்கு

நாம் ஒரு

வேலையைக்

கொடுத்து

செய்யச்

சொல்லும் போது

அவர் நம்மீது

மரியாதை

வைத்த

காரணத்தினால்

தான் நமக்கு

வேலை

செய்கிறார்

என்று

தொடர்ந்து

வேலை

செய்வதாக

நடிக்க முடியாது”

 

“அவர் நம்மீது

மரியாதை

வைத்திருப்பதாக

தொடர்ந்து

நடிக்க முடியாது

அவர் நடித்தால்

அவர் நடிக்கிறார்

என்பது

தெரிந்து விடும்”

 

“நம்மீது

அவருக்கு

உண்மையான

மரியாதை

இருந்தால்

மட்டுமே

நாம் சொல்லும்

வேலைகளை

சொன்ன

நேரத்திற்கு

சொன்ன

இடத்திற்கு

வந்து நம்முடன்

இணைந்து

நாம் சொன்ன

வேலையை

முடிக்க முடியும்”

 

“ஒருவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

அவருக்கு நாம்

ஒரு வேலையைக்

கொடுத்து

அதை நமக்காக

செய்யச்

சொல்லும் போது

அவர் அதை

எப்படி

கையாள்கிறார்

என்பதைப்

பொறுத்து

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பது

தெரிந்து விடும் “

 

“ஒருவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

ஆராய்ந்து

பார்த்த பிறகே

அவருடன் நட்பு

கொள்ள வேண்டும்

அவ்வாறு

ஆராயாமல்

நம்மீது மரியாதை

இல்லாதவர்களை

நாம் நட்பு

கொண்டால்

நாம் மட்டுமல்ல

நம்முடைய

பரம்பரையே

அழிந்து விடும்

என்பதைத்

தான்

திருவள்ளுவர்

 

“தேரான்

பிறனைத்

தெளிந்தான்

வழிமுறை தீரா

இடும்பைத் தரும்”

 

என்ற திருக்குறளின்

மூலம்

விளக்குகிறார்

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////

திருக்குறள்-தேரான் -பதிவு-3

திருக்குறள்-தேரான்

-பதிவு-3

 

“நாம் குறித்துச்

சொன்ன

நேரத்திற்கு அவர்

வரவில்லை

என்றால்

அந்த வேலை

எப்படி முடியும்

நேரம் கடந்து

சென்று விட்டது

குறிப்பிட்ட நேரம்

முடிந்து விட்டது

இனி அந்த

வேலையை

முடிக்க முடியாது

நாம்

திட்டமிட்டபடி

அந்த வேலையை

முடிக்க முடியாது

என்று நமக்கு

தெரிந்து விடுகிறது”

 

“நமக்கு வாக்கு

கொடுத்த படி

அந்த நபர்

பத்து மணிக்கு

வந்திருந்தால்

அந்த வேலையை

முடித்து

இருக்கலாம்

அவர் சரியான

நேரத்திற்கு வராத

காரணத்தினால்

நம்மால் அந்த

வேலையை

முடிக்க

முடியவில்லை”

 

“நாம்

திட்டமிடட்டபடி

அந்த வேலை

முடியவில்லை

அந்த

வேலையை

நம்மால்

முடிக்க

முடியவில்லை”

 

“நாம் சொன்ன

நேரத்திற்கு - அவர்

வரவில்லை

இதனால்

அவர் நம்மீது

மரியாதை

வைக்கவில்லை

என்பதைத்

தெரிந்து

கொள்ளலாம் “

 

“உங்களை பார்க்க

கிளம்பும் போது

வேறு வேலைகள்

வந்து விட்டது

அதை முடித்து

விட்டு வருவதற்கு

நேரம் ஆகிவிட்டது

அதனால் தான்

கால தாமதம்

நான் வருகிறேன்

என்று காலதாமதாக

வந்தால் அவர்

நம்முடைய

வேலையை

பெரியதாக

மதிக்கவில்லை

நம்மீது மரியாதை

வைக்கவில்லை

என்று அர்த்தம்”

 

“அவர்

உண்மையாகவே

நம்மீது

மரியாதை வைத்து

இருந்தால்

அனைத்து

வேலைகளையும்

ஒதுக்கி வைத்து

விட்டு நம்முடைய

வேலை தான்

முக்கியம்

மற்ற வேலைகள்

முக்கியம் இல்லை

என்று வந்திருந்தால்

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறார்

என்று அர்த்தம்”

 

“அவர் மற்ற

வேலைகளை

முடித்து விட்டு

வந்து நம்முடைய

வேலையை

கவனிக்க வந்தால்

நம்முடைய

வேலைக்கு

முக்கியத்துவம்

கொடுக்காமல்

மற்ற

வேலைகளுக்கு

முக்கியத்துவம்

கொடுத்தால்

அவர் நம்மீது

மரியாதை

வைக்கவில்லை

என்று அர்த்தம்”

 

“ஒருவர் நம்மைப்

பார்க்கும் போது

கொடுக்கும்

மரியாதை

உண்மையாகவும்

இருக்கலாம்

அல்லது

பொய்யாககக் கூட

இருக்கலாம்

அதாவது

நடிப்பாகக் கூட

இருக்கலாம்

அதனால் ஒருவர்

நம்மைப் பார்த்து

மரியாதை

கொடுப்பதைப்

பார்த்து - அவர்

உண்மையாகவே

நம்மீது

மரியாதை

கொண்டு

இருக்கிறாரா

இல்லையா

என்பதை

கண்டுபிடிக்க

முடியாது”

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////

திருக்குறள்-தேரான் -பதிவு-2

 திருக்குறள்-தேரான்

-பதிவு-2

 

“நான் கண்டிப்பாக

வந்து விடுகிறேன்

நான் இருந்து

அந்த வேலையை

முடித்து தருகிறேன்

நீங்கள் நேரம்

சொல்லுங்கள்

எந்த இடத்திற்கு

வர வேண்டும்

என்று

சொல்லுங்கள்

நான் வந்து

விடுகிறேன்

என்று சொல்கிறார்”

 

“நாமும்

நாளை காலை

10 மணிக்கு

ஒரு இடத்தைக்

குறிப்பிட்டு

அந்த இடத்திற்கு

வாருங்கள்

அந்த வேலையை

முடிப்பதற்கு

உங்கள் உதவி

தேவைப்படுகிறது

வாருங்கள் என்று

சொல்கிறோம்”

 

“அவரும்

ஒத்துக் கொண்டு

நாளை காலை

10 மணி முதல்

10,30 மணிக்குள்

வந்து விடுகிறேன்

என்று வாக்கு

கொடுக்கிறார்

ஏதேனும் வேலை

இருந்தால்

வேண்டாம்

வேலை எதுவும்

இல்லை என்றால்

வாருங்கள் என்று

சொல்கிறோம்”

 

“அவரும் வேறு

வேலை

எதுவும் இல்லை

நான் வருகிறேன்

உங்களுக்காக

கண்டிப்பாக

வருகிறேன்

என்று சொல்கிறார்”

 

“நாமும்

நாம் சொன்ன

நேரமான

10 மணிக்கு

சொன்ன இடத்திற்கு

வந்து நாம்

சொன்ன

வேலையை

முடித்து தருவார்

என்று நம்பி

அவருக்கு

மாற்றாக

நாம் எந்த

ஒரு மாற்று

ஏற்பாட்டையும்

செய்யாமல்

அவர் செய்வார்

என்று நம்பி

அவருக்காக

காத்துக்

கொண்டிருக்கிறோம்”

 

“அவர் வருவார்

என்று

அவருக்காக

நாம் 10 மணிக்கு

முன்பாகவே

அந்த இடத்திற்கு

சென்று காத்துக்

கொண்டிருக்கிறோம்

அவர் பத்து

மணியாகியும்

வரவில்லை

பத்தரை

மணியாகிவும்

வரவில்லை”

 

“நாம் செய்த

போன் எதையும்

அவர்

எடுக்கவில்லை

இதனால் நம்முடைய

மனதில் பல்வேறு

கேள்விகள்

எழும்புகிறது”

 

“அவர்

வருவாரா

வர மாட்டாரா

நாம் திட்டமிட்டபடி

அந்த வேலை

இன்று

நடக்குமா

அல்லது

நடக்காதா

அந்த வேலையை

இன்று நம்மால்

முடிக்க முடியுமா

அல்லது

முடிக்க முடியாதா

என்று பல்வேறு

கேள்விகள்

மனதில்

எழுந்த வண்ணம்

இருக்கிறது”

 

“அலை பாயும்

மனதுடனும்

கவலை தோய்ந்த

நிலையுடனும்

காத்துக்

கொண்டிருக்கும்

போது

நாம் காத்துக்

கொண்டிருக்கும்

நபர் பத்தரை

மணிக்கு மேல்

போன் செய்து

நான் இப்போது

தான் கிளம்பப்

போகிறேன்

கொஞ்சம் நேரம்

ஆகிவிட்டது

நடுவில் இரண்டு

மூன்று வேலைகள்

வந்து விட்டது

அந்த வேலைகளை

முடித்து விட்டு

வருவதற்கு

நேரம்

ஆகிவிட்டது

நான் வந்து

கொண்டிருக்கிறேன்

என்கிறார்”

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////

திருக்குறள்-தேரான் -பதிவு-1

                                                        திருக்குறள்-தேரான்

-பதிவு-1

 

“தேரான் பிறனைத்

தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பைத் தரும்”

 

--------திருவள்ளுவர்

--------திருக்குறள்

 

“ஒருவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

இரண்டு

விஷயங்கள்

மூலமாகத்

தெரிந்து

கொள்ளலாம்”

 

ஒன்று : 

“ஒருவர்

நம்மைப் பார்த்து

செயல்படும் விதம்”

 

இரண்டு :

“ஒருவர் நாம்

சொல்வதைக் கேட்டு

செயல்படும் விதம் “

 

ஒன்று:

“ஒருவர் நம்மை

தெருவில்

பார்க்கும் போதோ?”

 

அல்லது

 

“அவருடைய வீட்டில்

நம்மைப்

பார்க்கும் போதோ?”


அல்லது

 

“நம்முடைய வீட்டில்

நம்மைப்

பார்க்கும் போதோ?”

 

அல்லது

 

“எந்த இடம் என்று

கூட பார்க்காமல்

எந்த இடத்தில்

இருந்தாலும்

அவர் நம்மைப்

பார்க்கும் போதோ ?

நாம் அவரைப்

பார்க்கும் போதோ?

அவர்

நம்மைப் பார்த்து

கையெடுத்து

கும்பிடுதல்

உட்கார்ந்த

நிலையில் இருந்து

எழுந்து

மரியாதை

செலுத்துதல்

போன்ற

மரியாதை தரும்

விஷயங்களை

செய்தார் என்றால்

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறார்

என்று அர்த்தம் “

 

“ஒருவர்

நம்மீது

வைத்திருக்கும்

மரியாதையை

வெளிப்படுத்துகிறார்

என்று அர்த்தம்”

 

“ஒருவர் நம்மீது

வைத்திருக்கும்

மரியாதையை

அவர்

தானாகவே

நம்முடைய

தூண்டுதல்

இல்லாமல்

சுயமாகவே

வெளிப்படுத்துகிறார்

என்று அர்த்தம்”

 

“இது நம்மைப்

பார்க்கும் போது

ஒருவர்

நம்மீது உள்ள

மரியாதையை

வெளிப்படுத்தும்

விதம்”

 

இரண்டு :

“ஒருவரால்

நமக்கு

ஒரு வேலை

முடிய வேண்டி

இருக்கிறது”

 

“அதனால்

அவருடைய

சம்மதத்தைப்

பெற வேண்டும்

என்பதற்காக

அவரிடம்

பேசுகிறோம்”

 

“அவரும்

கண்டிப்பாக

வந்து அந்த

வேலையை

முடித்துத்

தருவதாக

ஒத்துக்

கொள்கிறார்”

 

“நம்முடன்

இணைந்து

அந்த வேலையை

செய்வதற்கு

அவரும்

ஒத்துக்

கொள்கிறார்”

 

“எந்த வேலை

என்றாலும்

பரவாயில்லை

முடித்து விடலாம்

என்று

அவரும்

ஒத்துக்

கொள்கிறார்”

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////