பரம்பொருள்-பதிவு-108
அர்ஜுனன் :
“களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடைய மூவரும்
பாண்டவர்கள் அணியில்
தானே உள்ளனர் ;
பின்பு நாம்
ஏன் கவலைப்பட
வேண்டும் கிருஷ்ணா ?”
“நம் இருவரை
கௌரவர்களால்
நெருங்கவே முடியாதே!”
கிருஷ்ணன் :
“ஆனால் அரவானை
கௌரவர்களால்
நெருங்க முடியுமே?”
அர்ஜுனன் :
“அரவான் என்னுடைய
மகன் என் சொல்படி
தானே கேட்பான் ?”
கிருஷ்ணன் :
“தவறு அர்ஜுனா தவறு
அரவான்
உன்னுடைய மகன்
மட்டுமல்ல
உலூபியின்
மகனும் கூட,
விதைத்து விட்டு
வந்தவன் மட்டும்
தான் நீ - ஆனால்
அன்பும் கருணையும்
உணவில் கொடுத்து
அரவானை ஊட்டி
வளர்த்தவள் உலூபி”
“இரக்கம் அரவானின்
இரத்தத்தோடு
கலந்து இருக்கிறது ;
வீரம் அரவானின்
உயிரோடு
பிணைந்து இருக்கிறது ;”
“உலகத்திலேயே
சிறந்த வீரர்களாக
கருதப்படும்
பீஷ்மர்
துரோணாச்சாரியார்
ஆகியோருக்கு
எதிராக நின்று
சண்டையிடுவதற்கும் ;
அவர்களுடைய
ஆயுதங்களுக்கு எதிராக
எதிர் ஆயுதம் எடுத்து
தடுக்கக்கூடிய
வல்லமை - உனக்கு
மட்டும் தான்
இருக்கிறது என்று
நினைத்து விட்டாயா ?”
“பீஷ்மர்
துரோணாச்சாரியார்
ஆகியோருக்கு எதிராக
சண்டையிடுவதற்கும் ;
அவர்களுடைய
ஆயுதங்களுக்கு எதிராக
எதிர் ஆயுதம்
எடுத்து தடுக்கக்கூடிய
வல்லமை மட்டுமல்ல
அவர்களை
புறமுதுகிட்டு
ஓடச்செய்யும்
சர்வ வல்லமை
படைத்தவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே ! “
“பீஷ்மர்
துரோணாச்சாரியாருடைய
ஆயுதங்களை
தடுக்கும் சக்தி
மட்டும் தான்
உனக்கு உண்டு ;
ஆனால் அவர்களை
புறமுதுகிட்டு
ஓடச்செய்யும் சக்தி
அரவானுக்கு மட்டுமே
உண்டு என்பதை
மறந்து விடாதே !”
“உன்னுடைய
அம்புக்கு எதிர் அம்பு
விடக்கூடியவர்கள்
இந்த உலகத்தில்
ஒரு சிலர் மட்டுமே
இருக்கிறார்கள் - என்று
நினைத்து விடாதே
உனக்கு எதிராக
அரவான் நின்றால்
அவன் விடும் எந்த
ஒரு அம்புக்கும்
எதிர் அம்பு உன்னிடம்
இல்லை என்பதை
மறந்து விடாதே !”
“அரவான்
பாண்டவர்கள்
சார்பாக நின்று
போரிட்டு
கௌரவர்களை
எதிர்த்தான் என்றால்
கௌரவர்களில்
ஒருவரையும்
மிச்சம் வைக்க
மாட்டான் ;
கெளரவர்களுடைய
சந்ததியையே
அழித்து விடுவான் ;”
“அதைப்போல
அரவான்
கெளரவர்கள்
சார்பாக நின்று
போரிட்டு
பாண்டவர்களை
எதிர்த்தான் என்றால்
பாண்டவர்கள் என்ற
ஒரு இனம்
இருந்ததா என்று
அனைவரும்
எதிர்காலத்தில்
கேள்வி கேட்கும்
வகையில்
பாண்டவர் என்ற
இனத்தையே
அழித்து
விடக்கூடிய
வல்லமை
படைத்தவன்
அரவான் ;”
“32 லட்சணங்களும்,
எதிர்ரோமம்
ஆகிய இரண்டு
தகுதிகளையும்
கொண்டவர்கள்
களப்பலி
கொடுப்பதற்கு
மட்டும் தான் தகுதி
உடையவர்கள் என்று
நினைத்துவிட்டாயா ?
அவர்களுக்கென்று
தனிப்பட்ட
சிறப்பு தகுதிகள்
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா
அர்ஜுனா
அதைப்பற்றி
யோசித்து
இருக்கிறாயா ?”
“கேள் அர்ஜுனா கேள்”
---------- இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்
---------- 01-01-2020
//////////////////////////////////////////