August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-134


               ஜபம்-பதிவு-626
         (அறிய வேண்டியவை-134)

“நான்
போட்ட
திட்டம்
தோல்வி
அடைந்தால்
எத்தகைய
விளைவுகள்
ஏற்படும்
என்பதை
அறிந்து
வைத்திருப்பன்
நான்
அதனால்
தான்
நாம்
மாட்டிக்
கொள்ளாமல்
இருக்க
வேண்டுமானால்
என்ன
செய்ய
வேண்டும்
என்று
யோசிக்காமலா
திட்டங்களை
தீட்டி
செயல்படுத்தி
இருப்பேன்”

“இப்போதும்
நாம்
மாட்டிக்
கொள்ள
மாட்டோம்”

“நான்
போட்ட
சதித்திட்டம்
தோல்வி
அடைந்தாலும்
இப்போதும்
நாம்
மாட்டிக்
கொள்ள
மாட்டோம்”

துரியோதனன் :
“எப்படி மாமா
அவர்களே”

சகுனி :
“அதற்குத்
தேவையான
ஏற்பாடுகளை
நான்
ஏற்கனவே
செய்யத்
தொடங்கி
விட்டேன் “

துரியோதனன் :
“எதைத்
தொடங்கி
இருக்கிறீர்கள்
மாமா
அவர்களே”

சகுனி :
“அதைத்
தெரிந்து
கொள்வதற்கு
முன்
உன்
தந்தையிடம்
சென்று
சில
கேள்விக்கான
பதிலைக்
கேட்டுத்
தெரிந்து
கொண்டு வா”

துரியோதனன் :
“எதைத்
தெரிந்து
கொண்டு
வர
வேண்டும்
மாமா
அவர்களே”

சகுனி :
“துருபதனுடைய
நாட்டில்
இருக்கும்
பாண்டவர்களை
அஸ்தினாபுரத்திற்கு
அழைத்து
வருவதற்கு
விதுரனை
ரகசியமாக
அனுப்பி
வைத்ததற்கான
காரணம்
என்ன என்று
தெரிந்து
கொண்டு வா”

“நமக்குக்
கூட
தெரியாமல்
நம்மிடம்
கூட
சொல்லாமல்
நம்மிடம்
கூட
கலந்து
ஆலோசிக்காமல்
பாண்டவர்களை
அஸ்தினாபுரம்
அழைத்து
வருவதற்கு
ரகசியமாக
விதுரனை
அனுப்பி
வைத்ததற்கான
காரணம்
என்ன
என்று
தெரிந்து
கொண்டு
வா
மருமகனே”

துரியோதனன் :
“சரி
மாமா
அவர்களே
நான்
என்
தந்தையிடம்
பேசி
விட்டு
வருகிறேன்”

(என்று
சொல்லி
விட்டு
துரியோதனனும்
கர்ணனும்
அந்த
அறையை
விட்டு
வெளியேறினர்)

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-133


             ஜபம்-பதிவு-625
       (அறிய வேண்டியவை-133)

சகுனி :
“எப்படி மாட்டிக்
கொள்வோம்”

துரியோதனன் :
“புரோசனன்
மாட்டிக் கொண்டால்
நம்மை காட்டிக்
கொடுத்து விடுவான்”

சகுனி :
“புரோசனன் நம்மை
காட்டிக் கொடுத்து
விட்டால்”

துரியோதனன் :
“சதி வேலை
செய்தது நாம்
தான் என்பது
தெரிந்து விடும்
நாம் குற்றவாளியாகி
விடுவோம்”

சகுனி :
“குற்றவாளியாகி
விட்டால்”

துரியோதனன் :
“நம்மை தண்டிப்பார்கள்”

சகுனி :
“நம்மை தண்டிக்காமல்
இருப்பதற்கு என்ன
செய்ய வேண்டும்
மருமகனே”

துரியோதனன் :
“அது தான் எனக்குத்
தெரியவில்லை
மாமா அவர்களே”

சகுனி
“அதை எப்படி
தீர்ப்பது என்பதைப்
பற்றித் தான்
யோசித்துக்
கொண்டிருந்தேன்
இதனைப் புரிந்து
கொள்ளாமல் தான்
உன்னுடைய
நண்பன்
கர்ணன் என்னை
இகழ்ந்து கொண்டே
இருந்தான்
வார்த்தைகளால்
என்னை தாக்கிக்
கொண்டே
இருந்தான்”

“நீயும் அதை
கேட்டுக் கொண்டு
தானே இருந்தாய்
உன் நண்பன்
பேசிக் கொண்டு
இருந்த போது
நீ அமைதியாகத்
தானே இருந்தாய்”

துரியோதனன் :
“என்னுடைய நண்பன்
ஏதேனும் தவறாக
சொல்லி இருந்தால்
என்னுடைய நண்பன்
கர்ணன் சார்பாக
நான் உங்களிடம்
மன்னிப்பு கேட்டுக்
கொள்கிறேன்
மாமா அவர்களே “

“என்னுடைய
சார்பாக
கர்ணனை
மன்னித்து விடுங்கள் “

“அடுத்து நாம் என்ன
செய்ய வேண்டும்
என்று சொல்லுங்கள்”

சகுனி :
“வேரைப் பிடுங்க
வேண்டும் மருமகனே”

துரியோதனன் :
“வேரைப் பிடுங்க
வேண்டுமா “

சகுனி :
“ஆமாம் வேரைப்
பிடுங்க வேண்டும்
மருமகனே”

“ஒரு மரத்திற்கு
அடித்தளமாக இருப்பது
வேர் மட்டுமே”

“வேர் மட்டுமே
மொத்த மரத்தையும்
தாங்கிக் கொண்டு
இருக்கிறது”

“வேரை
அழித்து விட்டால்
மொத்த மரத்தையும்
அழித்து விடலாம்”

“அதைப்போல இந்த
விஷயத்தின்
அடித்தளத்தை
அழித்து விட்டால்
நாம் தப்பித்து
விடலாம்”

துரியோதனன் :
“தாங்கள் அடித்தளம்
என்று எதைக்
குறிப்பிடுகிறீர்கள்”

சகுனி :
“புரோசனனைத் தான்
குறிப்பிடுகிறேன்”

துரியோதனன் :
“புரோசனைனை
என்ன செய்யப்
போகிறீர்கள்”

சகுனி :
“புரோசனனை என்ன
செய்யப்போகிறேன்
என்று பொறுத்திருந்து
பாரு மருமகனே”

துரியோதனன் :
“புருசோனனை நாம்
கண்டு பிடிப்பதற்கு
முன்னால்
அஸ்தினாபுரத்தின்
வீரர்கள்
கண்டு பிடித்து
விட்டால்
நாம் மாட்டிக்
கொள்வோமே
மாமா அவர்களே”

சகுனி :
“இந்த திட்டத்தை
தீட்டியவன் நான்
இந்த திட்டத்தை
செயல்
படுத்தியவன் நான்
வெற்றி பெற்றால்
என்ன நிலை
ஏற்படும்
அதற்கு என்ன
செய்ய வேண்டும்
தோல்வி ஏற்பட்டால்
என்ன நிலை
ஏற்படும்
அதற்கு என்ன
செய்ய வேண்டும்
என்று இரண்டு
நிலைகளையும்
ஆராய்ந்து
பார்த்துத் தான்
திட்டத்தைத் தீட்டி
நான் செயல்படுத்தி
இருக்கிறேன்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-132


              ஜபம்-பதிவு-624
       (அறிய வேண்டியவை-132)

கர்ணன் :
“அப்படி என்றால்
ஒரு போர் வீரன்
நாட்டை
காப்பாற்றவில்லை
என்கிறீர்களா?”

சகுனி :
“நான் அப்படி
சொல்லவில்லை
ஒரு போர் வீரனும்
கூடத் தான்
நாட்டை
காப்பாற்றுகிறான்
என்று
சொல்கிறேன்”

கர்ணன் :
“ஆனால் ஒரு
போர் வீரன்
மட்டும் தானே
எதிரிகளைக்
கொன்று
நாட்டைக்
காப்பாற்றுகிறான்”

சகுனி :
“இந்த உலகத்தில்
வேலை செய்யும்
ஒவ்வொருவரும்
தாங்கள் செய்யும்
வேலையின் மூலம்
தங்கள் உயிரைக்
கொடுத்து மற்ற
உயிர்களைக்
காப்பாற்றுவதன்
மூலம்
இந்த நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
ஆனால் ஒரு
போர் வீரன் பிற
உயிர்களைக்
கொன்று
தன்னுடைய
உயிரைக்
காப்பாற்றிக்
கொண்டு
நாட்டைக்
காப்பாற்றுகிறான்”

“மற்றவர்கள்
தங்கள்
உயிரைக் கொடுத்து
இந்த நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
ஆனால் போர்
வீரர்கள்
பிறருடைய
உயிரை
எடுத்து இந்த
நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்”

“தன்னுடைய
உயிரைக்
கொடுத்து
இந்த நாட்டைக்
காப்பாற்றுகிறார்களே
அவர்கள்
உயர்ந்தவர்களா
பிறருடைய
உயிரை எடுத்து
இந்த நாட்டைக்
காப்பாற்றுகிறார்களே
அவர்கள்
உயர்ந்தவர்களா?”

கர்ணன் :
(அமைதியாக
இருக்கிறான்)

சகுனி :
“கர்ணா நீ ஏன்
அமைதியாக
இருக்கிறாய்”

கர்ணன் :
“நீங்கள் பேசும்
பேச்சுக்களைப்
பார்த்தால்
நீங்கள்
போர் செய்யப்
போவதில்லை
என்று தெரிகிறது
சதித்திட்டம்
தீட்டிக் கொண்டு
இருக்கப்
போகிறீர்கள்
என்று
தெரிகிறது”

சகுனி :
“நான் போடும்
திட்டங்கள்
நான் நினைத்ததை
முடிக்க
முடியவில்லை  
என்ற நிலை
வரும் போது
நான் தீட்டும்
திட்டங்களால்
எந்தவிதமான
முடிவும்
எட்டப்படவில்லை
என்ற நிலை
வரும் போது
போரினால் தான்
என்னுடைய
திட்டங்கள்
நிறைவேறும்
என்ற நிலை
வரும் போது
நான் போர்
செய்வேன்”

கர்ணன் :
“அது எப்போது வரும்”

சகுனி :
“அது இப்போதே
வரலாம்
நாளை வரலாம்
வராமலே கூட
போகலாம்”

கர்ணன் :
“அப்படி என்றால்
நீங்கள் போடும்
சதித்திட்டங்களை
தொடர்ந்து
செயல்படுத்திக்
கொண்டு தான்
இருக்கப்
போகிறீர்களா”

சகுனி :
“நான் என்ன
சொல்லப்
போகிறேன்
என்பது
உனக்குத்
தெரியாதா கர்ணா”

கர்ணன் :
“இதற்கு பதில்
சொல்லுங்கள்
வாரணாவதத்தில்
பாண்டவர்கள்
தங்கி இருந்த
அரக்கு
மாளிகையை
எரித்து
பாண்டவர்களை
கொல்வதற்காக
நீங்கள் போட்ட
சதித் திட்டம்
தோல்வி
அடைந்து விட்டதே
இப்போது என்ன
செய்யப் போகிறீர்கள்”

துரியோதனன் :
“ஆமாம் மாமா
இப்போது நாம்
என்ன செய்வது
பாண்டவர்களை
அரக்கு
மாளிகையில்
வைத்து
கொல்வதற்கு
நாம் தான்
திட்டத்தை தீட்டி
செல்படுத்தினோம்
என்று தெரிந்து
விட்டால்
நாம் மாட்டிக்
கொள்வோம்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////