August 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-126


            ஜபம்-பதிவு-618
       (அறிய வேண்டியவை-126)

கர்ணன் :
“நீங்கள் போட்ட
சதித்திட்டங்கள்
ஒன்றோ அல்லது
இரண்டோ
தோல்வி அடைந்தால்
நான் உங்களை
எதுவும் சொல்ல
மாட்டேன்
ஆனால் நீங்கள்
போட்ட
சதித்திட்டங்கள்
அனைத்தும்
அல்லவா
தோல்வியில்
முடிந்து
இருக்கிறது”

சகுனி :
“நான் இதுவரை
போட்ட
சதித்திட்டங்கள்
அனைத்தும்
தோல்வியில்
முடிந்து
இருக்கிறது
என்பதற்காக
என்னை
சதிவேலைகள்
செய்ய வேண்டாம்
என்று
சொல்கிறாயா
கர்ணா “

கர்ணன் :
“ஆமாம்”

சகுனி :
“இதுவரை போட்ட
சதித்திட்டங்கள்
அனைத்தும்
தோல்வியில்
முடிந்து விட்டது
என்ற
காரணத்திற்காக
சதித்திட்டங்கள்
தீட்டுவதை
நிறுத்தி
விடுவான்
இந்த சகுனி
என்று நினைத்து
விட்டாயா கர்ணா”

“இந்த உலகத்தில்
உள்ளவர்களைப்
போல சகுனி
என்ன
சாதாரணமான
மனிதன்
என்று நினைத்து
விட்டாயா
என்னைப் பற்றி
தெரிந்து
கொள்ளாத
காரணத்தினால்
தான் நீ
இவ்வாறு பேசிக்
கொண்டிருக்கிறாய்
கர்ணா”

“இந்த சகுனி
போடும்
சதித்திட்டங்கள்
அனைத்தும்
தோல்வியில்
முடிந்தாலும்
என்னுடைய
உடலில் உயிர்
இருக்கும்
வரைக்கும்
துரியோதனனை
அரியணையில்
ஏற்றுவதற்காக
தொடர்ந்து
சதித்திட்டங்களைத்
தீட்டிக்
கொண்டு தான்
இருப்பேன்”

“திருதராஷ்டிரனுக்கு
இழைக்கப்பட்ட அநீதி
என்னுடைய
மருமகன்
துரியோதனனுக்கும்
நடக்கக்கூடாது
என்று போராடிக்
கொண்டு தான்
இருப்பேன்”

“துரியோதனனை
அரியணை
ஏற்றுவதற்காக
நான் போடும்
திட்டங்களை
நீ சதித்திட்டம்
என்று சொல்கிறாய்”

“இதிலிருந்து
உனக்கு அரசியலும்
தெரியவில்லை
அரசியலின்
அரிச்சுவடியும் கூட
தெரியவில்லை
என்று தெரிகிறது “

“அரசியல்
அரிச்சுவடியை
நீ படித்து
இருந்தால்
நான் போடும்
திட்டங்களை நீ
சதித்திட்டம் என்று
சொல்லியிருக்க
மாட்டாய்
அரசியல் அரிச்சுவடி
உனக்கு தெரியாத
காரணத்தினால் தான்
நான் போடும்
திட்டங்களை நீ
சதித்திட்டம்
என்கிறாய்”

“துரியோதனனை
அரியணை
ஏற்றுவதற்காக
நான் போடும்
திட்டங்கள்
அனைத்தும்
அரசியல்
அடிச்சுவடியான
ராஜநீதியின்
அடிப்படையில் தான்
செய்கிறேன்
என்பது உனக்குத்
தெரியாதா கர்ணா
அல்லது
ராஜ நீதி என்ற
ஒன்று இருப்பதே
உனக்குத் தெரியாதா
கர்ணா”

கர்ணன் :
“நீதியைக்
கேள்வி
பட்டிருக்கிறேன்
அது என்ன
ராஜநீதி “

“நீதிக்கும்
ராஜ நீதிக்கும்
என்ன வித்தியாசம்
இருக்கிறது“

சகுனி :
“நீதிக்கும்
ராஜநீதிக்கும்
வித்தியாசம்
இருக்கிறது
கர்ணா”

“ஒருவன் தனக்கு
எதிரியாக
இருப்பவனை
கொலை
செய்கிறான்
என்றால்
கொலை
செய்தவன் தவறு
செய்தான் என்று
கொலை
செய்ததற்கான
தண்டனையை
கொலை
செய்தவனுக்கு
வழங்கினால்
அதற்குப்
பெயர் நீதி”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 02-08-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment