ஜபம்-பதிவு-617
(அறிய
வேண்டியவை-125)
“நீ
நினைத்தவுடன்
எல்லாம்
போர்
செய்வதற்கு
போர்
ஒன்றும்
எளிமையானதல்ல
என்பதைத்
தெரிந்து
கொள்
கர்ணா”
“போரில்
இத்தனை
சிரமங்கள்
இருக்கிறது
என்ற
காரணத்தினால்
தான்
நான் போரைத்
தேர்ந்தெடுப்பதில்லை
“
“அதை
நான்
கடைசி
ஆயுதமாகத்
தான்
வைத்திருக்கிறேன்”
“போரினால்
ஏற்படக்கூடிய
இழப்புகளை
கணக்கில்
எடுத்துக்
கொண்டு
தான்
நான்
சதித்திட்டங்களைத்
தீட்டுகிறேன்
“
“நமக்கு
சேதங்கள்
ஏதும்
ஏற்படாமல்
இருக்க
வேண்டும்
என்பதற்காகத்
தான்
சதித்திட்டங்களை
தீட்டி
அதனை
நடைமுறைப்படுத்திக்
கொண்டிருக்கிறேன்”
கர்ணன் :
“ஆனால்
நீங்கள்
செய்யும்
சதித்
திட்டங்கள்
எல்லாம்
தோல்வியில்
தானே
முடிந்திருக்கிறது”
சகுனி :
“எதைத்
தோல்வி
என்கிறாய்”
கர்ணன் :
“பீமன்
சின்னவனாக
இருக்கும்
போது
அவனைக்
கொல்வதற்காக
விஷத்தைக்
கொடுத்தீர்கள்
ஆனால்
என்ன
ஆயிற்று
அவன்
சாகவா
செய்தான்
நாகலோகம்
சென்றான்
நூறு
யானை
பலத்தோடு
திரும்பி
வந்தான் “
“அவன்
முன்பை
விட
இன்னும்
பலசாலியாகத்
திரும்பி
வந்தான் “
“இளவரசன்
பட்டம்
யுதிஷ்டிரனுக்கு
கிடைக்கக்
கூடாது
யுதிஷ்டிரன்
இளவரசனாகக்
கூடாது
என்று
பல்வேறு
சதிவேலைகள்
செய்தீர்கள்
ஆனால்
என்ன
ஆயிற்று
யுதிஷ்டிரன்
இப்போது
அஸ்தினாபுரத்தின்
இளவரசனாக
இருக்கிறான்
“
“வாரணாவதத்தில்
அரக்கு
மாளிகையில்
தங்கி
இருந்த
பாண்டவர்களை
எரித்துக்
கொல்ல
சதித்திட்டம்
தீட்டினீர்கள்
பாண்டவர்கள்
இறந்து
விடுவார்கள்
என்று
நீங்கள்
நினைத்தீர்கள்
“
“ஆனால்
இப்போது
என்ன
நடந்தது
பாண்டவர்கள்
யாரும்
சாகவில்லை
அவர்கள்
தப்பி
விட்டார்கள்
அவர்கள்
இப்போது
உயிரோடு
இருக்கிறார்கள்
நலமுடன்
இருக்கிறார்கள்
துருபனுடைய
நாட்டில்
இருக்கிறார்கள்
அது
மட்டுமல்ல
துருபதனுடைய
மகளான
திரௌபதியையும்
திருமணம்
செய்து
கொண்டு
இருக்கிறார்கள்
“
“துருபதன்
என்ற
மாபெரும்
மன்னனுடைய
ஆதரவையும்
பெற்று
பலம்
வாய்ந்தவர்களாக
இருக்கிறார்கள்”
“நீங்கள்
போடும்
சதித்திட்டங்கள்
அனைத்தும்
தோல்வியில்
தானே
முடிந்து
இருக்கிறது
அப்புறம்
ஏன்
சதித்திட்டம்
தீட்டுவதையே
யோசித்துக்
கொண்டிருக்கிறீர்கள்
“
“அதனால்
தான்
நான்
சஷத்திரிய
தர்மத்துடன்
போர்
செய்ய
வேண்டும்
என்று
சொல்கிறேன்
ஆனால்
நீங்கள்
அதைப்
பற்றி
யோசிக்காமல்
சதித்திட்டம்
தீட்டி
பாண்டவர்களை
அழிக்க
முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்”
சகுனி :
“நான்
போட்ட
சதித்திட்டங்கள்
தோல்வி
அடைந்து
விட்டது
என்பதற்காக
எந்த
ஒரு
சதித்திட்டத்தையும்
நான்
தீட்டாமல்
இருக்க
முடியுமா”
“தீட்டிய
சதித்திட்டத்தை
செயல்படுத்தாமல்
தான்
இருக்க
முடியுமா”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
02-08-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment