ஜபம்-பதிவு-612
(அறிய
வேண்டியவை-120)
(வாரணாவதத்தில்
பாண்டவர்கள்
தங்கியிருநத
அரக்கு
மாளிகையை
எரித்து
பாண்டவர்களை
கொல்வதற்காகப்
போடப்பட்ட
திட்டம்
தோல்வியடைந்து
பாண்டவர்கள்
உயிரோடு
இருப்பதைக்
கேள்வி
பட்ட
துரியோதனன்
கர்ணன்
ஆகிய
இருவரும்
சகுனியைச்
சந்திக்கச்
சென்றனர்
சகுனி
அறையில்
அமர்ந்து
கொண்டு
இருந்தார்)
துரியோதனன் :
“விஷயம்
கேள்விப்பட்டீர்களா
மாமா
அவர்களே!”
சகுனி :
“கேள்விப்
பட்டேன்”
துரியோதனன் :
“விஷயத்தைக்
கேள்வி
பட்டுமா
நீங்கள்
அமைதியாக
இருந்து
கொண்டிருக்கிறீர்கள்”
சகுனி :
“யோசித்துக்
கொண்டிருக்கிறேன்”
கர்ணன் :
“நீங்கள்
யோசிப்பது
போல்
தெரியவில்லை
அமைதியாக
இருப்பது
போல்
தெரிகிறது”
சகுனி :
“ஒருவர்
யோசித்துக்
கொண்டிருக்கிறாரா
அல்லது
அமைதியாக
இருக்கிறாரா
என்பதை
வெளியில்
இருந்து
பார்ப்பவர்களால்
கண்டு
பிடிக்க
முடியாது
கர்ணா “
“சம்பந்தப்பட்டவர்
சொன்னால்
மட்டுமே
அவர்
அமைதியாக
இருக்கிறாரா
அல்லது
யோசித்துக்
கொண்டிருக்கிறாரா
என்பதை
அறிந்து
கொள்ள
முடியும்”
“கர்ணா
நீ
சொல்வது
போல்
நான்
அமைதியாக
இருக்கவில்லை
யோசித்துக்
கொண்டிருந்தேன்”
கர்ணன் :
“அமைதியாக
இருப்பதற்கும்
யோசித்துக்
கொண்டிருப்பதற்கும்
பெரிய
அளவில்
வேறுபாடு
எதுவும்
இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லை
இரண்டு
சும்மா
இருப்பது
தானே”
சகுனி :
“இரண்டுக்கும்
வேறுபாடு
இருக்கிறது
கர்ணா”
கர்ணன் :
“அது
என்ன வேறுபாடு
எனக்குத்
தெரியாத
வேறுபாடு
“
சகுனி :
“உன்னைப்
போன்றவர்களுக்கு
வேறுபாடு
தெரியாது
தான்
என்னைப்
போன்றவர்ளுக்குத்
தான்
வேறுபாடு
தெரியும்”
கர்ணன் :
“சொல்லுங்கள்
அப்படி
என்ன
வேறுபாடு
இருக்கிறது
நானும்
தெரிந்து
கொள்கிறேன்”
சகுனி :
“ஒருவன்
அமைதியாக
இருக்கும்
போது
அமைதியாக
இருப்பவனுடைய
மனம்
இயங்காது
ஆனால்
யோசித்துக்
கொண்டிருக்கும்
போது
யோசித்துக்
கொண்டிருப்பவனுடைய
மனம்
இயங்கும்”
“அமைதியாக
இருப்பவன்
இயங்காமல்
இருப்பான்
யோசித்துக்
கொண்டிருப்பவன்
இயங்கிக்
கொண்டிருப்பான்”
“நான்
இயங்கிக்
கொண்டிருந்தேன்
மனதால்
நான்
இயங்கிக்
கொண்டிருந்ததால்
உனக்குத்
தெரியவில்லை
உடலால்
நான்
இயங்கிக்
கொண்டிருந்தால்
உனக்குத்
தெரிந்திருக்கும்”
கர்ணன் :
“பேசும்
போது
நன்றாகத்
தான்
பேசுகிறீர்கள்
- ஆனால்
செயல்களைச்
செய்யும்
போது
தான்
கோட்டை
விட்டு
விடுகிறீர்கள்”
சகுனி :
“எதை
கோட்டை
விட்டு
விட்டேன்
என்கிறாய்”
கர்ணன் :
“வாரணாவதத்தில்
எரிக்கப்பட்ட
அரக்கு
மாளிகையில்
இருந்து
பாண்டவர்கள்
தப்பித்ததைத்
தான்
சொன்னேன்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
02-08-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment