ஜபம்-பதிவு-624
(அறிய
வேண்டியவை-132)
கர்ணன் :
“அப்படி
என்றால்
ஒரு
போர் வீரன்
நாட்டை
காப்பாற்றவில்லை
என்கிறீர்களா?”
சகுனி :
“நான்
அப்படி
சொல்லவில்லை
ஒரு
போர் வீரனும்
கூடத்
தான்
நாட்டை
காப்பாற்றுகிறான்
என்று
சொல்கிறேன்”
கர்ணன் :
“ஆனால்
ஒரு
போர்
வீரன்
மட்டும்
தானே
எதிரிகளைக்
கொன்று
நாட்டைக்
காப்பாற்றுகிறான்”
சகுனி :
“இந்த
உலகத்தில்
வேலை
செய்யும்
ஒவ்வொருவரும்
தாங்கள்
செய்யும்
வேலையின்
மூலம்
தங்கள்
உயிரைக்
கொடுத்து
மற்ற
உயிர்களைக்
காப்பாற்றுவதன்
மூலம்
இந்த
நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
ஆனால்
ஒரு
போர்
வீரன் பிற
உயிர்களைக்
கொன்று
தன்னுடைய
உயிரைக்
காப்பாற்றிக்
கொண்டு
நாட்டைக்
காப்பாற்றுகிறான்”
“மற்றவர்கள்
தங்கள்
உயிரைக்
கொடுத்து
இந்த
நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்
ஆனால்
போர்
வீரர்கள்
பிறருடைய
உயிரை
எடுத்து
இந்த
நாட்டைக்
காப்பாற்றுகிறார்கள்”
“தன்னுடைய
உயிரைக்
கொடுத்து
இந்த
நாட்டைக்
காப்பாற்றுகிறார்களே
அவர்கள்
உயர்ந்தவர்களா
பிறருடைய
உயிரை
எடுத்து
இந்த
நாட்டைக்
காப்பாற்றுகிறார்களே
அவர்கள்
உயர்ந்தவர்களா?”
கர்ணன் :
(அமைதியாக
இருக்கிறான்)
சகுனி :
“கர்ணா
நீ ஏன்
அமைதியாக
இருக்கிறாய்”
கர்ணன் :
“நீங்கள்
பேசும்
பேச்சுக்களைப்
பார்த்தால்
நீங்கள்
போர்
செய்யப்
போவதில்லை
என்று
தெரிகிறது
சதித்திட்டம்
தீட்டிக்
கொண்டு
இருக்கப்
போகிறீர்கள்
என்று
தெரிகிறது”
சகுனி :
“நான்
போடும்
திட்டங்கள்
நான்
நினைத்ததை
முடிக்க
முடியவில்லை
என்ற
நிலை
வரும்
போது
நான்
தீட்டும்
திட்டங்களால்
எந்தவிதமான
முடிவும்
எட்டப்படவில்லை
என்ற
நிலை
வரும்
போது
போரினால்
தான்
என்னுடைய
திட்டங்கள்
நிறைவேறும்
என்ற
நிலை
வரும்
போது
நான்
போர்
செய்வேன்”
கர்ணன் :
“அது
எப்போது வரும்”
சகுனி :
“அது
இப்போதே
வரலாம்
நாளை
வரலாம்
வராமலே
கூட
போகலாம்”
கர்ணன் :
“அப்படி
என்றால்
நீங்கள்
போடும்
சதித்திட்டங்களை
தொடர்ந்து
செயல்படுத்திக்
கொண்டு
தான்
இருக்கப்
போகிறீர்களா”
சகுனி :
“நான்
என்ன
சொல்லப்
போகிறேன்
என்பது
உனக்குத்
தெரியாதா
கர்ணா”
கர்ணன் :
“இதற்கு
பதில்
சொல்லுங்கள்
வாரணாவதத்தில்
பாண்டவர்கள்
தங்கி
இருந்த
அரக்கு
மாளிகையை
எரித்து
பாண்டவர்களை
கொல்வதற்காக
நீங்கள்
போட்ட
சதித்
திட்டம்
தோல்வி
அடைந்து
விட்டதே
இப்போது
என்ன
செய்யப்
போகிறீர்கள்”
துரியோதனன் :
“ஆமாம்
மாமா
இப்போது
நாம்
என்ன
செய்வது
பாண்டவர்களை
அரக்கு
மாளிகையில்
வைத்து
கொல்வதற்கு
நாம்
தான்
திட்டத்தை
தீட்டி
செல்படுத்தினோம்
என்று
தெரிந்து
விட்டால்
நாம்
மாட்டிக்
கொள்வோம்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
02-08-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment