April 11, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-1


              ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-1
            

ஒரு சமயம்
சோழ மன்னனுக்கு ஏற்பட்ட
வினோதமான
சிந்தனையால்
தன் அரண்மனைப்
புலவர்கள்
அனைவரையும் அழைத்து,
நாளை காலைக்குள்
நான்கு கோடி
பாடல்கள் எழுதி
கொண்டு வர வேண்டும்
என ஆணையிட்டார்.

நான்கு
பாடல்கள் எழுதவே
நான்கு வாரங்கள்
ஆகிவிடுகிறது,
இதில் எங்கே
நான்குகோடிப் பாடல்கள்
எழுதுவது என்று
புலவர்கள் சிந்தை
கலங்கி வருத்தத்துடன்
நின்று கொண்டு
இருந்தபொழுது
அங்கே
ஔவையார் வந்தார்.

புலவர்கள்
அனைவரையும் பார்த்தார்.
அனைவர் முகங்களிலும்
ஒருவித
கலக்கம் தெரிந்தது.
ஏன் அனைவரும்
கலக்கத்துடன்
இருக்கிறீர்கள்
என்ன வருத்தம்
என்ன மனக்குழப்பம்
என்று கேட்டார்.
அதற்கு அந்த புலவர்கள்
அரசனின்
உத்தரவை சொல்ல,
ஔவையார்
புன்னகையுடன்
இவ்வளவு தானா
ஏன் மனம்
வருத்தப்படுகிறீர்கள்
நான்கு கோடி பாடல்
நான் எழுதித் தருகிறேன்
கொண்டு போய்
மன்னனிடம்  கொடுங்கள்
என்று கூறி
பாடல்கள் எழுதி
அவர்களிடம் கொடுத்தார்.

புலவர்கள் தயங்கி நிற்க
ஔவையார்
இந்த பாடல்
நான்கு கோடி
மதிப்பு உடையது
சென்று கொடுங்கள்
என்று சொல்லி
அனுப்பினார்.

புலவர்கள் அவையில்
இந்த நான்கு
கோடிப் பாடல்களை
வாசிக்க,
மன்னன் வியந்து
இவற்றை நிச்சயம்
ஔவையார் தான்
இயற்றி இருக்க முடியும்

ஒளவையாரைத் தவிர
யாரும் இயற்றி
இருக்க முடியாது என்று
முடிவெடுத்து
இந்த பாடலை இயற்றியது
ஔவையார் தானே
என கேட்க
புலவர்களும் ஆமாம்
ஔவையார் தான்
இயற்றினார் எனக்கூற
ஔவையாரை அழைத்து
பெரும் பரிசு அளித்து,
பெரு மரியாதை
செய்து போற்றினான்
என்பது வரலாறு.
அந்த நான்கு
கோடிப் பாடல்கள் இதுதான்.

"""மதியாதார் முற்றம்
மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்""""

"""""உண்ணீர் உண்ணீரென்று
உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"""""

"""""கோடி கொடுப்பினும்
குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்""""""

"""""கோடானு கோடி
கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

ஔவையார் எழுதிய
இந்த பாடலைப் பற்றி
நாம் தெரிந்து
கொள்வதற்கு முன்
ஔவையாரைப் பற்றி
ரு விஷயத்தை
நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்
ஔவையார்
ஒரு புலவர் மட்டுமல்ல
அவர் ஒரு
உண்மை நிலைஉணர்ந்த
உயர்ந்த சித்தர்
என்பது எத்தனை
பேர்களுக்கு தெரியும்.

-----இன்னும் வரும்
////////////////////////////////////////////////