பரம்பொருள்-பதிவு-46
திருஞான
சம்பந்தர் :
“அண்ட
சராசரங்கள்
அனைத்தையும்
தன்னுள்
வைத்து
இயக்கி
; காப்பாற்றி ;
வழிநடத்தும்
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச்
செயல்
அற்புதமில்லையா
? ”
“விதையிலிருந்து
செடியும் ;
செடியிலிருந்து
பூவும் ;
பூவிலிருந்து
காயும் ;
காயிலிருந்து
கனியும் ;
இவைகள்
ஒவ்வொன்றும்
வரிசை
முறை மாறாமல்
தகுந்த
காலத்தில்
வெளிப்படும்
வகையில்
செயல்கள்
அனைத்தையும்
செய்து
கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச்
செயல்
அற்புதமில்லையா
? “
“தாயின்
வயிற்றுக்குள்
இருக்கும்
குழந்தைக்கு
உயிர்
வாழ்வதற்குத்
தேவையானவைகள்
அனைத்தையும்
வழங்கும்
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச்
செயல்
அற்புதமில்லையா
? “
“
நம்முடைய உடலுக்குள்
இருக்கும்
உறுப்புகள்
அனைத்தும்
இயக்க
ஒழுங்கு மாறாமல்
கால
ஒழுங்கு மாறாமல்
தொடர்ந்து
இயங்கிக்
கொண்டிருக்கும்
வகையில்
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கும்
ஆண்டவரின்
இந்தச்
செயல்
அற்புதமில்லையா
? “
“நமக்கு
வெளியேயும்
நமக்கு
உள்ளேயும்
இதைப்போல
எண்ணற்ற
அற்புதங்களை
தொடர்ந்தாற்போல்
அன்றாடம்
நிகழ்த்திக்
கொண்டிருக்கும்
ஆண்டவனின்
இந்தச்
செயல்கள்
அனைத்தும்
அற்புதமில்லையா?”
“ஆண்டவர்
தொடர்ந்து
நிகழ்த்திக்
கொண்டிருக்கும்
இந்த
அற்புதங்களோடு
இறந்தவரை
எழுப்பும்
செயலை
ஒப்பிடும்போது
இறந்தவரை
எழுப்பும்
செயல்
ஒன்றும் எனக்கு
அற்புதமாகத்
தெரியவில்லை?”
மக்கள்
:
“
இந்த மண்ணில் வாழ்ந்த
பலர்
இறந்தவர்களை
உயிரோடு
எழுப்பி
இருக்கிறார்களே!
அதைப்பற்றி
நீங்கள்
என்ன
நினைக்கிறீர்கள்?”
“இறந்தவரை
எழுப்பும்
செயல்
அற்புதம்
இல்லை
என்று
சொல்ல
வருகிறீர்களா?”
“அற்புதம்
இல்லை
என்றால்
அவர்கள்
எந்த
காரணத்திற்காக
இறந்தவரை
எழுப்பினார்கள்”
திருஞான
சம்பந்தர் :
“அவர்கள்
விதியின்
கைகளுக்குள்
மாட்டிக்
கொண்டு
காலத்தால்
செய்த
தவிர்க்க
முடியாத
செயலாகத்
தான்
இருக்கும் ;
அதனை
அவர்கள்
விருப்பப்பட்டு
செய்து
இருக்க
மாட்டார்கள் ;
சமுதாயத்தின்
வற்புறுத்தலின்
பேரில் தான்
செய்து
இருப்பார்கள் ;
தங்களுடைய
கொள்கையை
நிலை
நாட்டுவதற்காகத்
தான்
செய்து
இருப்பார்களே
தவிர
தாங்கள்
புகழ் அடைய
வேண்டும்
- செல்வாக்கு
பெற
வேண்டும் - என்ற
நோக்கத்துடன்
செய்து
இருக்க
மாட்டார்கள் ;
சுருக்கமாகச்
சொல்லப்
போனால்
அவர்கள் அதை
காலத்தின்
தேவை கருதித்
தான்
செய்து இருப்பார்கள் ;”
“இன்னும்
விளக்கமாக
சொல்ல
வேண்டும் என்றால்
எஞ்சிய
கர்மாவின்
தாக்குதலால்
தான் ;
ஊழ்வினை
உறுத்து
வந்து
ஊட்டியதால் தான் ;
ஆண்டவர்
இட்ட
கட்டளையை
ஏற்று
செயல்படுத்தியதால்
தான் ;
காலத்தின்
கட்டாயம்
கருதி
செயல்பட்டதால் தான் ;
சூழ்நிலையின்
அவசியம்
கருதி
செயலைச்
செய்ய
வேண்டி
இருந்ததால் தான் ;
இறந்தவரை
எழுப்பி
இருப்பார்கள்
;’
“வேறு
எந்த ஒரு
காரணத்திற்காகவும்
இறந்தவரை
எழுப்பும்
செயலைச்
செய்து
இருக்க
மாட்டார்கள் ;”
மக்கள்
:
“
அப்படியானால்
இறந்தவரை
எழுப்புவது
என்பது
மிகப்பெரிய
செயல்
என்று
நினைத்துக்
கொண்டிருக்கும்
மக்களைப்
பற்றி
நீங்கள்
என்ன
நினைக்கிறீர்கள்-------------------?
“
திருஞான
சம்பந்தர் :
“மக்கள்
அனைவரும்
அப்படி
நினைப்பதில்லை
மக்களில்
ஒரு
சாரார்
மட்டுமே
இறந்தவரை
எழுப்புவது
மிகப்பெரிய
செயல்
என்று
நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்………………..?“
-------- இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
23-07-2019
//////////////////////////////////////////////////////////