இயேசு கிறிஸ்து-வள்ளலார்-உள்ளொன்று - பதிவு - 32
“”பதிவு முப்பத்திரெண்டை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
“இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து , மற்றவனைச் சிநேகிப்பான் ; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு ; மற்றவனை அசட்டை பண்ணுவான் ; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது. ”
----------மத்தேயு - 6 : 24
சிந்தனை என்பது வேறு
கற்பனை என்பது வேறு
சிந்தனையால் பலன் உண்டு
கற்பனையால் பலன் உண்டு என்று சொல்ல முடியாது
சிந்தனையோடு கூடிய கற்பனையே சிறந்தது
கற்பனையோடு கூடிய சிந்தனை சிறந்தது அல்ல
சிந்தனையோடு கூடிய கற்பனையே பலன் தரும்
கற்பனையோடு கூடிய சிந்தனையால் எந்தப் பலனும் இல்லை
சிந்தனையோடு கூடிய கற்பனையே வெற்றிக்கு வழி
கற்பனையோடு கூடிய சிந்தனையோ தோல்விக்கு வழி
சிந்தனையோடு கற்பனை செய்து சிந்திப்பது வாழ்க்கை உயர்வுக்கு வழி
கற்பனையோடு சிந்தனை செய்து சிந்திப்பது தோல்விக்கே வழி
சிந்தனையோடு கற்பனை செய்து சிந்தித்து முன்னேறியவர்கள் பலர்
கற்பனையோடு சிந்தனை செய்து சிந்தித்ததால் தாழ்ந்தவர்கள் பலர்
வெற்றி என்பது சிந்தனையோடு கற்பனை செய்வதே
தோல்வி என்பது கற்பனையோடு சிந்தனை செய்வதே
சிந்தனையே சிறந்தது
சிந்தனையோடு கூடிய கற்பனையே சிறந்தது!
என்ற இரு வேறுபட்ட நிலைகளில்
முரண்பாடுகளின் மொத்த தொகுப்பாக
உலகம் சுழன்று கொண்டிருக்கிறது .
மனிதனும் இரண்டு மாறுபட்ட முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும்
வெளியில் ஒரு முகத்தை மட்டுமே காட்டிக் கொள்கிறான் .
பிடித்தவை – பிடிக்காதவை ,
நல்லவை – கெட்டவை ,
உயர்ந்த குணம் - தாழ்ந்த குணம் ,
என்ற இரு வேறுபட்ட நிலைகளை
முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும்
நல்ல குணங்களை வெளிக் காட்டிக் கொண்டும்
கெட்ட குணங்களை உள்ளே மறைத்து கொண்டும்
மனிதன் நடமாடுகிறான் .
நல்லவனாக வெளியில் நடமாடினாலும்
கெட்டவைகளை உள்ளே வைத்துக் கொண்டு
சுமந்து கொண்டு தான் திரிய வேண்டும் .
மனிதன் அவ்வாறே திரிந்து கொண்டிருக்கிறான் .
ஒருவனால் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின்
மேல் சவாரி செய்ய முடியாது !
ஒரு குதிரையின் மேல் பயணம் செய்தால்
செல்ல வேண்டிய இலக்கை
செய்ய வேண்டிய காலத்திற்குள் ,
செல்ல வேண்டிய நேரத்திற்குள் ,
சென்று முடிக்க வேண்டிய காரியத்தை
செயல்படுத்த வேண்டிய நிகழ்வுகளை முடிக்க முடியும் .
அதை விடுத்து இரு மாறுபட்ட
இரு தன்மைகளைக் கொண்டு
இரு குதிரைகளின் மேல் பயணம் செய்தால்
ஒவ்வொரு குதிரையும் ஒரு குறிப்பிட்ட
காலம் வரை ஒன்றாக வரும் .
ஒன்றாக செயல்படும் .
காலம் மாறும் போது
பருவங்கள் மாறும் போது இரண்டு குதிரையும்
வெவ்வேறு இலக்கை நோக்கி ,
வெவ்வேறு திசைகளை நோக்கி ,
வெவ்வேறு துருவங்களை நோக்கி ,
வெவ்வேறு மாற்றங்களை நோக்கி ,
வெவ்வேறு பகுதியை நோக்கி ,
வெவ்வேறு இடத்தை நோக்கி ,
வெவ்வேறு தன்மையை நோக்கி ,
வெவ்வேறு குறிக்கோள்களை நோக்கி ,
வெவ்வேறு செயல்பாடுகளை நோக்கி ,
பயணித்தால் பயணம் செய்பவன்
அதல பாதாளத்தில் வீழ்வான் ;
தலை குப்புற வீழ்வான் ;
மண்ணைக் கவ்வி வீழ்வான் ;
காயம் பட்ட உடலுடன் வீழ்வான் ;
புண்பட்ட மனதுடன் வீழ்வான் ;
எப்பொழுதும் மனிதன் இருவேறுபட்ட நிலைகளை
முரண்பாடுகளை தன்னுள் கொண்டு இயங்க முடியாது
ஓன்று நல்லவனாக இருக்க முடியும் ;
அல்லது கெட்டவனாக இருக்க முடியும் .
ஒரே நேரத்தில் ஒருவனால் நல்லவனாகவும்
கெட்டவனாகவும் இருக்க முடியாது .
ஒருவன் நல்லவனாக இருந்தால்
அவனுள் கெட்டவை அடங்கி கிடக்கும் .
ஒருவன் கெட்டவனாக இருந்தால்
அவனுள் நல்லவை வெளிப்படாமல் அமிழ்ந்து கிடக்கும் .
அதைப் போல ஒருவனால் இரண்டு முதலாளிகளிடம்
இரண்டு எஜமானர்களிடம் வேலை செய்ய முடியாது
ஏனென்றால் இரண்டு பேரிடமும்
உண்மையாக இருக்க முடியாது ;
நேர்மையாக இருக்க முடியாது ;
கண்ணியமாக இருக்க முடியாது ;
கடமை தவறாமல் இருக்க முடியாது ;
பொய் உரைக்காமல் இருக்க முடியாது ;
தவறு செய்யாமல் இருக்க முடியாது ;
பாதை மாறாமல் இருக்க முடியாது ;
ஒழுக்கத்துடன் இருக்க முடியாது ;
உண்மையாக இருக்க முடியாது ;
நல்லெண்ணத்துடன் இருக்க முடியாது ;
ஒருவரிடம் உண்மையாக இருந்தால்
மற்றொருவரிடம் உண்மையாக இருக்க முடியாது .
ஒருவரிடம் உண்மையாக இருந்தால்
மற்றொருவரிடம் நல்லவன் வேஷம் போட்டு
கெட்டவனாகத் தான் இருக்க முடியும் .
ஒருவனை ஏற்றுக் கொண்டால் மற்றவனை புறக்கணிப்பான் .
புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான் .
அதைப் போல நம்முள் இரண்டு மாறுபட்ட
முரண்பாடுகள் இருக்கின்றன
ஒன்று - உலகியல் வாழ்க்கை
மற்றொன்று - அருளியல் வாழ்க்கை
உடலியல் வாழ்க்கையில் உடலை வளர்க்கிறோம் !
அருளியல் வாழ்க்கையில் உயிரை வளர்க்கிறோம் !
உலகியல் வாழ்க்கையில் கவலையற்று இருக்க ,
துன்பம் நீங்கி இன்புற்று இருக்க ,
செல்வம் பெற்று செழிப்புடன் இருக்க ,
வாழ்க்கைத் தேவைகளைப் பெற்று சிறப்புடன் இருக்க ,
செயல்கள் பல செய்து உடலை வளர்க்கிறோம்
அருளியல் வாழ்க்கையில் ஆண்டவனை உணர்ந்து
ஆண்டவன் அருளைப் பெற்று
ஆண்டவன் ஆசியைப் பெற்று
ஆண்டவனுக்கு சேவை செய்து
உயர்வான நிலையை அடைய முயற்சிக்கிறோம் .
உலகியல் வாழ்க்கை ; அருளியல் வாழ்க்கை ;
இரண்டும் இருவேறுபட்ட துருவங்கள் ,
இரண்டும் இருவேறுபட்ட பாதைகள் ,
இரண்டும் இருவேறுபட்ட செயல்முறைகள் ,
உலகியல் வாழ்க்கை அனைத்தையும் பெற முயற்சிப்பது
உலகியல் வாழ்க்கை இவ்வுலகில் ஒருவன்
வாழ்வதற்கு தேவையானவற்றை பெற முயற்சிப்பது .
அருளியல் வாழ்க்கை உண்மையில் அனைத்தையும்
துறந்தால் மட்டுமே கிடைப்பது .
அருளியல் வாழ்க்கையை உணர்ந்து
ஆண்டவன் அருளைப் பெற்று விட்டால்
உலகியல் வாழ்க்கைக்குத் தேவையான
எல்லாவற்றையும் பெற முடியும் .
ஆனால் நாம் அருளியல் வாழ்க்கையில் மனதை ஈடுபடுத்தாமல்
உலகியல் வாழ்க்கையில் தான் அதிக அளவில்
மனதை செலுத்துகிறோம் .
அருளியல் வாழ்க்கையில் மனதை ஈடுபடுத்தாமல் இருக்கிறோம் .
ஒரு மனிதனால் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின்
மேல் சவாரி செய்ய முடியாது !
ஒரு மனிதனால் ஒரே சமயத்தில் இரண்டு எஜமானர்களிடம்
உண்மையாக வேலை செய்ய முடியாது !
ஒரு மனிதனால் ஒரே சமயத்தில் இரண்டு மாறுபட்ட
வாழ்க்கை வாழ முடியாது !
உலகியல் வாழ்க்கையில் மனதை செலுத்தியவருக்கு ,
அருளியல் வாழ்க்கையில் மனதை செலுத்த முடியாது .
அருளியல் வாழ்க்கையில் மனதை செலுத்தியவருக்கு ,
உலகியல் வாழ்க்கையில் மனதை செலுத்த முடியாது .
இரண்டு நிலைகளிலும் ஒருவனால் முழுமையாக ஈடுபட முடியாது .
ஏதாவது ஒன்றை துறந்தால் தான் முழுமையான வாழ்க்கையை
முழுமையான ஒன்றைக் கொண்டு நடத்த முடியும் .
எதை துறப்பது , எதை பின்பற்றுவது இரண்டில் ஒன்றை
எதை தொடர்வது என்பதை அவனவன் தான் முடிவு செய்ய வேண்டும் .
அருளியல் வாழ்க்கையில் ஈடுபட்டு
ஆண்டவன் அருளைப் பெற்று
உயர்வான நிலையை அடைய வேண்டுமானால்
உலகியல் வாழ்க்கையை துறந்தால் மட்டுமே முடியும் ;
ஆண்டவனிடம் முழுமையாக மனதை செலுத்த முடியும் ;
ஆண்டவன் அருளைப் பெற முடியும் ;
ஆண்டவனை உணர முடியும் ;
உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டு
தன் தேவையை நிறைவேற்றிக் கொள்பவர்,
அருளியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாது ;
ஆண்டவனுக்கு சேவை செய்ய முடியாது ;
ஆண்டவனை அடைய முடியாது ;
ஆண்டவன் அருளைப் பெற முடியாது ;
ஒருவனால் ஒரே சமயத்தில்
இரு மாறுபட்ட வாழ்க்கை வாழ முடியாது .
ஏதாவது ஒன்றை துறந்தாக வேண்டும் .
ஏதாவது ஒன்றை துறந்து ஒன்றை ஏற்று
உண்மையாக இருக்க வேண்டும் .
எதை தேர்ந்தெடுப்பது என்பதை ஒவ்வொருவரும்
அவரவருடைய சுய அறிவின் மூலம் முடிவு செய்து கொள்ளுங்கள் .
எது நமது வாழ்க்கைக்கு தேவையோ ?
எது நமது வாழ்க்கைக்கு பொருந்துமோ ?
எதன் வழி நடக்க விரும்புகிறோமோ ?
எதன் மேல் மனம் செல்கிறதோ ?
எதை அடைய வேண்டும் என்று மனது துடிக்கிறதோ ?
எதை ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்குமோ ?
எதை ஏற்றுக் கொண்டால் மனது திருப்தி அடையுமோ ?
எதை ஏற்றுக் கொண்டால் மனது சாந்தி அடையுமோ?
எதை ஏற்றுக் கொண்டால் மனது நிம்மதி அடையுமோ?
அதை ஏற்றுக் கொண்டு அதன் வழி உண்மையாக நடங்கள்
இரண்டு விதமான நிலைகளைக் கொண்டு
இரண்டு விதமான மனங்களைக் கொண்டு
ஒருவனால் ஒரு சமயத்தில் வாழ முடியாது .
என்பதை உணர்ந்து கொண்டு
இரண்டு விதமான வாழ்க்கை வாழாமல்
ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஒன்றைப் பற்றி
நின்று கொண்டு உண்மையாக வாழுங்கள் .
இரண்டு முரண்பட்ட வாழ்க்கையை வாழாதீர்கள்
வாழவும் முடியாது என்கிறார் இயேசு .
வள்ளலார்:
“”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”””
------வள்ளலார்-திருவருட்பா--
----முதல் திருமுறை-தெய்வமணிமாலை--
ஒரு சமயத்தில் இருவேறுபட்ட துருவங்கள் ;
மாறுபட்ட நிலைகள் ; முரண்பாடுகளின் விளக்கங்கள் ;
வெளிப்பட முடியாது .
ஒன்று வெளிப்படும்போது மற்றொன்று உள்ளே மறைந்திருக்கும் ;
ஒன்றுடன் மற்றொன்று வெளிப்படாமல் கலந்திருக்கும் ;
ஒன்றில் ஒன்று புதைந்திருக்கும் ;
ஒன்றுக்குள் ஒன்று மறைந்திருக்கும் ;
ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும் ;
ஒன்றில்லாமல் ஒன்று இயங்காது ;
ஒன்றை விட்டு ஒன்று இருக்காது ;
அமைதியின் விளக்கமாய் ;
அமைதிக்கு எடுத்துக்காட்டாய் ;
அமைதியின் உருவமாய் ;
அமைதிக்கு அடிப்படையாய் ;
அமைதியின் கலங்கரை விளக்கமாய் ;
அமைதிக்கு மூலமாய் ;
அமைதிக்கு சான்றாய் ;
அமைதிக்கு ஆதாரமாய் ;
இருப்பதாக வெளிக் காட்டிக் கொண்டு,
இந்த உலகத்தில் வாழ்பவர் ;
வாழ்க்கையை நடத்துபவர் ;
பலரும் தொழும்படி ,
பலரும் பாராட்டும்படி ,
பலரும் வணங்கும் படி ,
பலரும் பின்பற்றும் படி ,
பலரும் போற்றும் படி ,
வாழ்க்கையை ஒட்டி இந்த அவனியில்
வலம் வருபவரின்
உண்மை உணர்வுகளை ; உண்மை தன்மையினை ;
உண்மை நிலைகளை அறிந்து கொள்ள வேண்டுமானால்
அவரின் உள்ளே மறைந்திருக்கும்
உண்மை தன்மையினை உணர வேண்டும் .
அவரை சிறிது சினம்கொள்ளும் படி செய்தால்
சினத்தை உண்டாக்கும் செயல்களைச் செய்தால்
சினம் உண்டாகும் படி உணர்வுகளைத் துhண்டினால்
சினமானது பீறிட்டு வெளிக்கிளம்பும் .
சினத்தின் வெளிப்பாடால் அவர் பழக்கங்கள் மாறும் .
என்ன செய்வது என்று தெரியாமல்
அவர் தடுமாறும் நிலைதனை தெரிந்து கொள்ளலாம் .
அவருடைய உண்மை தன்மை இது தான்
தன்னுடைய உண்மை தன்மையினை
அடியாழத்தில் மறைத்து வைத்திருக்கிறார் ;
முகமூடி போட்டு மூடி வைத்திருக்கிறார் ;
யாரும் அறியாதவாறு ஒளித்து வைத்திருக்கிறார் ;
யாரும் பார்க்காதவாறு புதைத்து வைத்திருக்கிறார் ;
உண்மை தன்மையை உள்ளே மறைத்து விட்டு
இந்த உலகத்தில் அமைதியின்
இலக்கணமாக நடமாடி இருக்கிறார் ;
போலி வேஷம் போட்டிருக்கிறார் ;
நல்லவன் போல் நடித்து இருக்கிறார் ;
அமைதியானவன் என்று ஏமாற்றி இருக்கிறார் ;
கோபப்படாதவன் என்று நடித்திருக்கிறார் ;
ஒருவருடைய உணர்வுகள் துhண்டப்படும் போது தான்,
அவருடைய உண்மை தன்மை ; உண்மை முகம் வெளிப்படும்;
ஒருவருடைய உணர்வுகள் துhண்டப்படவில்லை எனில்
அவருடைய பொய் முகம் தான் வெளிப்படும் .
அமைதி - கோபம் என்ற இரண்டு வேறுபட்ட நிலைகளை
முரண்பாடுகளை வைத்துக் கொண்டு
அமைதியை வெளிப்படுத்தி விட்டு
கோபத்தை உள்ளே மறைத்திருக்கிறார்.
ஆனால் இரண்டையும் தன்னுள் சுமந்து கொண்டு திரிகிறார் ;
வாழ்கிறார் ; உலாத்துகிறார் ;
இரண்டும் அவருள் இருக்கிறது
ஒன்று வெளிப்படுகிறது ; ஒன்று மறைந்திருக்கிறது ;
ஓவ்வொருவரிடமும் இதேபோல் இரண்டு
மாறுபட்ட நிலைகள் இருக்கிறது .
காதல் – காமம் ,
அமைதி – கோபம் ,
நல்லவை – கெட்டவை ,
உயர்வு மனப்பான்மை - தாழ்வு மனப்பான்மை ,
போன்ற இரு வேறுபட்ட நிலைகள் இருக்கிறது .
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு வெளியே
நல்லவைகள் தான் வெளிப்படுகிறது
நல்லவைகளைத் தான் காட்டுகிறார்கள் ;
நல்லவைகளைத் தான் வெளிப்படுத்துகிறார்கள் ;
நல்லவர் போல் நடிக்கிறார்கள் ;
நல்லவர் போல் வாழ்கிறார்கள் ;
ஒருவருடைய உணர்வுகள் புண்பட்டாலோ ,
மனது காயம் பட்டாலோ ,
இதயம் தாக்கப் பட்டாலோ ,
மரியாதை பாதிக்கப் பட்டாலோ ,
தன்மானம் தகர்க்கப் பட்டாலோ ,
சுயமரியாதை இழக்கப் பட்டாலோ ,
வார்த்தையால் தாக்கப் பட்டாலோ ,
செயலால் பாதிக்கப் பட்டாலோ ,
எழுத்துக்களால் அவமானப் படுத்தப் பட்டாலோ ,
தான் ஒருவருடைய உண்மை தன்மை வெளிப்படும் .
இத்தகைய இரு மாறுபட்ட மாறுபாடுகளைக் கொண்ட
முரண்பாடுகளைக் கொண்ட
மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
அவர்கள் தங்கள் உண்மைத் தன்மையினை மறைத்து வாழ்பவர்கள்
உண்மைத் தன்மையினை வெளிப் படுத்தாதவர்கள்
தான் வாழ , தன் பெயர் நிலைபெற ,
தன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள ,
தன் வாழ்க்கை நிலைபெறச் செய்ய ,
எத்தகைய அடாத செயலையும் செய்யத் தயங்காதவர் .
எதனையும் அழிக்கக் கூடத் தயங்காதவர் .
ஆகவே இத்தகைய இருநிலைகளைக் கொண்டவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடப்பவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று செயல்படுபவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடந்து கொள்பவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று வாழ்பவரிடம் ;
உறவு கொள்ளக் கூடாது .
நட்பு பாராட்டக் கூடாது .
தோழமை கொள்ளக் கூடாது .
அப்படி காட்டினால் அத்தகைய
இருவேறுபட்ட நிலைகளைக் கொண்டவர்கள்
தான் வாழ பிறரையும் யாரையும் அழிக்க தயங்க மாட்டார்கள் .
இரு வேறு பட்ட நிலைகளைக் கொண்டவரிடம்
முரண்பாடுகளைக் கொண்டவரிடம்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவரிடம்
உறவு கொள்ளக் கூடாது .
நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது .
என்கிறார் வள்ளலார் .
இயேசு கிறிஸ்து - வள்ளலார் :
இயேசு, ஒருவனால் இரண்டு மாறுபட்ட நிலைகளைத் தன்னுள் கொண்டு
ஒரே சமயத்தில் இரண்டையும் வெளிப்படுத்தி வாழ முடியாது .
ஒன்று வெளிப்படும் போது , மற்றொன்று மறைந்திருக்கும் என்கிறார்.
அவ்வாறே , வள்ளலாரும் ,
ஒருவனால் இரண்டு மாறுபட்ட நிலைகளைத் தன்னுள் கொண்டு
ஒரே சமயத்தில் இரண்டையும் வெளிப்படுத்தி வாழ முடியாது .
ஒன்று வெளிப்படும் போது , மற்றொன்று மறைந்திருக்கும் .
அத்தகைய இரட்டைத் தன்மை கொண்டவரிடம் உறவு
கொள்ளக் கூடாது என்கிறார் .
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுமுப்பத்திரெண்டு ந்தான்முற்றே “”