பரம்பொருள்-பதிவு-21
7.கும்பஸ்தாபனம்
“கும்பஸ்தாபனம்
என்றால்
கும்பத்தை
நிறுவுதல்
என்று
பொருள்”
“அதாவது
எந்த
கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ
?
அந்த
கடவுள்
சிலைக்குரிய
சக்தியை;
கும்பமானது
பிரபஞ்சத்தில்
இருந்து
கிரகிப்பதற்கு
ஏற்ற
வகையில்
எத்தகைய
முறைகளை
கும்பத்திற்கு
செய்ய
வேண்டுமோ
?
அத்தகைய
முறைகளை ;
கும்பத்திற்கு
செய்து ;
கும்பத்தை
தயார்
செய்வதற்கு
;
கும்பஸ்தாபனம்
எனப்
பெயர் “
“கும்பத்தை
நிறுவும்
இந்த
நிகழ்வு
தான்
கும்பாபிஷேகத்தின்
போது
நடைபெறும்
மிக
முக்கியமான
நிகழ்வு
ஆகும்”
“கும்பமானது
தங்கம்,
வெள்ளி
தாமிரம்,
மண்
ஆகியவற்றில்
ஏதேனும்
ஒன்றைக்
கொண்டு
செய்ததாக
இருக்க
வேண்டும் ;
கும்பத்திற்கென்று
நிர்ணயிக்கப்பட்ட
நீளம்,
அகலம்
கொண்டதாக
கும்பம்
இருக்க
வேண்டும் ;”
“எந்தவிதமான
குறைபாடும்
இல்லாமல்
இருக்கும்படி
செய்யப்பட்ட
கும்பத்தையும்
;
பார்ப்பதற்கு
அழகான
விதத்தில்
இருக்கும்படி
அமைந்ததாக
இருக்கும்
கும்பத்தையும்
;
எத்தனை
கும்பம்
தேவைப்படுகிறதோ
அத்தனை
கும்பத்தையும்
;
தேர்ந்து
எடுத்துக்
கொள்ள
வேண்டும் ;”
“கும்பத்தின்
சிற்பதோஷம்
நீங்குவதற்காக
மந்திரத்தால்
மந்திரித்து ;
கும்பத்தை
நெருப்பில்
காட்டி ;
செம்மண்ணை
கும்பத்தின்
மேலே பூசி ;
கும்பத்தை
நூலால்
சுற்றி ;
பரிசுத்தமாக
இருக்கும்
ஆற்று
நீர் அல்லது
ஊற்றுநீரால்
கும்பத்தை
நிரப்ப
வேண்டும் ; “
“கும்பத்திற்குள்
மாவிலைகளைச்
செருகி ;
அதன்
மீது
நல்லதாக
இருக்கும்
ஒரு
தேங்காயை
தேர்ந்தெடுத்து
அந்த
தேங்காயை
கும்பத்தின்
மேலே
வைக்க
வேண்டும் ; ‘
“கும்பத்தின்
மேலே
இருக்கும்
தேங்காயை
சற்று
மேலே தூக்கி
நவரத்தினம்
தங்கம்,
வெள்ளி
ஆகியவற்றை
கும்பத்திற்குள்
இட்ட
பிறகு ;
மீண்டும்
தேங்காயை
கும்பத்திற்கு
மேலே
வைக்க
வேண்டும் ; “
“கும்பத்திற்கு
வஸ்திரம்
அணிவித்து ;
மலர்,
சந்தனம் ,
விபூதி
, குங்குமம் ,
முதலியவைகளை
இட
வேண்டும் ; “
“தானியங்களைப்
பரப்பி
அதன் மீது
கும்பத்தை
வைக்க
வேண்டும்”
“கும்பத்தை
இறைவனின்
வித்யா
தேகமாகக்
கருத
வேண்டும் ;
எந்த
கடவுள் சிலைக்கு
கும்பாபிஷேகம்
செய்ய
இருக்கின்றோமோ
அந்த
கடவுள்
சிலையின்
வித்யா
தேகமாகக்
கும்பத்தைக்
கருத
வேண்டும்
; ”
“கும்பத்தின்
மேல்
வைக்கப்படும்
தேங்காய்
இறைவனின்
தலையாகும்
;
மாவிலை
தலையில்
உள்ள
சிகையாகும் ;
கும்பத்தைச்
சுற்றி
கட்டப்படும்
துணி
தோலாகும் ;
கும்பத்தின்
மேல்
பூசப்படும்
செம்மண்
இரத்தமாகும்
;
கும்பத்தின்
உலோகம்
சதைப்பகுதியாகும்
;
கும்பத்தில்
சுற்றப்பட்ட
நூல்
நரம்பாகும் ;
கும்பத்தில்
இடப்பட்ட
நவரத்தினங்கள்
சுக்கிலமாகும்
;
நியாசம்
செய்யப்பட்ட
மந்திரம்
உயிராகும் ;
கும்பத்திற்கு
அடியில்
இடப்படும்
தானியம்
இறைவன்
அமர்ந்திடும்
ஆசனமாகும்
;
என்பதை
உணர்ந்து
கொண்டால்
கும்பமானது
இறைவனின்
வித்யா
தேகமாக
இருக்கிறது
என்பதை
உணர்ந்து
கொள்ளலாம் ; “
--------
இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
04-06-2019
/////////////////////////////////////////////////////