April 24, 2021

பதிவு-8-சினமென்னும்- -திருக்குறள்

 பதிவு-8-சினமென்னும்-

-திருக்குறள்

 

கொட்டிய

வார்த்தைகளையும்

செய்த

செயல்களையும்

மாற்ற

முடியாது

மறைக்க

முடியாது

அழிக்க

முடியாது

என்பதை

உணர்ந்து

அறிவின்றி

கோபத்தை

வெளிப்படுத்துவதற்கு

முன்னர்

யோசிக்க

வேண்டும்

 

பாதிக்கப்பட்டவர்

தவறு செய்தவரை

தவறின்

தன்மையை

உணரும் படிச்

செய்ய

வேண்டும்

என்பதற்காகத் தான்

பாதிக்கப்பட்டவருடைய

கோபம்

அறிவுடன்

வெளிப்படும்

கோபமாக

இருக்க

வேண்டுமே தவிர

வாழும்

வாழ்க்கையை

அழித்துக்

கொள்ளும்

வகையில்

வெளிப்படும்

கோபம்

அறிவின்றி

வெளிப்படும்

கோபமாக

இருக்கக்

கூடாது,

 

“””அறிவுடன்

கோபம்

வெளிப்படும்

போது

அந்த கோபம்

மிகப்பெரிய

பாதிப்பை

ஏற்படுத்தாது

என்பதையும் ;

அறிவின்றி

கோபம்

வெளிப்பட்டால்

மட்டுமே

அந்த

கோபத்தை

வெளிப்படுத்துவருக்கு

மிகப்பெரிய

பாதிப்பை

ஏற்படுத்துவதோடு

மட்டுமின்றி

அவருடைய

குடும்பத்திற்கும்

அவரைச் சுற்றி

இருப்பவர்களுக்கும்

மிகப்பெரிய

பாதிப்புகளை

ஏற்படுத்தும்

என்பதையும்

உணர்ந்து

அறிவின்றி

வெளிப்படும்

கோபத்தை

வெளிப்படுத்தும்

சூழ்நிலை

வந்தாலும்

அறிவின்றி

வெளிப்படும்

கோபத்தை

வெளிப்படுத்தக்

கூடாது

அதனைத்

தவிர்க்க

வேண்டும்

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

சினமென்னும்

சேர்ந்தாரைக்

கொல்லி

இனமென்னும்

ஏமப்

புனையைச் சுடும்

 

என்ற

திருக்குறளின் மூலம்

தெளிவுபடுத்துகிறார்””””

 

 

--------சுபம்

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

பதிவு-7-சினமென்னும்- -திருக்குறள்

 பதிவு-7-சினமென்னும்-

-திருக்குறள்

 

ஒருவரையொருவர்

விரும்பத்தகாத

வார்த்தையினால்

வாயினால்

சண்டையிட்டுக்

கொண்டு இருந்தவர்கள் ;

கைகளினால்

அடித்துக் கொள்ளுதல் ;

கட்டிப் புரண்டு

சண்டை போடுதல் ;

ஆயுதம் எடுத்து

தாக்கிக் கொள்ளுதல் ;

என்ற நிலை உருவாகி

யாரேனும் ஒருவர்

மற்றரை

குத்தி கொலை

செய்து விடுவார்

 

அறிவின்றி

கோபம் கொண்டு

செயல்பட்ட இருவரில்

யாரேனும் ஒருவர்

இறந்து விட்டால்

கத்தியால் குத்தியவர்

சிறை சென்று விடுவார்

கத்தியால் குத்தியவர்

குடும்பமும் துன்பத்தை

அனுபவிக்க வேண்டும் ;

அவமானங்களைச்

சந்திக்க வேண்டும் ;

இழப்புகளை

ஏற்க வேண்டும் .

இறந்தவருடைய

குடும்பமும்

துக்கத்தில் வாடும் ;

இழப்பினால் வருந்தும் ;

துன்பத்தில் துவளும் ;

ஆக மொத்தம்

இருவருடைய

குடும்பமும்

வேதனையில் வாடும்.

 

இருவருடைய குடும்பமும்

மிகப்பெரிய

அசிங்கங்களையும்  ;

அவமானங்களையும் ;

அவதூறுகளையும்  ;

இழப்புகளையும் ;

கவலைகளையும் ;

துக்கங்களையும் ;

துயரங்களையும் ;

சுமக்க வெண்டிய

கட்டாயத்திற்கு

உள்ளாகும் .

 

அறிவின்றி கோபம்

வெளிப்படும் போது

இந்த நிலை

தான் ஏற்படும் .

 

நண்பர்களிடையே

ஏற்படும் கோபம்

கணவன்

மனைவியிடையே

ஏற்படும் கோபம்

முதாலாளி தொழிலாளி

இடையே

ஏற்படும் கோபம்

ஆசிரியர் மாணவர்

இடையே

ஏற்படும் கோபம்

ஆகியவை

அறிவுடன் வெளிப்படும்

கோபமாக இருந்தால்

கோபம் முடிந்தாலும்

அவர்களுடைய

நட்பு தொடரும்.

 

நண்பர்களிடையே

ஏற்படும் கோபம்

கணவன்

மனைவியிடையே

ஏற்படும் கோபம்

முதலாளி தொழிலாளி

இடையே ஏற்படும்

ஆசிரியர் மாணவர்

இடையே

ஏற்படும் கோபம்

ஆகியவை

அறிவின்றி வெளிப்படும்

கோபமாக இருந்தால்

அவர்களுடைய

நட்பு தொடராது.

கோபம் என்பதை

வெளிப்படுத்துவதே

தவறானது

அத்தியாவசிமான

நிலைகள்

ஏற்படும் போது கோபம்

வெளிப்படாலாம்

தப்பில்லை

ஆனால் அந்த

கோபத்தை

வெளிப்படுத்தும் முன்னர்

அறிவுடன்

வெளிப்படும் கோபமா

(அல்லது)

அறிவின்றி

வெளிப்படும் கோபமா

என்பதை

உணர்ந்து பிறகே

வெளிப்படுதத

வேண்டும்.

 

கோபத்தை

வெளிப்படுத்தும்

முன்னர்

கோபத்தின்

தன்மையை உணராமல்

அறிவுடன் வெளிப்படும்

கோபத்தை

வெளிப்படுத்தாமல்

அறிவின்றி

வெளிப்படும் கோபத்தை

வெளிப்படுத்தினால்

நம்முடைய வாழ்க்கை

பிறருடைய வாழ்க்கை

நம்மைச்

சுற்றியுள்ளவர்கள்

வாழ்க்கை ஆகிய

அனைத்தும்

பாதிக்கப்படும் .

 

அறிவின்றி

வெளிப்படும் கோபத்தை

வெளிப்படுத்தி

விட்ட பிறகு

வருந்துவதால்

ஒரு பயனும் இல்லை

இழந்த வாழ்க்கை

இழந்தது தான்

மீண்டும் பெற

முடியாது

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

பதிவு-6-சினமென்னும்- -திருக்குறள்பதிவு-6-சினமென்னும்- -திருக்குறள்

 

பதிவு-6-சினமென்னும்-

-திருக்குறள்

 

இந்த நிகழ்வை

மட்டும் சொல்லாமல்

இந்த நிகழ்வுக்கு

சம்பந்தமாக பல்வேறு

நிகழ்வுகளையும்

இணைத்து

பள்ளியில்

படித்த வயதில்

நடந்த நிகழ்வுகளையும் ;

கல்லூரியில்

படித்த வயதில்

நடந்த நிகழ்வுகளையும் ;

வேலைக்கு சேர்ந்து

உழைத்து

சம்பாதித்த போது

நடந்த நிகழ்வுகளையும் ;

என்று பல்வேறு

காலங்களில்

நடந்த நிகழ்வுகளையும் ;

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு படுத்தி

அறிவின்றி கோபத்தை

வெளிப்படுத்துவார்கள் ;

 

பல்வேறு

கால கட்டங்களில்

தங்கள் உள்ளங்களில்

புதைத்து வைத்திருந்த

கோபத்தையும் ;

பல்வேறு

கால கட்டங்களில்

வெளிப்படுத்த

முடியாமல்

புதைத்து வைத்திருந்த

கோபத்தையும் ;

பல்வேறு

கால கட்டங்களில்

வெளிப்படுத்த

வாய்ப்பு இல்லாமல்

வெளிப்படுத்த

முடியாமல் மறைத்து

வைத்திருந்த

கோபத்தையும்

வெளிப்படுத்த

ஒரு சந்தர்ப்பம்

கிடைக்கும் போது

அதை தனக்கு

கிடைத்த வாய்ப்பாகக்

கருதிக் கொண்டு

அனைத்து

நிகழ்வுகளையும்

ஒன்றுடன் ஒன்று

தொடர்பு படுத்தி

தங்களுடைய

கோபத்தை

வெளிப்படுத்துவார்கள்

அறிவின்றி

கோபத்தை

வெளிப்படுத்துவார்கள்.

 

அறிவின்றி கோபம்

வெளிப்படும் போது

கைகளில் எந்த

பொருள் கிடைத்தாலும்

அந்த பொருளைப்

போட்டு உடைப்பார்கள் ;

பொருட்களை

தூக்கி வீசுவார்கள் ;

பொருட்களை தள்ளி

விடுவார்கள் ;

கால்களால் பொருட்களை

எட்டி உதைப்பார்கள் ;

 

அறிவின்றி கோபத்தை

வெளிப்படுத்துபவர்கள்

மற்றவர்களைத் தான்

குறை சொல்வார்கள் ;

மற்றவர்களின்

மேல் தான் குற்றத்தை

சுமத்துவார்கள் ;

மற்றவர்களைத் தான்

தவறானவர்கள் என்று

கத்துவார்கள் ;

மற்றவர்கள்

மேல் தான் களங்கத்தை

கற்பிப்பார்கள் ;

மற்றவர்களைத் தான்

கெட்டவர்கள்

என்பார்கள் ;

 

மற்றவர்களை

நல்லவர்கள் இல்லை

என்றுசொல்லும்

அறிவின்றி கோபத்தை

வெளிப்படுத்துபவர்கள்

தங்களை

உண்மையானவர் என்றும் ;

நேர்மையானவர் என்றும் ;

நியாயமானவர் என்றும் ;

புனிதமானவர் என்றும் ;

கண்ணியமானவர் என்றும் ;

தவறே செய்யாதவர் என்றும் ;

பாதிக்கப்பட்டவர் என்றும் ;

பாதிப்பினால்

உண்டான சோகத்தினால்

அவதிப்பட்டவர் என்றும் ;

பாதிப்பினால் உண்டான

மன உளைச்சலினால்

வேதனைப்பட்டவர் என்றும் ;

பாதிப்பினால் உண்டான

கவலையினால்

அவதிப்பட்டவர் என்றும் ;

தங்களை நீதிமான் என்றும் ;

சொல்லிக் கொள்வர்.

 

தவறு செய்தவர் யார்?

தவறு செய்யாதவர் யார்?

என்பதை உணராமல்

நான் தவறு

செய்யவில்லை என்றும்

நான் தவறு செய்தவரால்

பாதிக்கப்பட்டவர் என்றும்

தன்னை

நினைத்துக் கொண்டு

தன்னுடைய கோபத்தை

வெளிப்படுத்துவதால்

அவர்

வெளிப்படுத்தும் கோபம்

அறிவின்றி

வெளிப்படுகிறது.

 

பாதிக்கப்பட்டவர் யார் ?

தவறு செய்தவர் யார்  ?

என்று தெரியாத

காரணத்தினால்

தவறு செய்தது

நான் இல்லை

தவறு செய்தவர்

நீங்கள் தான் என்று

ஒருவரை ஒருவர்

மாற்றி மாற்றி

குற்றங்களைச்

சுமத்திக் கொண்டு

சண்டையிட்டுக்

கொண்டு இருக்கின்ற

காரணைத்தினால்

பாதிக்கப்பட்டவர் யார்

தவறு செய்வதவர் யார்

என்பது தெரியாது .

 

நிகழ்வால்

பாதிக்கப்பட்டவர்

யாராக இருந்தாலும் சரி

பாதிக்கப்பட்டவர் யார்

என்று தெரியாமல்

இருந்தாலும் சரி

தவறு செய்தவர்

யாராக இருந்தாலும் சரி

தவறு செய்தவர் யார்

என்று தெரியாமல்

இருந்தாலும் சரி

பாதிக்கப்பட்டவர்

தவறு செய்தவர்

ஆகிய இருவருக்கும்

இடையே வெளிப்படும்

கோபம்

அறிவின்றி வெளிப்படும்

கோபமாக

மட்டுமே இருக்கும்

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

பதிவு-5-சினமென்னும்- -திருக்குறள்

 

பதிவு-5-சினமென்னும்-

-திருக்குறள்

 

அறிவு இல்லாமல்

கோபம் மட்டுமே

வெளிப்படுவதால்

என்ன பேசுகிறோம்

என்ன செய்கிறோம்

என்பது தெரியாமல்

தன்னை மறந்த

நிலையில் பேசுவார்கள்

செயல்படுவார்கள்

 

அறிவில்லாததால்

என்ன பேசுகிறோம்

என்று தெரியாமல்

பைத்தியம் மாதிரி

உளறுவார்கள் ;

வெறி பிடித்தது போல்

ஓங்கி ஓங்கி

கத்துவார்கள் ;

சம்பந்தம் சம்பந்தம்

இல்லாமல் எதை

பேசக்கூடாதோ

அதை எல்லாம்

பேசுவார்கள் ;

குற்றம் சுமத்த

வேண்டும் என்பதற்காக

தான் பார்த்த

தான் கேட்ட

தனக்கு பிறர்

சொன்னவைகளை

மனதில்

வைத்துக் கொண்டு

கற்பனையாக

தங்களுக்குள்

ஒரு கதையை உருவாக்கி

வைதத்துக் கொண்டு

பல ஆண்டுகள்

நடந்த நிகழ்வுகளை

ஒன்றாக்கி ஒன்றுடன்

ஒன்றுடன்

தொடர்பு படுத்தி

இதனால் தான்

இந்த நிகழ்வு நடந்தது

இந்த நிகழ்வு நடப்பதற்கு

இது தான் காரணம்

என்று அறிவாளியாக

பேசுவதாக

நினைத்துக் கொண்டு

பேசுவார்கள் ;

 

பிறர் மனம்

புண்படுமே நாளை

அவர்களை பார்க்க

வேண்டுமே !

நாளை அவர்களுடன்

பழக வேண்டுமே !

நாளை அவர்களுடன்

உறவாட வேண்டுமே !

நாளை அவர்களுடன்

ஒன்று பட்டு

இருக்க வேண்டுமே !

நாளை அவர்களுடன்

அருகருகில்

வசிக்க வேண்டுமே !

நாளை ஒருவர்

முகத்தை ஒருவர்

பார்க்க வேண்டுமே !

நாளை ஒருவரை

ஒருவர் பார்த்தால்

பேச வேண்டுமே !

நாளை ஒருவரை

ஒருவர் பார்த்தால்

பழக வேண்டுமே !

என்ற நினைவு

சிறிதும் இல்லாமல்

 

எதிர்காலம்

என்ற ஒன்றைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாளை என்ன

நடக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தான் பேசுவதால்

விரும்பத்தாகத

விளைவுகள் ஏற்படுமே

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

மற்றவர்கள் என்ன

சொல்வார்கள் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

மற்றவர்கள்

எப்படி மனம்

வருத்தப்படுவார்கள்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

மற்றவர் உள்ளத்தை

நோகடிக்கிறோமோ

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தன்னைச் சுற்றி

என்ன நடக்கிறது

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாளை என்ன

நடக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

அடுத்து என்ன

நடக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாம் பேசுவது

சரியா தவறா

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நாம் செய்யும் செயல்

சரியா தவறா

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

நம் வாழ்க்கை

பாதிக்கப்படுமா

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

அடுத்தவருடைய

வாழ்க்கை

என்ன நிலை ஆகும்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

கோபத்தின் முடிவில்

நாம் பாதிக்கப்படுவோம்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

கோபத்தின் முடிவில்

என்ன விளைவுகள்

ஏற்படும்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

கோபம் தன்னையும்

தன் குடும்பத்தையும்

மட்டும் இல்லாமல்

சுற்றி உள்ளவர்களின்

குடும்பத்தையும்

பாதிகக்கும் என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தான் வெளிப்படுத்தும்

கோபத்தால் பலரும்

பாதிக்கப்படுவார்கள்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

தான் வெளிபபடுத்தும்

கோபத்தால் பலருடைய

குடும்பங்கள்

பாதிக்கப்படும்

என்பதைப்

பற்றிக் கூட

கவலைப்படாமல் ;

பைத்தியம் பிடித்த

ஒரு நிலையில்

கோபம் தலைக்கேறி

அறிவிழந்து

அறிவற்ற நிலையில்

அறிவின்றி கோபம்

வெளிப்படுவதால்

அறிவின்றி

வெளிப்படும் கோபம்

மிகவும் மோசமான

கோபம் என்று

சொல்வார்கள்.

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////