April 24, 2021

பதிவு-1-சினமென்னும்- -திருக்குறள்

 பதிவு-1-சினமென்னும்-

-திருக்குறள்

 

“””சினமென்னும்

சேர்ந்தாரைக்

கொல்லி

இனமென்னும்

ஏமப்

புனையைச் சுடும்””

 

----திருக்குறள்

----திருவள்ளுவர்

 

“சினம் என்னும்

சேர்ந்தவரை

அழிக்கும் நெருப்பு

ஒருவனுக்கு

இனம் என்னும்

இன்பத்

தெப்பத்தையும்

சுட்டழிக்கும்”

 

என்பது தான்

இந்த திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும்

கருத்து

 

இந்த திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

விளக்கம்

சொல்லலாம்

 

மனிதனிடம் இருந்து

வெளிப்படும் கோபத்தை

இரண்டு நிலைகளில்

பிரித்து விடலாம்

 

ஒன்று :

அறிவுடன்

வெளிப்படும் கோபம்

 

இரண்டு :

அறிவின்றி

வெளிப்படும் கோபம்

 

சில நிகழ்வுகளில்

கோபம் தனித்து

வெளிப்படாமல்

அறிவுடன் இணைந்து

வெளிப்படும்

இவ்வாறு

கோபம் தனித்து

வெளிப்படாமல்

அறிவுடன் இணைந்து

வெளிப்பட்டால்

அத்தகைய கோபத்தை

அறிவுடன்

வெளிப்படும் கோபம்

என்கிறோம்,

 

சில நிகழ்வுகளில்

கோபமானது

நமக்கு உள்ளே

வந்தவுடன் அறிவானது

வெளியே சென்று விடும்

கோபம் அறிவுடன்

இணைந்து

வெளிப்படாமல்

தனித்து வெளிப்படும்

அறிவின்றி

தனித்து வெளிப்படும்

இத்தகைய கோபத்தை

அறிவின்றி

வெளிப்படும் கோபம்

என்கிறோம்

 

 

ஒன்று :

அறிவுடன்

வெளிப்படும் கோபம் :

 

ஒரு நிகழ்வில்

தவறு செய்து

நிகழ்வின் பாதிப்புக்குக்

காரணமானவர் மீது  
அந்த நிகழ்வால்

பாதிக்கப்பட்டவர்

வெளிப்படுத்தும் கோபம்

அறிவுடன் வெளிப்படும்

கோபம் எனப்படும்.

 

ஒரு நிகழ்வில்

அறிவுடன் கோபம்

வெளிப்பட்டால்

நிகழ்வில் தவறு

செய்து நிகழ்வின்

பாதிப்புக்குக்

காரணமானவருக்கும்

நிகழ்வால்

பாதிக்கப்பட்டவருக்கும்

இடையே

மிகப் பெரும்

பிரிவை ஏற்படுத்தாது ;

தீர்க்க முடியாத

பகை உணர்ச்சியை

ஏற்படுத்தாது ;

ஆற்ற முடியாத

மன உளைச்சலை

ஏற்படுத்தாது ;

 

நிகழ்வின் தவறுக்குக்

காரணமானவர்

தன்னுடைய தவறை

தானே உணர வேண்டும்

என்பதற்காகவும் ;

தன்னுடைய தவறை

தானே உணர்ந்து

தன்னை

திருத்திக் கொண்டு

திருந்த வேண்டும்

என்பதற்காகவும் ;

இனி இதைப்

போல வேறு

ஒரு தவறை

நிகழ்வின் தவறுக்குக்

காரணமானவர்

செய்யக் கூடாது

என்பதற்காகவும் ;

நிகழ்வால் பாதிப்பு

அடைந்தவர்

நிகழ்வின் தவறுக்குக்

காரணமானவர் மீது

வெளிப்படுத்தும் கோபம்

அறிவுடன்

வெளிப்படும் கோபம்.

எனப்படும்.

 

அறிவுடன்

வெளிப்படும் கோபம்

எது சரி

எது தவறு என்று

நன்றாக ஆராயப்பட்ட

பிறகே வெளிப்படும்

பாதிக்கப்பட்டவர் யார் ?

தவறு செய்தவர் யார் ?

என்பதை

வேறு படுத்தி

கண்டு பிடிக்க

முடியும்.

 

பாதிக்கப்பட்டவருக்கு

நான் பாதிக்கப்பட்டேன்

என்பதும் ;

தவறு செய்தவருக்கு

நான் தவறு

செய்தேன்

என்பதும் ;

அவரவருக்கு

தனித்தனியாக

தெள்ளத்

தெளிவாகத் தெரியும்

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment