April 24, 2021

பதிவு-2-சினமென்னும்- -திருக்குறள்

 பதிவு-2-சினமென்னும்-

-திருக்குறள்

 

அறிவுடன்

வெளிப்படும் கோபம்

ஒரு நிகழ்வை

மையமாக வைத்து

தான் வெளிப்படும்

 

ஒரு நிகழ்வில்

தவறு செய்தவர் மீது

பாதிக்கப்பட்டவர்

கோபத்தை

வெளிப்படுத்தும் போது

கோபத்துடன் அறிவு

இணைந்து வேலை

செய்வதால்

என்ன பேசுகிறோம்

என்ன செயல்

செய்கிறோம்

என்பது தெரியும்.

எனவே நிகழ்வுடன்

சம்பந்தப்பட்ட

வார்த்தைகளை

மட்டும் பேசி

கோபப்படுவார்

பாதிக்கப்பட்டவர்

தான் எவ்வாறு

பாதிக்கப்பட்டார்

என்பதையும்

தவறு செய்தவர்

எவ்வாறு தவறு

செய்தார்

என்பதையும்

சொல்வார்.

 

ஒரு கம்பெனியை

நடத்தும் முதலாளி

தன்னுடைய

கம்பெனியில்

வேலை பார்க்கும்

மேனேஜரிடம்

ஒரு குறிப்பிட்ட

வேலையை

ஒரு குறிப்பிட்ட

நாட்களுக்குள்

குறிப்பிட்ட

வேலையாட்களை

வைத்து முடித்து

தர வேண்டும்

என்று கட்டளை

இட்டு இருந்தார்.

 

ஆனால் அந்த

கம்பெனியின் மேனேஜர்

தன்னுடைய முதலாளி

சொன்ன நாட்களுக்குள்

அந்த வேலையை

முடித்துத் தரவில்லை.

 

இதனால் அந்த

கம்பெனிக்கு பல்வேறு

இழப்புகள் ஏற்பட்டது.

இதனால் கோபமுற்ற

அந்த கம்பெனியின்

முதலாளி மேனேஜரின்

மீது கோபத்தை

வெளிப்படுத்துகிறார்

 

கம்பெனியின்

முதலாளி நிகழ்வில்

எது சரி?

எது தவறு?

என்று ஆராய்ந்த

பிறகே கோபத்தை

வெளிப்படுத்தியதால்

முதலாளி

வெளிப்படுத்திய

கோபம் அறிவுடன்

வெளிப்படுத்திய

கோபம் எனப்படும்.

 

பாதிக்கப்பட்ட

கம்பெனியின்

முதலாளி

தவறு செய்த

மேனேஜரிடம்

அறிவுடன் வெளிப்படும்

கோபத்தை

வெளிப்படுத்தும் போது

அறிவுடன்

வெளிப்படும் கோபம்

எப்படி இருக்கும்

என்பதை புரிந்து

கொள்ள முடியும்

 

ஒரு வேலையை

குறிப்பிட்ட நாட்களுக்குள்

முடிக்க வேண்டும்

என்று அந்த

வேலையை

உங்களிடம்

ஒப்படைத்து இருந்தேன்.

ஆனால் நீங்கள்

அந்த வேலையை

குறிப்பிட்ட

நாட்களுக்குள்

முடிக்கவில்லை.

 

இதனால் நம்முடைய

கம்பெனிக்கு எவ்வளவு

இழப்புகள்

ஏற்பட்டிருக்கிறது

என்று தெரியுமா ?

 

இழப்புகளுடன்

சேர்ந்து அவப்பெயரும்

நம்முடைய கம்பெனிக்கு

ஏற்பட்டிருக்கிறது என்ற

விவரங்களாவது

உங்களுக்குத் தெரியுமா ?

 

இவைகள் அனைத்தும்

நீங்கள் உங்கள்

வேலையை சரிவர

செய்யாததால்

ஏற்பட்டு

இருக்கிறது என்பது

உங்களுக்கு தெரியுமா ?

 

இந்த தவறுகள்

உங்களுடைய

கவனக்குறைவால்

ஏற்பட்டு இருக்கிறது

உங்களுடைய

அஜாக்கிரதையால்

ஏற்பட்டு இருக்கிறது

என்பது

உங்களுக்கு தெரியுமா?

 

உங்களிடம்

ஒப்படைக்கப்பட்ட

வேலையின் மதிப்பை

உணர்ந்து வேலையை

குறிப்பிட்ட

நாட்களுக்குள்

செய்ய வேண்டாமா ?

 

நீங்கள்

அந்த வேலையை

மதிப்பை உணர்ந்து

செய்யவில்லை ?

 

--------என்றும் அன்புடன்

---------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

---------23-04-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment