நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-26
அனுமார் சீதையைச்
சந்தித்த போது
சீதையை நோக்கி
“””””நீங்கள்
வேண்டுமென்று
திருமாங்கல்யத்தை
வைத்துக் கொண்டு,
வேண்டாமென்று
எறிந்த
அணிகலன்கள் தாம்
வேண்டும் என்று
வைத்திருந்த
திருமாங்கல்யத்தைக்
காப்பாற்றியது.”””””
அவைகள் தான்
நான் உங்களை தேடி
வரக் காரணம்
ஆகியது என்றார்.
சீதை அனுமாரை நோக்கி
இங்கு நீ எவ்வாறு
வந்தாய் என்று
கேட்டார்
“”””இராமருடைய
திருவடியை
தியானிக்கின்றவர்கள்
பிறவிக்கடலையே
கடப்பார்கள்
நான் இந்த
உவர்க் கடலை
கடந்தது ஒரு
சிறப்பா””””
என்றார் அனுமார்
இராமரை அனுதினமும்
உள்ளம் உருகி
தியானம் செய்பவர்களுக்கு
அவரை வணங்குபவர்களுக்கு
பிறவி என்பது
கிடையாது
யாருக்கு பிறவி என்பது
கிடையாதோ
அவருக்கு இறப்பு
என்பது கிடையாது
முக்தி அடைந்து
விட்டால் பிறவி
என்பது கிடையாது
அதைத் தான்
அனுமார்
பிறவிக்
கடலைக் கடக்க
பிறவியை
இல்லாமல் செய்ய
இறப்பு என்பது
ஏற்படாமல் இருக்க
முக்தி என்பதை
அடைவதற்கு
இராமனை வணங்க
வேண்டும் என்று
தன் வார்த்தையால்
எளிமையாக
விளக்குகிறார்
அனுமார்.
அனுமார்
அதோடு நிற்காமல்
தன்னைப் பற்றி
சொல்லும் போது
“”””இராமருக்கு
பணி
செய்யும் வீரர்கள்
கடலின் மணலை
விட
அதிகமாகப் பலர்
இருக்கின்றனர்.
அந்த இராமனுக்கு
பணி செய்யும்
அடியார்களில்
நான்
கடை நிலையில்
உள்ளவன்
அங்கும் இங்கும்
சென்று
வேலை செய்ய
சிறியவர்களுக்குத்
தானே
உத்தரவிடுவார்கள்
அதனால்
தங்களை கண்டுபிடிக்க
வேண்டும் என்ற
உத்தரவை ஏற்று
நான் கடலைக்
கடந்து
வந்தேன்”””””
என்கிறார் அனுமார்
அனுமார் சீதையைப்
பற்றி சொல்லும் போதும்
இராமரைப் பற்றி
சொல்லும் போதும்
உயர்வாகப் பேசுகிறார்
ஆனால்
வீரத்தின் விளை
நிலமாக இருக்கும்
வாக்கு வன்மையில்
சிறந்து விளங்கும்
ஆற்றலுக்கு
அணிகலனாய் இருக்கும்
தன்னைப் பற்றி
சொல்லும் போது
தன்னை தாழ்த்தி
சொல்கிறார் அனுமார்
உயர்ந்தவர்கள்
எப்போதும்
பிறரை உயர்த்தியும்
தன்னை தாழ்த்தியும்
சொல்வார்கள்
என்பதை
அனுமார் வாக்கில்
சொல்ல வைத்த
கவிச்சக்கரவர்த்தி
கம்பர்
போற்றுதலுக்குரியவர்
கம்ப இராமாயணத்தை
ஒரு மத நூலாக
பார்த்தால்
கம்பனின்
கவித்திறம் தெரியாது
கம்பனின்
கவித்திறத்தை பார்த்தால்
கம்ப இராமாயணம்
ஒரு மத நூலாக
தெரியாது
இப்படியும்
தமிழை வளர்க்கலாம்
என்பதை
இந்த உலகத்திற்கே
கற்றுக் கொடுத்த
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்.
----------இன்னும்
வரும்
//////////////////////////////////////////////